பொதுபலசேனாவின் ஆர்ப்பாட்டம் ஆரம்பம்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசேர தேரர் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமாகியள்ளது. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஞானசேர தேரர் இதற்கு முன்னர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்திருந்தார். இதை நிரூபிக்கும் வகையிலேயே இன்று தமது ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அண்மையில் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக…
