Headlines

இன்று முதன் முதலாக கூடும் ஜனாதிபதி செயலணி

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளினால் உண்டான பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் செயலணி இன்று முதன்முதலாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அண்மையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. சேதமடைந்துள்ள வீடுகள், தொழில்துறை மற்றும் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்தல் போன்றன இந்த செயலணியால்…

Read More

வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள்

அரநாயக்க மற்றும் புலத்கொஹூபிடிய ஆகிய பகுதிகளில் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் அடுத்த வாரமளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

Read More

’11 மாவட்டங்களில் ஐ.நா கூட்டு கணிப்பீடு’

‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,  இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார். …

Read More

நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்திற்கு (RCC) உதவுங்கள்..!

அன்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய உலமாக்களே, மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளே சமூகத்தின் சிவில் தலைமைகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு, நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் கராணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேசக் கரம் நீட்டி உதவி உபகாரம் செய்வதற்காக கடந்த ஓரிரு நாட்களாக உங்கள் ஊர்களிலும் மஹல்லாக்களிலும் நீங்கள் நிவாரண் உதவிகளை சேகரித்து அவற்றை முறையாக உரியவர்களிடம் கொண்டு சேர்க்கவென இதய சுத்தியுடன் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக கூலி தருவானாக.! அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப்…

Read More

வௌ்ள நீர் வடிகிறது

களனி கங்கைக்கு மேற் பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் களனி கங்கைக்கு கீழுள்ள பகுதிகளில் இன்னும் வௌ்ள நிலைமை காணப்படுவதோடு அதுவும் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக, கூறப்பட்டுள்ளது. மேலும், காலநிலை மற்றும் கங்கையின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே ஏதேனும் ஆபத்து நிலைமைகள் இருப்பின் காலதாமதம் இன்றி அதனை மக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த திணைக்களம்…

Read More

இலங்கையில் இயற்கை அனர்த்தம் – தலாய் லாமா இரங்கல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த இழப்புக்களுக்கு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இரங்கல் வெளியிட்டுள்ளார். உயிர் இழப்புக்கள் மற்றும் பாரியளவிலான அழிவுகள் போன்றவற்றுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களின் துன்பத்தில் பங்கேற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read More

கள மருத்துவமனை + மருத்துவர்களை, இலங்கைக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தமது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் வழங்கவுள்ள நிவாரண உதவியில், சத்திரசிகிச்சைக் கூடம், எக்ஸ்ரே வசதிகள், மற்றும் ஆய்வுகூடம் என்பனவற்றை உள்ளடக்கிய 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனை, மற்றும் மருந்துப் பொருட்கள், மின்பாக்கிகள், தார்ப்பாய்கள், கூடாரங்கள் உள்ளிட்ட…

Read More

அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதில் சிரமம்: நிதி அமைச்சு

இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றிய விபரங்களை துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது.இன்னமும் வெள்ளம் முழுமையாக…

Read More

இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?

-சுஐப் எம்.காசிம் – மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம்…

Read More

வெள்ள அனர்த்தம்: யாப்பா – றிஷாத் பேச்சு

இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார். பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார். பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்….

Read More

அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம்!

அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி சேவைகளுக்காக நிறைவேற்றக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வெல்லம்பிடிய, மீதொட்டமுல்லை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கள் குறித்து ஆராய, இன்று பகல் ஜனாதிபதி அங்குள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர். விரைவாக இந்த விடயங்கள்…

Read More

ரூ.36 மில். உதவி வழங்கும் அமெரிக்கா

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மேலும் 36 மில்லியனை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 7.2 மில்லியன் ரூபாயை அமெரிக்கா வழங்கியிருந்த நிலையில் மேலதிகமாக இந்த பணத்தை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்தத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Read More