Headlines

அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் அனுதாபம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், கல்விமானும், ஆய்வாளருமான அல்ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்கள் (74) இன்று (27.04.2015) காலமானார்கள். அன்னார் காலமானதை கேள்வியுற்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளார். இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும் வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது சேகரிப்புக்களை கையளித்திருந்தமை…

Read More

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!

நாட்டுக்குத் தேவையான மொத்த குளோரினையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நாட்டின் முன்னணியிலுள்ள கைத்தொழில் விநியோகஸ்தர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இது நாட்டின் நீரின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உயர்த்தவும் வழிவகுக்கின்றது. குளோரின் விநியோகஸ்தர்களின் கருத்தின்படி: நாட்டில் முன்னிலையிலுள்ள இவ்வர்த்தகத்தை சர்வதேச தராதரத்துக்கு உயர்த்த முடியும். வடமாகாணத்தில் அமையப்பற்றுள்ள பரந்தன் இரசாயண தொழிற்சாலை (Paranthan Chemical Company) 1985ல் தனது செயற்பாடுகளை முற்றாக இழந்தமையால் நாட்டுக்குத் தேவையான இரசாயணங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நாங்கள் இத்தொழிற்சாலையை மீள…

Read More

சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார். TM

Read More

கடவுச்சீட்டில் கைவிரல் அடையாளம்; சட்டம் வருகிறது

கடவுச்சீட்டில், அதன் உரிமையாளரது கைவிரல் அடையாளத்தைப் பதிவதை கட்டாயமாக்கும் சட்டமூலமொன்று, இன்று திங்கட்கிழமை (27), நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய, கடவுச்சீட்டொன்றுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அல்லது கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரியானவர், தனது கைவிரல் அடையாளத்தை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்பது இந்த சட்டத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் நிலையான மற்றும் காலவரையறையின்றிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

நேபாளிற்கு சென்றுள்ள இலங்கை இராணும் – பிரதமர் ரணில்

இலங்கை இராணுவத்தினர், நேபாளத்துக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எங்களுடைய இராணுவம், வேறு நாடொன்றுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வதற்கு சென்றிருக்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டினார். இதற்கு முன்னர் அமைதி காக்கும் படைக்கு, ஐ.நா.வின் ஊடாகவே எமது படையினர் இணைந்துகொள்ளப்பட்டனர். இராணுவத்தினரை வேறு நாடுகளுக்கு சேவைக்கு அனுப்பும் போது நாடாளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்துவது உலக சம்பிரதாயமாகும் என்றும் அவர், நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். இலங்கை படையினர், நிவாரண நடவடிக்கையை…

Read More

நேபாளத்திற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு

நேபாளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற இலங்கை விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன்படி குறித்த விமானம் தற்போது காத்மண்டு விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் நேற்று காலை 05.20க்கு குறித்த விமானம் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இதில் இராணுவ வீரர்கள் 44 பேர் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்டோர் பயணித்தனர். அத்துடன் குறித்த விமானம் நேற்று இரவே நாடு திரும்புவதாக இருந்த நிலையில்…

Read More

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்தது- நேற்றிரவும் நில அதிர்வு ஏற்பட்டதால் உறக்கமின்றி தவித்த மக்கள்

நேபாளத்தை கடந்த சனிக்கிழமையன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3200 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6500 பேர் படுகாயமடைந்துள்ளனர். சனிக்கிழமையன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, அங்கு நேற்று பிற்பகலில் 6.7 ரிக்டர் அளவு கொண்ட நில நடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து நேற்று இரவில் 5.4 ரிக்டர் அளவு கொண்ட நிலஅதிர்வும், இன்று காலை பல பகுதிகளில் மீண்டும் நில அதிர்வும் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக அந்நாட்டு…

Read More

நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ டிரைவர் அப்துல் மஜீத்!

அப்துல் மஜீது என்ற சகோதரரின் ஆட்டோவில் ஒருவர் தம்முடைய கைப்பையை தவறவிட்டு சென்று விட்டார். கைப்பையை கண்ட அப்துல் மஜீது அதை பிரித்து பார்த்த போது இரண்டு பவுன் தங்க நகையும், ஒரு டேப், ஒரு செல்போன், ஆதார் மற்றும் குடும்ப அட்டை இருந்துள்ளது. அப்படியே கொண்டு சென்று சந்திரயான் காவல்நிலைய ஆய்வாளர் ராமாராவ் அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை வரவழைத்து பொருட்களை ஒப்படைத்துள்ளனர். இன்ஸ்பெக்டர் ராமாராவ் அப்துல் மஜீது அவர்களுக்கு ரூ.1000 அன்பளிப்பாக…

Read More

இது தான் இஸ்லாம்..!நேபாளுக்கு விரைந்து உணவு வழங்கியது பாகிஸ்தான் விமானம்….!!

உலக ஊடகங்களால் தீவிரவாத நாடாகவே காட்டப்பட்ட பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகின் எந்த நாட்டு ஊடகங்களும் காட்டியதில்லை. இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான பாகிஸ்தான், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொண்டு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களை விமானம் மூலம் ஏற்றி அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டது….

Read More

மருந்து உணவு பொருட்களுடன் நேபாளுக்கு விரைந்தது கத்தார் ஏர்வேய்ஸ்….!!

உலக ஊடகங்களால் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டிய ஊடகங்கள் முஸ்லிம்களின் மனிதநேய தன்மையையும், இஸ்லாத்தின் புனிதத்தையும் வெளிப்படுத்தி காட்டியதில்லை. இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை 63 சதவீதத்திற்கும் அதிகம் கொண்ட நாடான இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 90 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான கத்தார், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொள்வதாக அறிவித்தது. அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களையும், மருந்து பொருட்களையும் ஏற்றிக்கொண்டு கத்தார் விமானம் நேபாளுக்கு விரைந்துள்ளது. கத்தாரை…

Read More

பிரித்தானிய பிரதமரின் 100 நாட்கள் வேலைத்திட்டம்

கொன்சவேற்றிவ் கட்சி எதிர்வரும் பிரிட்டிஷ் தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் 100 நாள் காலப்பகுதியினுள் மக்களுக்கு பல திட்டங்களை வழங்கவுள்ளதாக டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். குறிப்பாக தொழிலாளர்களின் கொடுப்பனவுகள், சேமலாபங்கள், வீடமைப்பு மற்றும் சிறார்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை 100 நாள் காலப்பகுதியினுள், வாக்காளரின் திருப்திக்கு அமைய நிறைவேற்றப் போவதற்காக குறிப்பிட்டுள்ளார். கொன்சவேற்றிவ் கட்சி முழு அளவிலான வெற்றியை பெற்றதும், மகாராணியாரின் உரையின் போது தெரிவிக்கப்பட்ட குறைந்த வருவாயை பெறுபவர்களின் வரி முறைகள் உரிய முறையில் பின்பற்றப்படும் எனவும்…

Read More

சுற்றுலா சென்ற 16, 17, 18 வயது யுவதிகள் தங்கல்ல கடலலையில் சிக்கினர்.

தங்கல்ல -குடாவெல்ல கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளம் யுவதிகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. பிரதேச வாசிகளின் முயற்சியில் அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ள அதேவேளை ஒருவர் உயிரிழந்துள்ளதகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். தங்கல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா வந்த இவர்கள் இன்று காலை குடாவேல்ல கடலில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர். அதன்போதே அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட யுவதிகள்  16, 17, 18 வயதுடையவர்கள் எனவும் போலீசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read More