Headlines

பேலியகொடையில் ஆர்ப்பாட்டம்

களனி – பியகம வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு வெள்ள நிவாரணத்தை வழங்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

அனர்த்த பாதிப்புக்களை குறைக்க விசேட திட்டம்!

எதிர்கால அனர்த்தங்களின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நீண்டகால வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்துக்கு கடந்த 18 ஆம் திகதி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் உறுதியளித்தார். அத்துடன் இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படாத வகையிலும்,…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

கொலன்னாவை வெல்லம்பிட்டிய பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.. இம் மக்களுக்காக உடன் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக 10ஆயிரம்ரூபா ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேற்று (18)ஆம் திகதி கொலன்னாவையில் வைத்து பகிா்ந்தளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிஙக நிதி அமைச்சா் ரவி கருநாயக்கவும் கலந்து கொண்டனா் இந் நிகழ்வு . பராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்காா் தலைமையில் நடைபெற்றது. இங்கு…

Read More

பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகள் நாளைய தினத்திற்குள் முற்றாக அகற்றப்படும்

கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளத்தினால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை நாளைய தினத்திற்குள் (10) முற்றாக அகற்ற முடியும் என சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. முப்படையினர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உதவியுடன் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வஜிர குமாரதுங்க தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 250 பகுதிகளில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களம், கொலன்னாவை பகுதியின் சில இடங்களில் குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Read More

மஸ்ஜித்களை மையப்படுத்திய நிவாரணங்களை, துரிதப்படுத்த ஜம்மியத்துல் உலமா அழைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க தம்மாலான பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்ற அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா  தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஈருலக நற்பாக்கியங்களை அவர்களுக்கு அருளவேண்டுமெனவும் பிராத்திக்கின்றது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோர் விடயத்தில் ஜம்இய்யா வழமைபோன்று பல்வேறு வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. 2016.05.15ஆம் திகதி நடைபெற்ற நிறைவேற்றுக் குழுக்கூட்டத்தில் அசாதாரண காலநிலையைக் கவனத்திற்கொண்ட ஜம்இய்யா பாவமன்னிப்பு, துஆ, தொழுகைபோன்ற அல்லாஹுதஆலாவின் நெருக்கத்ததைப் பெற்றுத் தரும் நல்லமல்களின்…

Read More

கொழும்பில் 2500 டொன் கழிவுகள் அகற்றப்பட்டன

வெள்ளத்திற்கு பின்னர் கொழும்பு மாவட்டத்தில் காணப்பட்ட 2500 டொன் கழிவுகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளன. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்பாட்டில் இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படை ஆகியன இணைந்து கழிவகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை கொலொன்னாவை, மீதொட்டமுல்ல, கொட்டிகாவத்த முல்லேரியா, வெல்லம்பிட்டிய, கொதடுவ, கொஹிலவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் தொண்டு நிறுவனங்களும் இப்பணிகளில் இணைந்து கொள்ள முடியும் என்று சுகாதார அமைச்சின் அனர்த்த முன்னாயத்த பிரிவு கூறியுள்ளது. அவ்வாறு…

Read More

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து உதவுங்கள்!

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நலனோம்புகை நடவடிக்கைகள் குறித்தும் கண்டறிவதற்கு வாரத்தில் ஒரு முறையேனும் அப்பிரதேசங்களுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாவட்டங்களிலுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். நேற்று (01) முற்பகல் கேகாலை நகர மண்டபத்தில் நடைபெற்ற கேகாலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Read More

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு…

Read More

கொலன்னாவ குப்பைகளை அகற்ற விசேட குழு

அண்மைக்காலத்தில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தையடுத்து கடுமையாக பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேசத்தில் குவிந்து கிடக்கும் அசுத்த கழிவுகளை அகற்றுவதற்கான விசேட பிரிவொன்று நிறுவப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்  அநுர பிரியதர்ஷன் யாப்பா தெரிவித்தார். கொழும்பு, டார்லி வீதியில் அமைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரகட்சி தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள கால்வாய்களை சுத்தப்படுத்துவதற்காகவும் சீரமைப்பதற்காகவும் 141 மில்லியன் ரூபா நிதியை அமைச்சரவை…

Read More

ஆதரித்தவர்களுக்கு மாத்திரம் உதவி – விமல் கண்டுபிடுப்பு

அனர்த்தத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் மக்களை பார்க்கச் சென்றவர்கள் தமது கட்சி ஆதரவாளர்கள் யாரென்று தேடிச்சென்று உதவிகளை வழங்கியமையும் கட்சி சார்ந்து உதவிகளை வழங்கியதையும் பார்க்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கம் தம்மை ஆதரித்த நபர்களுக்கு மட்டுமே உதவிகளை செய்து வருகின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். அரசாங்கம் குறுகிய நோக்கத்தில் செயற்பட்டாலும் நாம் இன மத பேதமின்றி உதவிசெய்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட…

Read More

வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு

களுகங்கை மில்லகந்த பகுதியில் வௌ்ள நிலை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தொடரும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் 13,000 இற்கும் மேற்பட்டோர் 169 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். அத்துடன், மழையுடன் கூடிய வானிலையால் முற்றாக மற்றும் பகுதியளவில் பாதிக்கப்பட்ட வீடுகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றுக்கான இழப்பீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சவூதி சகோதரர்கள் உதவி

-அஸ்பாக் – அல் கிம்மா நிறுவனமானது நாடலாவிய ரீதியில் மேற்கொண்டு வரும் சமூகப்பணிகளின் தொடரில் அன்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான உதவிகளை வழங்கி வருகின்றது. எமது நிறுவனம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகளை அறிந்து கொண்டு தொடர்ந்தும் துரிதமான உதவிகளையும் செய்து வருகிகிறது. அந்த வகையில்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெள்ளம்பிட்டிய கொலன்னாவ மக்களுக்கும் தனது உதவிகளை வழங்கியது சுமார் 300 குடும்பங்களுக்கு உலர்உணவு, பாய், தலையனை உள்ளிட்ட பொருட்களையும் பாடசாலை…

Read More