Headlines

இயல்புநிலைக்குத் திரும்பிய ஆறுகளின் நீர்மட்டம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அசாதாரண காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. களுகங்கையின் மில்லகந்த பிரதேசத்தில் மாத்திரம் தொடர்ந்தும் சற்று வெள்ளப்பெருக்கு காணப்படுகின்றது. இதற்கிடையே மேல் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய இடங்களை வரைபடமாக தயாரிப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த வரைபடத் தகவல் தயாரிப்பில் கடற்படையினரின் உதவியும், கள ஒருங்கிணைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகள், களனி மற்றும் அத்தனகல ஆற்றோரங்கள்…

Read More

நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

மீண்டும் பெய்யும் அடைமழையினால் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையின் சீற்றத்தினால் பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நீலகந்த பிரதேசத்தில் களுகங்கையின் வெள்ள நீர் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் நான்கு அனர்த்த முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே ஜிங் கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் பத்தேகம, தொடங்கொட, உனன்விட்டிய ஆகிய பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய…

Read More

11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமை.!

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த 8 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்படவுள்ளதாக சப்ரகமுவ மாவட்டத்தைச் சேர்ந்த கல்வி அமைச்சர் ஹானு மனுப்பிரிய தெரிவித்துள்ளார். இதனால் 11 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின் காரணமாக நாடு பூராகவுமுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டது. அவ்வாறான பல பாடசாலைகள் இன்று கல்வி நடவடிக்கைளுக்காக திறக்கப்படவுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் தொடர்ந்தும் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் மூடப்பட்ட பாடசாலைகளில்…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, இலவசமாக மின்சாரம்

இலங்கை மின்சார சபையும் தனிநபர் மின் உற்பத்தியாளர்களும் இணைந்து 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க தீர்மானித்துள்ளனர். மின்வலு மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பளாபிட்டியவின் பணிப்பின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள வீடுகளின் சேதங்கள் தொடர்பாக கணிப்பீடுகள் நடைபெற்று வருவதுடன் மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு இலங்கை தனியார் மின் உற்பத்தியாளர் நிறுவனம் 7 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…

Read More

வெள்ளத்தினால் சேதமாகிய ஆவணங்களை வெயிலில் காய்க்க வேண்டாம்

வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்கள் மற்றும் புத்தகங்களை பழைய நிலைக்கு மாற்ற முடியும் என்று தேசிய ஆவணக்காப்பக திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி சரோஜா செத்தசிங்க கூறினார். அந்த பொருட்களை வெயிலில் காய்ப்பது பொருத்தமானதல்ல என்று அவர் கூறியுள்ளார். வெள்ளத்தினால் சேதமாகியுள்ள ஆவணங்களை பழைய நிலைக்கு மாற்றுவது சம்பந்தமாக மேலும் ஆலோசனைகள் தேவையாயின் தேசிய ஆவணக்காப்பக திணைக்களம் உதவத் தயார் என்றும் அவர் கூறினார்.

Read More

அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை

– Mujeeb Ibrahim – அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை… இயக்கச்சண்டைகள், அரசியல் முரண்பாடுகள் என நம்மவர்கள் பிஸியாக இருக்கும் போது… இந்த இடைவெளிக்குள் இஸ்ரேல்காரன்வ ந்து இறங்கியிருக்கிறான். நம்ம தெஹிவளை, கல்கிஸ்ஸ மேயர் நிவாரணப்பொருட்களை பாரம் எடுக்கும் காட்சிகளே இவை…. இதன் பின்னால் உள்ள தனசிறியின் (மேயர்) அரசியல், இஸ்ரவேலின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசவும், ஆராயவும் வேண்டிய தேவை இருக்கிறது. அது சரி தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு எப்போ வெள்ளம் வந்திச்சு? நிவாரணம் கொடுக்க…

Read More

மனிதாபிமான உதவியின் பெயரில் இஸ்ரேல் முஸ்லிம் பிரதேசத்திற்குள் ஊடுருவல்

வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு   தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு…

Read More

துப்புரவு பணியாளர்களின் தேவைகள் பற்றி றிஷாத் கேட்டறிந்தார்

வெல்லம்பிட்டிய, மெகொட கொலொன்னாவ, புத்கமுவ ஆகிய பிரதேசங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்கள், வெள்ளம் வடிந்து வருவதனால் தமது வீடுகளுக்குச் சென்று துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளுக்கு கொலொன்னாவ பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமாவின் தலைமையின் கீழ் இயங்கும் நிவாரண இணைப்புப் பணியகத் தொண்டர்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களும் உதவி வருகின்றன. அமைச்சர் றிசாத் பதியுதீன் அந்தப் பிரதேசங்களுக்கு பலதடவை சென்று, பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களையும், பாவனைக்குத் தேவையான பொருட்களையும் வழங்கி வைத்திருந்தார். நேற்று…

Read More

பங்களாதேஸின் நிவாரணப் பொருடகள் விமானமூலம் அனுப்பிவைப்பு!

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பல உலக நாடுகள் உதவி வரும் நிலையில் பங்களாதேசும் இன்று நிவாரணங்களை விமானம் மூலம் அனுப்பியுள்ளது. குறித்த நிவாரணப் பொருட்களானது பங்களாதேசின் விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேசின் பிரதமரான சேக் ஹசினாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக அனுப்பப்படுவதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த நிவாரணப் பொருட்களில் 100 மில்லியன் பெறுமதியான மருந்துப் பொருட்கள் ,நீரை சுத்தப்படுத்தும் மருந்து உள்ளிட்டவை…

Read More

வெள்ள அகதிகளுக்காக களத்தில் நின்று உதவும் அமைச்சர் றிஷாத்!

-சுஐப் எம்.காசிம்- இலங்கை மக்கள் காலத்திற்குக் காலம் பல்வேறு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான உயிர்களையும், பல்லாயிரக்கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 18 ஆம் திகதி மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளும், ஏனைய இடங்களில் மோசமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கும் மக்களின் வாழ்க்கையில் அழிய முடியாத தடங்களாக பதிந்து விட்டன. ”மழை வந்தால் வெள்ளம் வரும். மழை நின்று போனால் வெள்ளம் வடிந்து விடும். இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்க முடியும்” என்று நம்பியிருந்த மக்களுக்கு பேரிடி…

Read More

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அமைச்சர் றிஷாத்

1990ம் ஆண்டு மன்னாரில் இருந்து, அகதிகளாக வெளியேறி, வெல்லம்பிட்டிய, புத்கமுவ பிரதேசத்தில் வாழ்ந்து வந்த மக்கள், மீண்டும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு, கொழும்பின் பல இடங்களிலும் தஞ்சமடைந்து இருக்கின்றனர். இவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான  றிஷாத் பதியுதீன் நேற்று (26/05/2016) புத்கமுவ பிரதேச பள்ளிவாசலில் சந்தித்து, அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

Read More