Headlines

மட்டுநகரில் உணவகங்கள் சுற்றிவளைப்பு!

– ஜவ்பர்கான் – தமிழ் – சிங்கள புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு நகரில் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் உணவு தயாரித்த உணவகங்கள், சிற்றுண்டிசாலைகள் பொலிஸாரின் உதவியுடன் சுகாதார அதிகாரிகளினால் இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டன. மட்டக்களப்பு வைத்தியசாலை வீதி உட்பட பல வீதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இடங்களை வைத்திருந்த மற்றும் உணவுப்பொருட்களை தயாரித்த 5 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத்தாக்கல செய்யப்பட்டுள்ளதாக பொது…

Read More

உலக வங்கியின் மாநாட்டில் நிதியமைச்சர்!

– பா.ருத்ரகுமார் – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நிதியமைச்சர் ரவி கருனாநாயக்க நாளை ஐக்கிய அமெரிக்காவிற்கு செல்லவுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. ஐக்கிய அமரிக்காவின் வொஷிங்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள குறித்த மாநாடு இம்மாதம் 17 ஆம் திகதி வரை நடைபெறும். இம்மாநாட்டுக்கு உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 187 நாடுகளின் நிதியமைச்சர்களும் நிதித்துறை தலைவர்களும் பங்குபற்றுகின்றனர்.

Read More

மலேரியா நோய் தொடர்பில் துரித நடவடிக்கை

மலேரியா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்றைய தினம் (11) நுவரெலியாவில்அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்த நோய் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பாக விசேட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக மலேரியா ஒழிப்பு பிரிவின் வைத்தியர் எச்.டபிள்யூ.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய தினம் நுவரெலியாவில் அடையாளம் காணப்பட்ட இந்தியப் பிரஜையான மலேரியா நோயாளியுடன் சேர்த்து இதுவரை இலங்கையில் 16 மலேரியா நோயாளிகள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கைக்குள்…

Read More

மதுபோதையில் ஓடினால் இனிமேல் ஓட முடியாது

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில், மது போதையில் வாகனம் செலுத்துத்துவோரின் வாகன அனுமதிப்பத்திரத்தை மீண்டும் கையளிக்கப்போவதில்லை என்றும், நேற்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு தொடர்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். ‘இதற்கு முன்னரும், மது போதையில் வாகனம் செலுத்தியவர்களின் வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு தற்காலிக அனுமதிப்பத்திரமொன்றை வழங்கி வந்தோம். ஆனால், நேற்று முதல், அந்த நடைமுறையை அமுலில் இருக்காது….

Read More

மீண்டும் மாணவர்களுக்கு சீருடைகள்.!

கஷ்ட, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் தூர கிராம பாடசாலைகளின் மாணவர்களுக்கு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வியமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட விசேட சுற்று நிருபத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பின்தங்கிய பாடசாலை மாணவர்களின் நலன்கருதியும், தரமான சீருடைகளை வழங்கும் நோக்குடனும் இவ்வருடத்தின் நடுப்பகுதியில் மேலதிகமாக சீருடைகள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 4,471 பாடசாலைகளுக்கு குறித்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகளில் பகிர்ந்தளிக்கப்பட்ட சீருடைகளில் தரமற்ற புடவைகளுக்கு பதிலாக மாற்றீட்டு…

Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் கசிவு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மின் வழங்கலில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள குழாய் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் மின்வழங்கலில் தடை எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மின்…

Read More

சிறைக்கைதிகளுக்கு புத்தாண்டு பரிசு

புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள சிறைக்கைதிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. புதுவருட தினத்தில் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகளை கைதிகள் உண்பதற்கு வாய்ப்பளித்த சிறைச்சாலை திணைக்களம் மேலும் ஒரு வாய்ப்பையும் வழங்கியுள்ளது. கைதிகளைப் பார்வையிட வரும் உறவினர்களின் எண்ணிக்கையில் இருந்த மட்டுப்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் தளர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 13ஆம், 14ஆம் திகதிகளில் இந்த விடயம் அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

மான் இறைச்சி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக மான் இறைச்சியை வைத்திருந்தவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (11) அனுராதபுரம் பிரதேசத்தில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம்-கம்பரிகஸ்வல பிரதேசத்தில் கஞ்சா செய்கை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்காகசென்ற பொலிஸாரே குறித்த நபரை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் மான் இறைச்சி வைத்திருந்த நபரை கைது செய்த பொலிஸார் இவரிடம் இருந்து 10 கிலோகிராம் மான் இறைச்சியையும் பறிமுதல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

Read More

விலை அதி­க­மாக விற்­­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை

வரு­டப்­பி­றப்பு காலங்­களில் பொருட்களின் விலை அதி­க­ரித்து விற்­கப்­படும் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என அமைச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கை­யில், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறு­வ­ன­மாக பேசப்­பட்ட நிறு­வ­னத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்­ததன் பின்னர் குறு­கிய காலத்தில் அதனை லாப­மீட்டும் நிறு­வ­ன­மாக மாற்­றி­யுள்ளோம். சதொச நிறு­வ­னத்தின் தலைவர் உட்­பட அமைச்சின் செய­லா­ளர்கள் சதோச நிறு­வ­னத்தின் அதி­கா­ரி­களின் பூரண ஒத்­து­ழைப்­போடு இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. அது மாத்­தி­ர­மின்றி அரசாங்­கத்தின் நிதி­யின்றி முழு­மை­யாக இந் நிறு­வ­னத்தின்…

Read More

“குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்”

கொழும்பை அழ­கு­ப­டுத்தும் நோக்கில் அங்குள்ள குப்­பை­களை ரயில் மூலம் எடுத்து வந்­து­ புத்­த­ளத்­தில் ­கொட்­டு­வ­தற்கு நாம் ஒரு­போதும் அனு­ம­திக்க மாட்டோம் என வடமேல் மாகாண சபை உறுப்­பினர் எஸ்.எச்.எம். நியாஸ் தெரி­வித்தார். வடமேல் மாகாண சபையின் மாதாந்த அமர்வு அண்மையில் இடம்­பெற்ற போது தனி­நபர் பிரே­ர­ணை­யொன்றை சமர்ப்­பித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது 2014ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் கொழும்­பி­லுள்ள குப்­பை­களை பிரத்­தி­யே­க­மாக ரயில் மூலம்…

Read More

கிரிக்கட் தெரிவுக் குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரிய

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவுக்குழுவின் புதிய தலைவராக சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் மே மாதம் 01ஆம் திகதியிலிருந்து அவரது பணிகளை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி. சில்வாவுக்கு ஆலோசகர் பதவியோன்று வழங்க கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை, இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த கிரிக்கட் நிறுவன தலைவர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், குசல் ஜனித் பெரேராவுக்கு 4 வருடங்கள்…

Read More

பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்

பதில் பொலிஸ் மா அதிபராக முதன்மை டிஐஜி எஸ்.எம் விக்கிரமசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். என்.கே. இலங்­ககோன் நேற்று (11) ஓய்வு பெற்றதை தொடர்ந்தே  பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம் விக்கிரமசிங்க  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More