Headlines

மெகசின் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு!

கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு…

Read More

பெளத்தன் என்ற வகையில் வெட்கமாக உள்ளது – ரணில்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தேரர்கள் சிலர் ஹோமாகம நீதவான் நீதிமன்றம் வளாகத்துக்குள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் சட்டத்துக்கு முரணானது என்றும், இதனால், பௌத்தனாக தான் வெட்கப்படுவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மல்வத்தை பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதி ஆகியோருக்கு அறிக்கை…

Read More

ஞானசாரருக்கு விளக்கமறியல்

பொதுபல ​சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ்…

Read More

‘சிங்க லே’அமைப்பைத் தடை செய்யுமாறு கோரிக்கை

‘சிங்க லே’ அமைப்பினை தடை செய்யுமாறு அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் உடனான சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘சிங்க லே’ , ‘தமிழே’ அல்லது ‘முஸ்லிம் லே’ போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை. 71ஆம் மற்றும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக போர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இனியும்…

Read More

ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய  குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று (25) பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும்  ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததபடுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும்…

Read More

புதிய சட்டமூலத்தின் நோக்கம் பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதே!

பௌத்த தேரர்களின் குரலை ஒடுக்குவதற்காகவே அரசாங்கத்தினால் புதிய ஒழுக்க விதிகளை உள்ளடக்கி, சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எஹெலியகொட பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து ஒழுக்க விதிகள் உள்ளடக்கிய சட்டமூலத்தை கொண்டுவர அரசாங்கம் தயாராக இருகிறது.அது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். அவ்வாறு இல்லாவிட்டால், தேரர்களுக்கிடையிலும் பொதுமக்களுக்கிடையிலும் பாரிய எதிர்ப்பு உருவெடுக்குமென அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை,பௌத்த…

Read More

அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்

எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும்  ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா அமைப்பும்  அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு  பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு  அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த…

Read More

மத்­ரஸா கற்கைகளை நிறுத்துங்கள்

மத்ரஸா மற்றும் பள்­ளி­வா­சல்­களின் மூல­மா­கவே பயங்­க­ர­வாதம் பலப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் அடிப்ப­டை­வா­தத்தை பலப்­ப­டுத்தும் அனைத்து முஸ்லிம் செயற்­பா­டு­க­ளுக்கும் உட­ன­டி­யாக தடைவிதித்து முஸ்­லிம்­களை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். இல்­லா­விடின் எந்த முறை­யி­லா­வது இதை நாம் தடுக்­க வேண்டி வரும் என பொது­பல சேனா அமைப்பு தெரிவித்துள்­ளது. முஸ்­லிம்கள் அடிப்படை வாதி­க­ளா­கவும் பயங்­க­ர­வா­தி­க­ளா­கவும் மாறி­வரும்போது நாம் இன­வா­தி­க­ளாக மாறு­வதில் தவறில்லை எனவும் அந்த அமைப்பு குறிப்­பிட்­டது. பொது­பல சேனா அமைப்­பினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்­பி­லேயே அதன் அந்த அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார…

Read More

இது சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் – ஞானசார தேரர்

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின்…

Read More

சிங்களவர்களை பற்றி நல்லாட்சி அரசு எதனையும் பேசுவதில்லை: ஞானசார தேரர்

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையில் இருக்கும் பலருக்கு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பாரிய தேவை இருப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இது மிகவும் துரதிஷ்டவசமானது எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பிரச்சினைகள் என்பது சிறுபான்மை இனத்தவருக்கு மாத்திரம் இருப்பதில்லை சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகள் பற்றி நல்லாட்சி அரசாங்கம் எதனையும் பேசுவதில்லை. புத்தசாசனத்திற்கு அமைச்சர்கள் இல்லை. பொறுப்பான…

Read More

பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில்…

Read More