Headlines

ஞானசாரருக்கு எதிராக உடனடி நடவடிக்கை – ஜனாதிபதி உறுதியளிப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நிந்திக்கும் வகையில் தெரிவித்த கருத்து பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரியவருவதாவது, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 21 ஆம் திகதி மஹியங்கனையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வித்தில் உரையாற்றியிருந்தார். அவ்வுரை குறித்த பிரதேசத்தில் அச்ச நிலையினைத்…

Read More

ஞானசார தேரர் மியன்மார் பயணம் !

பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார தேரர் நேற்றைய தினம் (30) மியன்மார் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு சென்றுள்ள அவரை சர்ச்சைக்குறிய அசின் விராது தேரர்  வரவேற்பு அளித்துள்ள அதேவேளை அங்கு தங்கியிருக்க சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   மியன்மாரில் பெளத்த மதகுருமார்களை சந்திக்கவும் அங்கு இடம்பெறும் பெளத்த மாநாட்டில் கலந்துகொள்ளவும் ஞானசார தேரர் அங்கு சென்றுள்ளதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.  

Read More

வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக ‘பிரேரணை கொண்டுவருவேன்’

‘இனங்களுக்கிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளுக்கு எதிரான தடைச் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து பலரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், அந்த விவகாரம் தொடர்பில் விரைவில் தனிநபர் பிரேரணையொன்றைக் கொண்டுவருவேன்’ என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ‘பொது பல சேனா செயலாளர் ஞானசார தேரர், முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான வெறுப்புக் கருத்துகளை, மஹியங்கனையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இது, கண்டிக்கத்தக்கதாகும்’ என்றும் அவர் குறிப்பட்டுள்ளார். இந்த…

Read More

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் அத்துமீறிவிட்டன. ஜனாதிபதிக்கு றிஷாத் கடிதம்!

-சுஐப் எம் காசிம்- பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் இஸ்லாத்தையும் பெருமானாரையும் தொடர்ச்சியாக நிந்தித்து வருவது தொடர்பிலும் அவர் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் செயற்பாடுகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசரக் கடிதமொன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆட்சியில் அழுத்கம, பேருவளை பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஞானசார தேரரே மூல காரணமென ஆதாரங்களுடன் பொலிசாரிடம்…

Read More

ஞானசாரரை, கைதுசெய்ய வலியுறுத்தி மனு – RRT அதிரடி

பொதுபல சேனா செயலாளர் ஞானசாரர் பயங்கரவாதத்திற்கு துணை போவதாக தெரிவித்தும் அவரை உடனடியாக கைதுசெய்ய வலியுறுத்தியும் முஸ்லிம் சட்டத்தரணிகள் இன்று முறைபாடு செய்துள்ளனர். இதனை சட்டத்தரணி  சிராஸ் நூர்தீன்  jaffna muslim இணையத்திடம் தெரிவித்தார். 3 வேறு வேறு முறைபாடுகள் ஞானசாரருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது. RRT Legal update Today 29.06.2016 RRT Made three complaints against Ganasara Himi  at police head quaters under sections of Penal code & Prevention…

Read More

எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்

  மஹி­யங்­கனை சம்­பவம் குறித்து கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்பிட்டார்.   தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் …   மஹி­யங்­க­னையில் அளுத்­கமை போன்ற கல­வரம் உரு­வானால் அதற்கு முஸ்லிம் கவுன்­ஸிலே பொறுப்புக் கூற­வேண்டும்.அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியும் முஸ்லிம் கவுன்­ஸிலே என சந்­தே­கிக்­கின்றோம்    பௌத்­தர்கள் முஸ்லிம் கொடி­யையோ குர்­ஆ­னையோ எரிக்­க­வில்லை. மஹி­யங்­க­னையில் முஸ்­லிம்­களே பௌத்த கொடி­யையும் வெசாக் கூடு­க­ளையும் எரித்­துள்­ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்­லிம்­களை கண்­டிக்­காது அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தாது…

Read More

கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக, அல்லாஹ்வுக்கும் அனுப்பவும் – ஞானசார

பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியொன்றை முஹம்மத் நபி ஊடாக அல்லாஹ்வுக்கும் அனுப்பி வைக்கவும் என பொது பல சேனா அமைப்பின்  செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் மூலம் முறைப்பாடு செய்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் சிங்கள இணையத்தளமொன்றுக்கு பொது…

Read More

ஞானசாரரின் குரோதப் பேச்சு – பூஜிதவிற்கு ஆதாரம் அனுப்பிவைப்பு

பொதுபல சேனா என்ற சிங்கள பௌத்த இயக்கம் மீளவும் குரோதப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. முஸ்லிம் பேரவை இது குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் முறைப்பாடு செய்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான குரோதப் பேச்சுக்களையும் அச்சுறுத்தல்களையும் பொதுபல சேனா இயக்கம் மீளவும் தொடுக்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 23ம் திகதி மஹியங்கனையில் வைத்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், அலுத்கம சம்பவம் போன்று மீள இடம்பெறுவதற்கு…

Read More

வன்முறைக்கு பொதுபல சேனா முயற்சி – முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்குங்கள்

– ஏ.ஆர்.ஏ.பரீல் – மஹி­யங்­க­னையில் இடம்­பெற்ற பௌத்த கொடி எரிப்பு சம்­ப­வத்­தை­ய­டுத்து பொது­ப­ல­சேனா அமைப்பு அளுத்­கமை சம்­பவம் போன்ற ஒன்­றினை உரு­வாக்க முயற்­சிப்­ப­தா­கவும் அப்­ப­குதி முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச்  செய்­யு­மாறும் மஹி­யங்­கனை பிர­தேச சபையின் முன்னாள் உறுப்­பி­னரும் ஜாதிக பல­சே­னாவின் செய­லா­ள­ரு­மான வட்­ட­ரக்க விஜித தேரர் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சர் ரிசாத் பதி­யு­தீ­னி­டமும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்சர் ரவூப் ஹக்­கீ­மி­டமும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். அமைச்­சர்கள் இரு­வ­ரையும் தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு மஹி­யங்­க­னையில்…

Read More

பொதுபலசேனாவின் சகாக்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு

பொதுபலசேனாவின் ஆதரவுக்குழவாக செயற்பட்டு வரும் அகில இலங்கை இந்து மன்ற உறுப்பினர்கள் நேற்று (22) ஜனாதிபதியுன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். அகில இலங்கை இந்து மன்றத்தின் தலைவர் அருணகாந் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இக் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர். ஜனாதிபதியுடன் என்ன விடயங்கள் தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த இவ் அமைப்பானது பொதுபலசேனாவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றார்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான  உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் (20) தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் ஞானசாரவுக்கு பிணை

கடும் எச்சரிக்கையின் அடிப்படையில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை…

Read More