Headlines

இயற்கை அனர்த்தம் தொடர்பில் இன்று விசேட பாரா­ளு­மன்ற அமர்வு

பாரா­ளு­மன்­றத்தின் விசேட அமர்வு இன்று புதன்­கி­ழமை 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நடை­பெ­று­கி­றது. நாட்டில் ஏற்­பட்ட மழை­ வெள் ளம், மண்­ச­ரிவு மற்றும் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை­மைகள் தொடர்­பா­கவே இன்­றைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இடம்­பெ­று­கி­றது. கடந்த வாரம் பாரா­ளு­மன்ற அமர்வின் இறுதி தின­மான 20 ஆம் திகதி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆத­ர­வா­ள­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை தொடர்­பாக விசேட ஒரு…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிஷாத் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

-ஊடகப் பிரிவு   – வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொடிகஹவத்தை மக்கள் தங்கியிருக்கும் கொடிகஹவத்த விமலாராம விகாரை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கும், கொலன்னாவை வித்யவர்தன மஹா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வெள்ள அகதிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று (24/05/2016) நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சருடன் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான ஹுசைன் பைலா, ரியாஸ் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர்.

Read More

நள்ளிரவில் உடைந்த படகில் பயணித்து மல்வானை மக்களை றிஷாத் சந்திப்பு

-நாச்சியாதீவு பர்வீன்- பாதுகாப்பற்ற உடைந்த படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை காந்திவளவ மற்றும் ஆட்டா மாவத்தை மக்களை சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன். கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினாலும்,தொடர்மழையினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மல்வானையும் அடங்கும் மல்வானையில் ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்தை,சக்கீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரினால் சூழப்பட்டிருந்தது.அதிலும் சக்கீனாபுர மற்றும் ஆட்டா மாவத்தை போன்ற பிரதேசங்கள் நூறு விகிதம் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசமாகும். இந்தப்பிரதேசத்திற்கு எந்த…

Read More

இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகள் வரிசையில் துருக்கியும் இணைவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களுக்கு பல உலக நாடுகள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன. மேலும் பல நாடுகள் நிவாரணங்களை வழங்க முன்வந்துள்ளன. இந்த நிலையில் துருக்கியின் செஞ்சிலுவை சங்கம் அவசர உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசின் கோரிக்கைக்கு அமையவே இந்த நிவாரண உதவிகளை வழங்க துருக்கி அரசாங்கமும் முன்வந்துள்ளது. துருக்கியின் மனிதாபிமான அமைப்பாக திகழும் செஞ்சிலுவைச் சங்கமானது இலங்கைக்கு கூடாரங்கள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் துருக்கியின் இந்த உதவிக்கு…

Read More

கொழும்பில் சேதவிபரங்கள் குறித்த கணக்கெடுப்பு ஆரம்பம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் இன்றும் நாளையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்போது வீட்டின் குடியிருப்பாளர்கள் தத்தமது வீடுகளில் தங்கியிருப்பதுடன், இழப்புகள் குறித்த சரியான விபரங்களை கணக்கெடுப்பாளர்களிடம் வழங்குமாறும் கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது சேகரிக்கப்படும் விபரங்களைக்கொண்டே வீடுகளுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளது. எனினும் கொலன்னாவை , வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் இராணுவத்தினர் இன்று சுத்திகரிப்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். இதனை முன்னிட்டு எந்தவொரு குடியிருப்பாளரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப…

Read More

வெள்ளத்தினால் 2 பில்லியன் டொலர் வரை இழப்பு

சிறிலங்காவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால், சுமார் 1.5 தொடக்கம், 2 பில்லியன் டொலர் வரையான இழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருப்பதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தங்களுக்குப் பின்னர், சிறிலங்கா தற்போது இயற்கை அனர்த்தங்களால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்திருப்பதாகவும், 109 பேர் காணாமற்போயுள்ளதாகவும், அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன. மூன்றரை இலட்சம் மக்கள் தமது வீடுகளை விட்டு…

Read More

வெள்ள அகதிகளின் துன்பங்களை நேரில் கண்டறிந்து உடனுக்குடன் உதய அமைச்சர் றிஷாத்!

– ஏ.எஸ்.எம்.ஜாவித்   – கொலொன்னாவை, வெல்லம்பிட்டிய, புத்கமுவ போன்ற பிரதேசங்களில் வாழும் பாதிக்கப்பட்ட உலமாக்களுக்கும், மௌலவிமார்களுக்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்ட உதவிகளை, எமது வாழ்நாளில் நாம் ஒரு போதுமே மறக்க முடியாதென்று மெகொட கொலன்னாவ மௌலவி ரிழ்வான் தெரிவித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் அமைந்திருந்த 27 பள்ளிவாசல்களில், 25 பள்ளிவாசல்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல பள்ளிவாசல்கள் முழுமையாகவும், சில பள்ளிவாசல்கள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோன்று உலமாக்களின் குடும்பங்களும்…

Read More

மல்வானை விஜயம் வீடியோ

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) இரவு மல்வானை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார். மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காந்தியவலவ, ஆட்டாமாவத்த, ரக்‌ஷபான போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர்  கேட்டறிந்தார். இந்த சத்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜி அவர்களும் அமைச்சர் றிஷாதுடன்  விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. Produce_0

Read More

மஹா புத்கமுவ மக்களுக்கு வெள்ள நிவாரணம்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மகா புத்கமுவ பிரதேச மக்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் , அமைச்சருமான  றிசாத் பதியுதீன் நேற்று  (23/05/2016), வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார்.

Read More

அமைச்சர் றிஷாத் நன்றி தெரிவிப்பு!

-சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொழும்பு பிரதேச,  குறிப்பாக வெல்லம்பிட்டிய, கொலொன்னாவை பிரதேச மக்களின் நிவாரணப் பணிகளையும், அவர்களின் இன்னோரன்ன தேவைகளையும் கவனித்து வரும், கொலொன்னாவை மஸ்ஜித் சம்மேளன நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் சார்பிலும் நன்றி தெரிவிப்பதோடு, அவர்களுக்கு தொடர்ந்தும் பணிபுரியக் கூடிய சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிஷாத் நேற்று (23/05/2016) தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட 27 பள்ளிகளின் உலமாக்கள், நிர்வாகிகளுடனான கலந்துரையாடலின்போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

கொலன்னாவை மஸ்ஜிதுல் சம்மேளன தலைவரின் அவசர வேண்டுகோள்!

-சுஐப் எம் காசிம் – வெள்ளத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொலன்னாவைப் பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்காண மக்கள் அகதிகள் முகாம்களிலும் பாடசாலைகளிலும், பன்சலையிலும் தனியார் வீடுகளிலும் தங்கியிருந்து மிகவும் கஷ்டமான நிலையில் வாழ்கின்றனர். உடுத்த உடையைத் தவிர எதையுமே கொண்டுவராத இந்த மக்களுக்கு கடந்த திங்கட்கிழமையிலிருந்து 27 பள்ளவாசல்களை நிர்வகிக்கும் கொலன்னாவை பள்ளி சம்மேளனம் இறைவன் உதவியால் முடிந்தவரையில் உதவி வருகின்றது. முதலாம் நாள் 3000 சாப்பாட்டுப் பார்சல்களை தயாரித்து வழங்கும் வேளைகளை தொடங்கிய நாம் உன்று நாள…

Read More

சீரற்ற காலநிலை – இதுவரை 92 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது பல பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More