Headlines

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் மின் கசிவு




நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்றாவது கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் மின் வழங்கலில் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள குழாய் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவே இந்த நெருக்கடி நிலைக்கு காரணம் என இலங்கை மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும் மின்வழங்கலில் தடை எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மின் பொறியியலாளர்கள் தற்போது முன்னெடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *