Headlines

கையால் எழுதப்பட்ட உலகின் பழம்பெரும் குர்ஆன் கண்டுபிடிப்பு

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் முஹம்மது நபி(ஸல்) காலத்தில் கையால் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான குர்ஆனை இங்கிலாந்தில் உள்ள பிரிமிங்கம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ‘ரேடியோகார்பன்’ பரிசோதனைக்கு இந்த குர்ஆனை உட்படுத்திய ஆராய்ச்சியாளர்கள், இது கி.பி. 568 மற்றும் 645-க்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கும் என 95.4 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணித்துள்ளனர்.

Read More

ரசூலுல்லாஹ்வை கேலி செய்யும் விதத்தில் எதையும் வெளியிட மாட்டோம் – சார்லி ஹெப்டோ பகிரங்க அறிவிப்பு!

– சையது அலி பைஜி – சார்லி ஹெப்டோ என்ற பிரான்சை சார்ந்த கேலி சித்திர பத்திரிகை கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் மிக பெரிய கொந்தளிப்புகளை உருவாக்கியது. ஆம், முஸ்லிம்கள் உயிருக்கு உயிராய் மதிக்கும் நபிகள் நாயகத்தை பல்வேறு கால கட்டங்களில் கேலி சித்திரமாக வரைந்து முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடியது. இப்படி முஸ்லிம்களை விமர்ச்சிப்பதையும் நபிகள் நாயகத்தின் ’கேலி சித்திரங்களை வெளியிட்டு முஸ்லிம்களை வெறுப்பு ஏற்றுவதையுமே தொழிலாக கொண்டிருந்து சார்லி ஹெப்டோ தற்போது இனிவரும் காலங்களில் நபிகள்…

Read More

பிரபல கால் பந்து நட்சத்திரம் இமானுவேல் இஸ்லாத்தில் இணைந்தார்

உலகின் மிக சிறந்த கால் பந்து நட்ச்சத்திங்களில் ஒருவர் இமானுவேல். இவர் நைஜிரியாவை சார்ந்தவர். 2008 ஆம் ஆண்டு ஆப்ரிக்க கண்டத்தின் மிக சிறந்த கால் பந்து நட்சதிமாக தேர்வு செய்ய பட்டவர் அவர் 2000 மாவது ஆண்டில் இருந்தே சர்வதேச கால் பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். 63 சர்வதேச போட்டிகளில் கலந்து 29 கோல்கள் அடித்தும் சாதனை படைத்துள்ளார் அண்மை காலங்களில் அவரது சிந்தனை இஸ்லாத்தை நோக்கி திரும்பியது இஸ்லாத்தை பற்றி ஆய்வு செய்த…

Read More

அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் – பிரதமர்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

Read More

கோப் உபகுழுவிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

மத்திய வங்கி பிணை முறியுடன் தொடர்புடைய கோப் உபகுழு அறிக்கையை வெளியிட பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் சபாநாயகரின் பணிப்பில் கோப் உபகுழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் அறிக்கையை சபாநாயகருக்கு கையளிக்கும் முன்னர் பகிரங்கப்படுத்துவது சட்டவிரோத செயல் என்றும் அதற்கு தடை விதிக்குமாறும் கோரி பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க மனு தாக்கல் செய்திருந்தார். அந்த…

Read More

அது கோட்டாவின் காலத்தில் புலிகளிடமிருந்த பெறப்பட்ட வௌ்ளை வேன்

இன்னும் வௌ்ளை வேன்கள் இருக்கலாம் என்றும் அவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் நிர்வகிக்கப்ட்டு வந்ததாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ வீரர்கள் மற்றும் வௌ்ளை வேன் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். இதுதவிர நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியேரை…

Read More

அ.இ.ம.கா வேட்பாளர் சிராஸிக்கு இறக்காமம் மக்கள் பாரிய வரவேற்பு (Photo)

– அகமட் எஸ். முகைடீன் – சமூகத்திற்கான காத்திரமான முன்னெடுப்புக்களை செய்கின்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் இறக்காமம் பிரதேசத்தில் பிரச்சார நடவடிக்கைகளை நேற்று மாலை மேற்கொண்டார். கல்முனை மாநகர முன்னாள் முதல்வராக சிராஸ் மீராசாஹிப் மக்கள் பணியாற்றியபோது அவரிடம் காணப்பட்ட ஆற்றல், சேவை நலம், விவேகம், வேகம் என்பவற்றை…

Read More

பெட்டிகள் மீது கொள்ளும் ஐக்கியத்தை மு.கா. சமூக நலனில் கொள்வதில்லை -ஜெமீல்

-எம்.வை.அமீர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை ஆரம்பித்ததன் நோக்கம், முஸ்லிம் காங்கிரசின் புதிய தலமையினால் புறம்தள்ளப்பட்டு ஒருசிலரின் அபிலாசைகளை நிவர்த்திக்கும் கட்சியாகி கீழ்மட்டத்துக்குச் சென்றுகொண்டிருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்குமாகாண சபை உறுப்பினர்களின் முன்னாள் குழுத்தலைவரும் தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், நடக்கவிருக்கும் பாராளமன்ற தேர்தலின் பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குக் கிடைக்கும் தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையூடாக பாராளமன்றம் செல்வார் என எதிர்பார்க்கப்படுபவருமான எ.எம்….

Read More

பாடசாலை ஆதிபருக்கு விளக்கமறியல்!

கண்டி – கன்னொறுவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை  பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்ற அதிபரையும் ஆசிரியரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். சம்பவத்தில் 51 வயதுடைய அதிபரும் 42 வயதுடைய ஆசிரியருமே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

Read More

அதிகாலை வீதி விபத்தில் கார் சுக்குநூறாகியது!

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் -கொழும்பு பிரதான நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் இருந்து பொத்துவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதி மருங்கில் இருந்த மரம் மற்றும் மின்கம்பத்துடன் மோதுண்டு சுக்குநூறாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயிலும் தனது மகனைப் பார்வையிடுவதற்காக யாழ்ப்பாணம் சென்று சொந்த ஊரான பொத்துவிலுக்குத் திரும்பிக் கொண்டிருந்த…

Read More

தனிப்பட்ட தோ்தல் பிரச்சாரத்துக்கு அரச சொத்துக்களை பாவிக்க விரும்பவில்லை -சஜித்

அஸ்ரப் ஏ சமத் நான் கடமையாற்றம் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜித் பிரேமதாச கபினட் அமைச்சா் அவருக்கு அமைச்சின் சேவைகளை செய்யும் போது அமைச்சில் ஊடகப்பிரிவை பாவிக்க முடியும். அவ்வாறே கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சா்கள் இந்த ஊடகத்தை பாவித்தாா்கள். ஆனால்   தற்பொழுது ஹம்பாந்தோட்டையில் நான் ஒரு பாராளுமன்ற வேட்பாளா். அமைச்சின் ஊடகப் பிரிவு எனக்கு வேண்டாம். நான் அரச சொத்துக்களை எனது தனிப்பட்ட விடயங்களுக்கு பாவிக்க கூடாது. அந்த அமைச்சில் சம்பளம் வாகனங்கள், வதிவிடம்…

Read More