Headlines

பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் விசாரணை

முன்னாள் மேல் மாகாண   முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடம் நிதி குற்ற விசாரணை பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காணி விவகாரம் தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. vk

Read More

கல்முனை சாஹிராக் கல்லுாாி; கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா்

அஸ்ரப் ஏ சமத் கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் வருடாந்த இப்தாா் வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் கோட்டலில் இச் சங்கத்தின் தலைவா் டொக்டா் சனுாஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வுக்கு கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம் துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா். கல்லுாாியின் 80 திட்டங்கள் அடங்கிய 2020 எதிா்காலத்திட்டம் பொறியியலாளா் எம்.சி.எம் பாருக் செயலாளா் தௌபீக் கான் ஆகியோரினால் கல்லுாாி அதிபா் பதுா்த்தீனிடம் கையளிக்கப்பட்டது.

Read More

மகிந்த தேர்தலுக்கு வருவது பொருத்தமற்றது; நீதி அமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த அரசியலுக்கு மீண்டும் வருவது பொருத்தமற்றது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ச தெரிவித்தார். மேலும், நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தான் போட்டியிட உள்ளதாகவும், புதிய அரசை அமைப்போம் என்றும் முன்னாள் ஜனாதிபதி  சூழுரைத்துள்ளார். அவரின் அறிவிப்புத் தொடர்பிலேயே நீதி  அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஒருவர் மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிட்ட சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் இதுவரைகாலமும் இடம்பெறவில்லை. மீண்டும் பொதுத் தேர்தலொன்றில் போட்டியிடுவதென்பது ஜனாதிபதி…

Read More

க.பொ.த உயர்தரத்திற்கு புதிய அட்டவணை; 309,069 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தயார்

ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 90 ஆயிரத்து 69 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார். பாடசாலையினூடாக 2 இலட்சத்து 36ஆயிரத்து 72 பேரும் தனிப்பட்ட ரீதியில் 72 ஆயிரத்து 997 பேரும் தோற்றவுள்ளனர். கடந்த வருடத்தை விடவும் இம்முறை சுமார் 12 ஆயிரம் பரீட்சார்த்திகள் அதிகமாக தோற்றவுள்ளனர் என்றும் பரீட்சைக்காக  2 ஆயிரத்து 180 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை,…

Read More

இஸ்லாத்தை பற்றி ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

அண்மையில் இஸ்லாத்தை பற்றி உலகில் முன்னணி ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித் பேட்டி ஒன்றில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் “சமீபத்தில் நான் இந்தியாவிற்கு சென்றிருந்தேன். அங்கு, ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலுகைக்காக பாங்கு சத்தம் ஒலிக்கும் போதெல்லாம் என்னுடைய படுக்கையில் அமர்ந்து நான் யோசித்து கொண்டே இருந்தேன். ஆனால், ஒரு விசயம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. தன்னை படைத்த இறைவனுக்காக ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழும் இவர்கள் உண்மையிலயே சிறந்தவர்கள்.”

Read More

ஹிஜாபுடன் சாதிக்கும் வீர முஸ்லிம் கண்மணிகள் (புகைப்படத் தொகுப்பு)

மரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே…

Read More

அமெரிக்க சிறந்த ஆடை தேர்வில் முஸ்லிம் பெண் முதலிடம்!

ஹிஜாபை வெறுத்து அரைகுறையை ஆடையை ரசித்து ருசித்து பார்க்கும் கலியுகத்தில் ஓர் ஆச்சர்யம்..! மாஷா அல்லாஹ்! பலஸ்தீனத்தை பூர்வீகமாக கொண்ட அஃப்ரார் ஸஹின் என்னும் மாணவிக்கு சிறந்த ஆடை அணிந்த பெண் எனும் கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல்லின நாட்டு, பல்லின மதங்களை சேர்ந்த 1000 கணக்கான மாணவிகள் கல்வி கற்கும் Clifton high school ல் நடந்த சிறந்த ஆடை அணியும் தேர்வில்தான் அஃப்ரார் ஸஹின் எனும் பலஸ்தீன மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். “ஹிஜாபை…

Read More

இதுதான் வளைகுடா வாழ்க்கை! (கவிதை)

நீங்கள் பஞ்சு மெத்தையில் படுக்கவேண்டும் . என்பதற்காக, நான் பாலைவனத்தில் படுக்குறேன் .. நீங்கள் குளிரும் மின்காற்றில் படுக்கவேன்டும் என்பதற்காக நான் அனல் காற்றில் படுக்குறேன் . உங்களின் நினைவுகள் என் கனவுகள். என் தோல்கள் மிரத்துப் போகுறது என் பாதங்கள் பிளந்து போகிறது. என் தலைமுறை வளர வேண்டும் என்பதற்காக… வெந்நீரால் என் வயதுடன் என் முடிகூட உதிர்ந்து போகிறது. – தமீம் –

Read More

மஹிந்தவின் முடிவு தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தும்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் தேர்தலில் போட்டியிட எடுத்திருக்கும் தீர்மானம் தேர்தல் களத்தை உற்சாகப்படுத்தியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி விமர்சித்துள்ளது. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடனான வெற்றியை இலகுவில் பெற்றுத்தருமென்றும் ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். பல்வேறு ஊழல் மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை தம்வசம் வைத்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருக்கு ஆதரவு வழங்கும் உறுப்பினர்களை மக்கள் நிராகரிப்பது…

Read More

இறந்தபோன தாத்தாவுடன் செல்பி; மதீனாவில்

கேமரா மூலம் தன்னைத்தானே போட்டோ எடுத்துக்கொள்வதுதான் ‘செல்பி’ (Selfie) எனப்படுகிறது. பெரும்பாலும் டிஜிட்டல் கேமரா அல்லது கேமரா உள்ள மொபைல் போன்கள் மூலம் ‘செல்பி’ எடுக்கப்படுகிறது. இன்றைக்கு ‘செல்பி’ ஒரு தொற்று நோய் போல எல்லா இடங்களிலும் பரவிவிட்டது. அதிலும் குறிப்பாக இளம் வயதினரிடையே அது ஒரு ‘டிஜிடல் புற்று நோய்’ போல விரைந்து பரவுகிறது. ஸ்மார்ட் போன்கள் செல்பி ஆசைக்கு எண்ணை வார்க்கிறது, சமூக வலைத்தளங்கள் அதைப் பற்ற வைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் கண் சிமிட்டும்…

Read More

பலசேனா நாக பாம்பு தலைதூக்காமலிருக்க, முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் – விஜித்த தேரர்

நாட்டிலுள்ள முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாகவும் ஏனைய கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிடுவதைவிட, ஒன்றுபட்டு ஒரே அணியில் போட்டியிடுவதன் மூலம் பலமான சக்தியாக உருவெடுப்பதுடன் பொதுபல சேனாவையும் எதிர்கொள்ள முடியுமென வட்டரக்க விஜித்த தேரர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பில் எதிர்வரும் 6 ஆம் திகதிக்கு முன்னர் உலமா சபை, முஸ்லிம் அரசியல்வாதிகளுடனும் கலந்துரையாட உள்ளேன். சிறுபான்மையினரை சீண்ட பொதுபல சேனா இப்போது நாகப்பாம்பு வடிவத்தில் உருவேடுத்துள்ளது. இந்த விசம் நிறைந்த பாம்பு தலைது!க்காமலிருக்க வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More

குயின்ஸ்லாந்தில் முஸ்லிம் மாணவர்களின் போராட்டம்!

கல்லூரியில் தொழுகைக்கு அனுமதி மறுத்ததால் கொட்டும் மழையில் கல்லூரி வளாகத்தில் தொழுகையை நிறை வேற்றும் குயீன்ஸ்லாந்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள்.. இவர்களின் இந்த நியாயமான கோரிக்கை நிறை வேற நாமும் பிரார்த்திப்போம். இந்த மாதம் நவம்பர் 1 ம் தேதியிலிருந்து இவர்கள் வெட்ட வெளியில் தொழுகிறார்கள்.

Read More