Headlines

மயானமாக இருந்த மத்தள விமானநிலையம் இயங்கப்போகின்றது

சீனாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட விஜயமானது  வெளிப்படைத்தன்மை மற்றும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான  நோக்கமாக  அமைந்திருந்தது என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அரசியல் மயானத்திற்குள் தள்ளிவிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையத்தை இயங்கச் செய்வதற்கும் இவ்விஜயம் உந்து சக்தியாக அமைந்தது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். வெலிஓயாவில்  நடைபெற்ற “இசுறுபுர” கிராம வீடமைப்பு திட்டத்தை மக்களுக்கு கையளிக்கும்   நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ…

Read More

அரசியல்வாதிகள் எனது கடமைகளில் தலையிட்டனர்

பொலிஸ் மா அதி­ப­ராக நான் கடந்த 2011 ஆம் ஆண்டு கட­மை­களை பொறுப்­பேற்­ற­தி­லி­ருந்து ஓய்வுபெறும் வரை எனக்கு பல அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. பல அர­சி­யல்­வா­திகள் கட­மையின் போது தலை­யீ­டு­களை செய்­தனர் என்று நேற்று ஓய்வு பெற்ற பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­ககோன் தெரி­வித்தார். அர­சியல் தலை­யீ­டு­களை நான் தைரி­யத்­துடன் எதிர்­கொண்டேன். எனினும் சட்­டத்­துக்கு அப்பால் சென்று செயற்­பட மறுத்தேன். இதனால் பல சவால்­களை எதிர்­கொள்ள நேர்ந்­தது எனவும் அவர் மேலும் தெரி­வித்தார். கடந்த ஒரு வரு­டத்­துக்கு முன்­ன­ரான…

Read More

பொரு­ளா­தாரத் தடை விதிக்கும் பட்­டி­யலில் இலங்கை

மனித வியா­பாரம் கார­ண­மாக பொரு­ளா­தாரத் தடை­வி­திக்கும் பட்­டி­யலில் இலங்கை இடம் பெற்­றுள்­ளது. கடந்த அர­சாங்கம் இது தொடர்­பாக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் இருந்­துள்­ளது என வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார். மனித வியா­பா­ரத்­துக்கு எதி­ராக செயற்­படும் மத்­திய நிலையம் ஒன்றை நேற்று முன்­தினம் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் திறந்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு வியா­பாரம் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் என்­ப­துடன் சட்­ட­வி­ரோத செய­லாகும் என…

Read More

கிரேனிலிருந்து மதில் மீது வீழ்ந்த விமானம்

கிரேன் (பாரம்தூக்கி) ஒன்றில் இணைக்கப்பட்டு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பாரிய விமானமொன்று தரையிலிருந்த மதில் ஒன்றின் மீது வீழ்ந்த சம்பவம் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானத்தை ஹைதராபாத் நகரிலுள்ள பழைய பேகம்பேட் விமான நிலையத்திலிருந்து, எயார் இந்தியா நிறுவனத்தின் பயிற்சி நிலையமொன்றுக்கு தரை வழியாக கொண்டுசெல்லத் தீர்மானிக்கப்பட்டது. எயார்பஸ் ஏ 320 ரகத்தைச் சேர்ந்த சுமார் 70 தொன் எடையுள்ள இந்த விமானமானது கிரேன்…

Read More

மலேரியாவை பரப்ப இந்தியா சதி : மருத்துவ அதிகாரிகள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

Read More

காக்கைதீவு கடற்கரைப்பூங்கா திறந்து வைப்பு

கொழும்பு வடக்கில்  275 மில்லியன் ரூபா செலவில் மீள்நிர்மாணிக்கப்பட்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா கடந்த சனிக்கிழமை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பூங்கா, 24 கடைகள் மற்றும் ரெஸ்டுரட் வசதிகளையும் கொண்டமைந்த இக் கடற்கரைப்பூங்கா வெளிநாட்டு…

Read More

தொடர்ச்சியாக எட்டு வாகனங்களை முட்டித்தள்ளிய பஸ்!

அவிசாவளையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று எட்டு வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பஸ்சில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லொறிகள், கார், முச்சக்கர வண்டி மற்றும் வேன் போன்ற வாகனங்களுடன் தொடர்ச்சியாக மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த விபத்தின் காரணமாக கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த மூவர் சிகிச்சைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்…

Read More

சிறிதுகாலம் பொறுத்திருங்கள் – ரவி கருணாநாயக்க

நல்லாட்சியை  வழங்கிய மக்கள் இன்னும் சிறிது காலம் பொறுத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த  வசந்த காலம் வரும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 7.5 ஹெடேயர் பரப்பளவைக் கொண்ட காக்கைதீவு கடற்கரைப்பூங்கா, 275 மில்லியன் ரூபா செலவில் மீள் நிர்மாணிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கபட்டது. இதனை அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவி கருணாநாயக்க மற்றும் கொழும்பு மாநகர சபை முதல்வர் முஸம்மில் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன்போது பேசுகையிலேயே நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க மேற்கண்டவாறு…

Read More

இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது – அமீர் அலி

– வாழைச்சேனை நிருபர் – இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது, இந்தப் பயிற்சியினை பெறும் மாணவர்கள் உயர்ந்த இலக்கினைக்கொண்டு செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும்.என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி  தெரிவித்தார். நேற்று (10) மாலை மீராவோடை சைபுல்லாஹ் தற்காப்புக் கலைக் கழகத்தின் காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தப்பிரதேசத்தின் ஆண் மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டு போதைவஸ்துப்பாவனைக்கு…

Read More

றிஷாத் பதியுதீனை குறிவைக்கும் இனவாத இயக்கங்கள்

மஹிந்த அரசாங்கத்தைவிட்டு றிஷாத் பதியுதீன் வெளியேறியதனாலேயே பொதுபலா சேனா போன்ற இயக்கங்கள் அவரைத் தொடர்ச்சியாகத் தாக்கி வருகின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் அமைச்சர் றிசாத் இருந்திருந்தால், அவரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு வடக்கு, கிழக்கு பிரதான சங்க சபா தலைவர் சியம்பலாகஸ்வெவ விமலசார தேரர் கூறினார். வவுனியா மகா போதியில் தேரரின் தலைமையிலான பௌத்த தூதுக் குழுவினரை, அமைச்சர் றிசாத் சந்தித்து கலந்துரையாடியபோது அவர் இவ்வாறு கூறினார். இந்த சந்திப்பின்போது வவுனியா, உளுக்குளம் ஸ்ரீ சுமணராப்பதி, சுமணதிஸ்ஸ…

Read More

பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வேண்டுகோள்

– எம்.ஐ.அப்துல் நஸார் – வெப்பாமான காலநிலை காரணமாக பிரத்தியேக வகுப்புக்களை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு புதிய காத்தான்குடி சிவில் பாதுகாப்புக் குழு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 167B புதிய காத்தான்குடி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவரும் சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஏ.எல்.முனீர் அஹமட் மற்றும் அதன் செயலாளர் திருமதி சில்மியா அன்சார் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டு 09.04.2016 திகதியிட்டு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலமே இவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது….

Read More

ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட் செய்த பெண் சஸ்பெண்ட்

இங்கிலாந்து ஹிட்லருக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்கள் தொழிலாளர் கவுன்சிலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் லூடன் பகுதி கவுன்சிலர் ஆய்செகல் குர்பஸ் என்பவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் ஹிட்லர் வரலாற்றில் சிறந்த மனிதர் என்று கருத்து பதிவு செய்திருந்தார். அதேபோல், உலக வரைபடத்தில் இருந்து ஈராக் நாட்டை துடைத்து எரிய ஈரான் நாட்டால் அணு ஆயுதங்களை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்திற்கு ஆதரவும் தெரிவித்திருந்தார். குர்பஸ், லூடனின் மிகவும் இளம் கவுன்சிலர். மேலும்,…

Read More