Headlines

ஹிஜாபுடன் சாதிக்கும் வீர முஸ்லிம் கண்மணிகள் (புகைப்படத் தொகுப்பு)




மரப்பட்டைகளை அணிந்து, பட்டாடைகளை அணிந்து பண்பாட்டில்(Culture) வளர்ந்தது மானுடம். நாகரிகம் (Civilization) என்ற பெயரில், பெண்கள் தங்களின் ஆடைகளைக் குறைத்து வெளியிடங்களில் திரிவதால் முகம் சுளிக்கிற நிலையும் தேவையற்ற பிரச்சனைகளும் எழுவதை அன்றாட செய்திகளாய், ஊடகங்களில் காண முடிகிறது. ‘ஆள்பாதி, ஆடைபாதி’ என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பலப்பல. கல்லூரிகளில், கடைத்தெருக்களில் காணப்படும் பெண்களை கேலி கிண்டல் செய்யும் அநாகரிப் போக்கும் வன்முறையே. இதனைத் தவிர்க்கும் வகையில் ஆண், பெண்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவே முஸ்லிம் பெண்களின் ஹிஜாப். இதைக் கடைப்பிடிக்கும் பெண்கள் கண்ணியத்திற் குரியவராகிறார்கள். இக்கலாச்சாரம் மேலைநாடுகளிலும் வேரூன்றி வருகின்றது. இதனால் ஈவ்டீஸிங்கிலிருந்து விடுபடலாம்.

(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (குர்ஆன் -24:30)
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (குர்ஆன் -24:31)

இந்த இறைவசனங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் மிக உன்னதமான ஒழுக்க நெறிகளை வகுத்துத் தருகின்றன. ஹிஜாபை அணிவது இன்றைய நவநாகரிக உலகில் அவசியமற்றது என்பவர்களுக்கும் வாகனங்களில் பயணம் செய்கிறபோது தடையாக இருக்கிறது என்பவர்களுக்கும் தோஹாவில் நடைபெற்ற 15-வது ஆசிய விளையாட்டுப் போட்டியைச் சுட்டலாம்.

2006 டிசம்பர் 11 அன்று 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 23.19 விநாடிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்மணி ருக்கையா அல்-கஸரா. இதில் என்ன அதிசயம் எனில், இஸ்லாமியப் பாரம்பரிய உடையான ஹிஜாப் அணிந்து, ஓட்டப்ப பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதுதான். அவரை மொய்த்த ஊடகங்களுக்கு அவர் அளித்த பதில்:
‘பாரம்பரியமான இஸ்லாமிய உடை என் ஓட்டத்தைத் தடை செய்யவில்லை. ஓட்டத்திற்கு உடை ஒரு தடை என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இஸ்லாமிய உடை என்னை ஊக்கப்படுத்தியது; உற்சாகப்படுத்தியது. பஹ்ரைனில் என்னை யாரும் இந்த உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானாகத்தான் வெள்ளை நிற ஹிஜாபைத் தேர்வு செய்து ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டேன். ’
இஸ்லாமிய உடைகளைச் சுமையாகக் கருதுகிற இஸ்லாமியப் பெண்கள் என்றில்லாமல் அனைத்து மதப் பெண்களுக்கும் இது ஒரு சவுக்கடி. இஸ்லாம் ஒழுங்குபடுத்தியுள்ள உடை பெண்களின் எத்தகைய நியாயமான முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதில்லை என்பதற்கு பள்ளப்பட்டி உஸ்வத்துன் ஹஸனா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டே ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கின்றனர் என்பது சான்று.

முக்காடு போடுவதும், முகத்தை மறைப்பதும், மூளையை மறைப்பதாகக் கருத இயலாது. அந்நிய ஆடவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, இஸ்லாம் வகுத்த இந்தப் பழக்கம் உண்மையில் பாராட்டுக்குரியது. இஸ்லாம் மதத்தின் மீது இருக்கிற மதிப்பையும் மரியாதையையும் விட கூடுதலான மதிப்பும் மரியாதையும் ஹிஜாபையும், புர்காவையும் அணிகிற பெண்களின் மீது ஏற்படுகிறது. எனவே, ஹிஜாப் அணிகிற இந்த நடைமுறையை அனைத்து மதத்தைச் சேர்ந்த பெண்களும் ஆண்களும் கடைபிடிக்கலாம் என்றும் தோன்றுகிறது.

9

8

7

6

5 4 3

2 1 wpid-screenshot_2015-06-30-21-58-57-1 wpid-11411634_989356577751046_8069032042865994635_o wpid-11261639_989356261084411_6474632032585650681_n 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *