Headlines

அரசு எமக்கு கிடைத்ததே தவிர அரசாங்கம் கிடைக்கவில்லை : ராஜித

ஜனவரி 8ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்த சந்தர்ப்பத்தில் எமக்கு அரசு கிடைத்தபோதும், அதனை இராச்சியம் செய்யும்  அரசாங்கம் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், ‘பசில் ராஜபக்ச கைது…

Read More

“நாட்டின் தேசிய பாதுகாப்பில், விழிப்புடன் செயற்படும் இராணுவம்”

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு  குந்தகம் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து விழிப்புடன் செயற்பட்டுவருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இராமேஸ்வரம் தனுஷ்கோடி கடலோரப் பகுதிக்கு அருகாமையில் உச்சிப்புளி பஸ் நிலையத்திற்கு அருகாமையில் 75 சயனைட் குப்பிகள், 7 கைத்தொலைபேசிகள், 300 கிராம் சயனைட் பவுடர் உட்பட மேலும் பல பொருட்களுடன் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை பொலிஸார் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்தனர். இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவ ஊடகப்பேச்சாளர்…

Read More

பஞ்சமா பாவங்களை செய்துள்ளார் மஹிந்த : அசாத் சாலி

பௌத்த மதத்தில் செய்யக்கூடாதென கூறப்பட்டுள்ள ஐந்து மகா பாவங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்துள்ளதாக மத்திய மகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளை, களவு, காமம், தெய்வ நிந்தனை என அனைத்து பாவங்களையும் இவர் செய்துள்ளதாக குறிப்பிட்ட அசாத் சாலி, மக்கள் இதனை நன்கு அறிவர் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், ஒரு ஜனாதிபதியாக பதவி வகித்த மகிந்த தற்போது நாடாளுமன்ற தேர்தலில்…

Read More

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாத்தை‬ ‪விமர்சிப்போருக்கும்‬,‪தவறான‬ ‪ புரிதல்கள்‬‪ கொண்டோருக்குமான‬ ‪பதிவு‬ ‪இது‬! [ ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல) என்றும் மறவாதீர்கள்.] இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான்….

Read More

லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய மிக முக்கிய தகவல்கள் பல இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. லசந்த படுகொலை செய்யப்படும்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்தே இந்தத் தகவல்கள் இரகசியப் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. இந்த நபரிடமிருந்து பெறப்பட்டுள்ள முக்கிய தகவல்களின் அடிப்படையில் இரகசியப் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ள இந்த நபர்…

Read More

றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு

– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…

Read More

ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் 18 இல் உதயமாகும் : மனோ கணேசன்

பிரிவினைவாதம், இனவாதம், மதவாதம் என்பவற்றை வீழ்த்தி உண்மையான ஆசியாவின் ஆச்சரியத்திற்கான பயணம் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அவர், ஆச்சரியத்தை நோக்கிய அந்த பயணத்தில் தாமும் இணைந்து கொண்டமை பெருமைக்குரிய விடயம் என்றும்…

Read More

கட்சிகளின் செயலர்களுக்கு மாத்திரம் பாதுகாப்பு

தேர்தலில் போட்டியிடும் அரசியல்  கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு மாத்திரம் பொலிஸ்  பாதுகாப்பு வழங்குவதற்கு  தேர்தல்கள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். கட்சிகளின் செயலாளர்கள் மற்றும்  குழுக்களின்  தலைவர்களைத் தவிர்த்து  ஏனைய வேட்பாளர்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்க இயலாதெனத் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கட்சிகளின் செயலாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். யாரேனும் வேட்பாளருக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுமானால் அதுபற்றி தேர்தல் அலுவலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் கட்சிகளின் செயலாளர்களுக்குத தெரியப்படுத்தியுள்ளார். இதற்கமைய கட்சிச் செயலாளர் மற்றும்…

Read More

பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்தது கெப்ளர் விண் தொலைநோக்கி

மிகப் பெரிய விண் தொலைநோக்கியான கெப்ளர் பூமி போன்ற புதிய கோளை கண்டுபிடித்ததுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கெப்ளர் விண்கலம் என்பது விண் தொலைநோக்கி ஆகும். கடந்த 2009ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் தற்போது பூமியிலிருந்து 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வருகிறது. கெப்ளர் தொலை நோக்கி  இதுவரை 1028 கிரகங்களையும், 4661 கிரகம் போன்றவற்றையும் கண்டுபிடித்துத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கெப்ளர் தொலைநோக்கி கிட்டத்தட்ட பூமி போலவே உள்ள ஒரு புதிய கோள்ளை கண்டுபிடித்துள்ளது….

Read More

ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க இந்திய உயர் நீதிமன்றம் மறுப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும் அதிகாரம் தமிழக அரசாங்கத்துக்கு இல்லை என்று இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த வருடம் குறித்த ஏழு பேரையும் தமிழக அரசாங்கம் விடுவிக்க உத்தரவிட்டது. எனினும் இதற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் நிறுவப்பட்ட அரசியல் சாசன நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த விடயம்…

Read More

நவாஸ் ஷெரீபை அமெரிக்காவுக்கு அழைத்த ஒபாமா

ராணுவ பலத்தை அதிகரிப்பதை விட்டு, இந்தியாவுடன் அமைதியான உறவை மேற்கொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயன்று வருவதை அவரது சமீபத்திய நடவடிக்கைகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்தியா உள்பட அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவதற்கான கொள்கைகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவுக்கு வருகை தர வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள தகவலின்படி, அக்டோபர்…

Read More

குருநாகல் முஸ்லிம்களின் ஒற்றுமை இந்த தேர்தல் முடிவில் வெளிப்படும் – சாபி

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் சஹாப்தீன் முஹமட் சாபி வைத்திய அதிகாரியாவர். இவர் நீண்ட காலமாக சமூக சேவையில் கால் பதித்து தனக்கென்று ஒரு அடையாளத்தை வகுத்துக் கொண்டவர். இவர் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். இவ பத்திரிகைக்கு வழங்கி செவ்வி நேர்காணல் இக்பால் அலி நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன? நான் ஒரு வைத்திய அதிகாரியாக இருந்து சேவைகள் ஆற்றி வந்துள்ளேன் என்பவற்றுக்கப்பால் அதிகளவு சமூக…

Read More