Headlines

கொட்டகலையில் பாரிய விபத்து




திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *