Headlines

சரணடைந்த பிக்குகள் அடையாள அணிவகுப்பு




ஹோமாகம பொலிஸில்  சரணடைந்த நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பல தேரர்களுக்கு ஹோமாகம நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்தவகையில், ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்தாகந்தே சத்தாதிஸ்ஸ, சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன, மெதிரிகிரிய புஞ்ஞாசார மற்றும் பஸ்ஸர நந்தஜீவ போன்ற தேரர்கள் ஹோமாகம பொலிஸில் நேற்று சரணடைந்தனர்.
இந்நிலையில்,குறித்த  நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *