நேபாள நாட்டுப்புற கதையில் சொன்ன மாதிரியே தாக்கிய பெரிய நிலநடுக்கம்! 80 வருட திடுக் தகவல்கள்!! இது அறிவியலா.. அனுபவமா?
நேபாளத்தை பொருத்தளவில், நீண்ட நூற்றாண்டுகளாகவே, மக்கள் மத்தியில் ஒரு செவிவழிச் செய்தி உலவிவருகிறது. அதாவது, ஒவ்வொரு 80 வருடங்களுக்கு ஒருமுறையும், நேபாளம் மிகப்பெரிய நிலநடுக்கத்தை சந்திக்கும்..என்பதுதான் அந்த செவிவழிச் செய்தியாகும். இதேபோல 1934ம் ஆண்டு, நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம்-பீகார் நிலநடுக்கம் என்று அது அழைக்கப்பட்டது. இந்த பெரிய நிலநடுக்கத்தில், 12 ஆயிரம் பேர் நேபாள நாட்டில் உயிரிழந்தனர். இந்தியாவில் 7 ஆயிரம் பேர் இறந்தனர்.இதன்பிறகு சிறிய அளவில் பலமுறை நேபாளத்தில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன….
