Headlines

யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய விதி

பாடசாலை விடுமுறையில் குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வருவதை முன்னிட்டு யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார். வன விலங்கு மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் அவர்களின் சங்கத்திடமும் கலந்துரையாடி இந்த நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக எனவே சபாரி ஜீப் வண்டிகள் இந்த மாதம் 10…

Read More

முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என்று அழைத்த ஆசிரியை சஸ்பெண்டு

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12). சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பின்னர் படத்தில் வந்த காமெடி காட்சிகளை நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்றார்….

Read More

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…

Read More

வெலேசுதாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பல கோணங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து, பண மோசடி குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா உட்பட எட்டுப் பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிளபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதோடு,அதுவரையில் 14நாட்களுக்கு ஒருதரம் நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில்…

Read More

சமூக சேவைகள் தினம் இன்று அம்பாறையில்!

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம், போதை பொருள் பாவனை தவிர்த்தல் மற்றும்  உலக சமூக சேவைகள் தினம் கொண்டாடும் நிகழ்வு இன்று (04), அம்பாறை தீகவாபிய வைத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சமூக வலுவூட்டல் மற்றும் நலனோன்புகை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் தலைமையில் அமைச்சின் செயலாளர் மஹிந்த செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் ரிட்லி ஜயசிங்க ஆகியோரின் பங்களிப்பில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Read More

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியாரிடம்!

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக…

Read More

சம்மாந்துறை பிரதேசத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவோம்: அமீர் அலி

சம்மாந்துறை மத்திய குழுவானது எதிர்காலத்தில் இந்தப்பிரதேத்தின் பிரச்சினைகள் இனங்கண்டு அதனை தீர்க்கின்ற வகையில் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டும் என பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அ.இ.ம.காங்கிஸின் பிரதித்தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெமீல் அவர்களின் தலைமையில் நேற்று (3) இரவு சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் உட்கட்டமைப்பு சம்மந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர்…

Read More

தூங்கிக் கிடந்தவர்களை தட்டியெழுப்பி ஓடித்திரியவைத்துள்ளோம் – அமைச்சர் றிஷாத்

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…

Read More

சவூதியை கடுமையாக சாடிய ட்ரம்ப்

அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் குடி­ய­ரசுக் கட்சி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட குடி­ய­ரசு கட்சி சார்பில் ஆத­ரவு திரட்டி வரும் டொனால்ட் ட்ரம்ப், அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் வெளி­யு­றவுக் கொள்­கையை விமர்­சித்து வரு­கிறார். விஸ்­கான்சின் மாநி­லத்தில் ஆத­ரவு திரட்­டிய ட்ரம்ப், முன்னர் செய்த குறை­பா­டு­க­ளுக்கு அவர்கள் (நேட்டோ அமைப்பில் அமைந்­துள்ள நாடுகள்) வருந்த வேண்டும், இல்­லா­விட்டால் நேட்டோ அமைப்­பையே கலைத்­து­விட வேண்டுமென கூறினார். இதேபோல், சவூதி அரே­பி­யாவின் பாது­காப்பை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம், நாம் கவ­னித்துக் கொண்­டி­ருக்­கிறோம் என்­பதால்…

Read More

இன்று முதல் சி.சி.டி.வி கெமராக்கள் அமுல்

105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று (4) முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.

Read More

நட்ட ஈடு கோரும் சீன நிறுவனம்

கொழும்புத் துறைமுக நகர வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பது தாமதமாவதால், அதற்கான நட்டஈட்டுத் தொகைச் செலுத்துமாறு, இவ்வேலைத்திட்டத்தை மேற்கொள்ளும் சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. தற்போதைய புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மேற்படி துறைமுக நகரத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இத்திட்டம் தொடர்பில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, இத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால், குறித்த சீன…

Read More