Headlines

பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகியன கூட்டணி அமைப்பு

சிங்கள பௌத்த அமைப்புக்கள் மூன்று இணைந்து கூட்டணி ஒன்றை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட மூன்று அமைப்புக்கள் இவ்வாறு கூட்டணி அமைத்துள்ளன. பொதுபல சேனா, ராவனா பலய மற்றும் சிங்கள ராவய ஆகிய மூன்று அமைப்புக்களும் நேற்று இந்த கூட்டணியை அமைத்துக் கொண்டுள்ளன. சிங்கள பௌத்தர்களின் உரிமைக்காக விரிவான அடிப்படையில் குரல் கொடுப்பதே இந்த கூட்டணியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த அமைப்புக்கள் கூட்டாக இணைந்து செயற்பட…

Read More

வழக்கை சமாதானமாய் தீர்க்க ஞானசார தேரர் நீதிமன்றில் கோரிக்கை

ஜாதிக பல சேனா அமைப்பு 2014ம் ஆண்டு கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் புகுந்த bbs அமைப்பினர் தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏற்படுத்திய சம்பவம் மற்றும் புனித அல்குர்ஆனை அவமதித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கில் ஆஜரான பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் இந்த வழக்கை சமாதானமாக முடித்துக்கொள்வோம் என நீதிமன்றில் கேட்டுள்ளார். மேலும், குறித்த இந்த வழக்கு…

Read More

ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தர் – ஞானசாரர்

இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும்  நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத…

Read More

பொதுபல சேனா ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்

அர­சாங்கம் இஸ்­லா­மிய அபி­வி­ருத்தி வங்­கியின் உறுப்­பு­ரி­மையை பெற்றுக் கொள்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முயற்­சிப்­பதை எதிர்த்தும் பொது­ப­ல­சேனா அமைப்பு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்கு மக­ஜ­ரொன்­றினைக் கைய­ளித்­துள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை பொது­ப­ல­சே­னாவின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கே­யினால் இந்த மகஜர் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பிட்ட மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இலங்கை தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக ஒரு பில்­லியன் அமெ­ரிக்க டொலரைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக இலங்­கையில் சமய ரீதி­யி­லான வங்கி முறை­யொன்­றினை அரசு…

Read More

ஞானசார தேரர், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று (25)  அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை…

Read More

சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு

சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.

Read More

இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­களின் மைய­மாக இலங்கை – BBS

நாட்­டுக்­கா­கவும், பௌத்த மதத்­துக்­கா­கவும் குரல்­கொ­டுத்த ஞான­சார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்­டி­ருக்­காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்­பு­ட­னான தொடர்­பு­களைத் தேடிப்­பார்க்­கு­மாறு உள­வுப்­பி­ரி­வி­ன­ருக்கு பொது­ப­ல­சேனா அமைப்பு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து செயற்­பட்டு சிரி­யாவில் கொல்­லப்­பட்ட அபூ சிலானி என்­ப­வ­ருக்கும் இலங்கை ஐம்­இய்­யத்துல் உல­மா­வுக்கும் நெருங்­கிய தொடர்பு இருந்­துள்­ளது. இதனால் உலமா சபைக்கும் ஐ.எஸ் அமைப்­புக்கும் தொடர்­புள்­ள­தாக சந்­தே­கிக்­கிறோம் என்றும் தெரி­வித்­துள்­ளது. கொழும்பு, கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு…

Read More

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய (15) தினம் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த 4 பிக்குமாறும் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்த இருப்பதாலேயே இங்கு பாதுபாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று…

Read More

சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு

ஹோமாகம பொலிஸில்  சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ…

Read More

இன்று நீதிமன்றத்தில் ஞானசார தேரர்

ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரதான பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர், இன்று (16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி பிணை வழங்கபட்ட போதிலும், அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக மீண்டும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (11) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர். எதிர்வரும் 05.05.2016 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது. அத்துடன் இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிங்கள பாடலாசிரியர்…

Read More

யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்..! பகிரங்கமான இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை அனுப்பியுள்ளனர். அந்த கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,ஜனவரி 31 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச உட்பட சிலர் விளக்கமறியலில் இருக்கும் யோஷித்த உள்ளிட்ட கைதிகளை சந்தித்து பேசிவிட்டு திரும்பிச் சென்றனர்.  இவர்களை சந்தித்து பேசி பின்னர், யோஷித்த ராஜபக்ச இரும்பு கதவை திறந்து கொண்டு தான்…

Read More