Headlines

நீரோடையில் முதலை மடக்கிப்பிடிப்பு.!




மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 06 ஆம் குறிச்சி டீன் வீதியிலுள்ள நீரோடை ஒன்றில் இருந்து சுமார் 3அடி சிறிய முதலை பொதுமக்களால் நேற்று இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலையை மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை காத்தான்குடியில் இருந்து எடுத்துச் சென்றுள்ளனர்.

மேற்படி  முதலை தொடர்பில் மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி என்.சுரேஷ்குமாரிடம் வினவிய போது, காத்தான்குடியில் நேற்று இரவு பிடிக்கப்பட்ட 3அடி சிறிய முதலை மட்டக்களப்பு வாவியில் இருந்து வந்திருப்பதாலும், மக்களுக்கு ஆபத்து விளைவிக்கின்ற பெரிய முதலை இல்லை என்பதாலும் மட்டக்களப்பு வாவிக்குள் இம்முதலையை விட்டதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *