Headlines

19வது திருத்தச் சட்டம் அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் : பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரசாங்கத்தின் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திலே அதிகூடிய விருப்புவாக்குகளால் நிறைவேற்றப்படும் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். அரசாங்கத்தின் நூறு நாள் விஷேட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் வீட்டுக்கு வீடு கிராமத்திற்கு கிராமம் என்ற தொனிப் பொருளில் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தில் இன்று (26) செம்மண்னோடை மௌலானா குறுக்கு வீதியில் அமைந்துள்ள வடிகானுக்கு மூடியிடும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்…

Read More

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் மாபெரும் பரிசுப் போட்டிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது 20ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியில் மாபெரும் பரிசுப் போட்டிகளை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தமிழ் மொழி மூலம் நடைபெறும் இப்போட்டிகள் பாடசாலை மாணவர்கள், அரபுக் கல்லூரிகள், திறந்த போட்டியாளர்கள் மற்றும் மீடியா போரம் அங்கத்தவர்கள் என பல பிரிவுகளாக நடாத்தப்படுகின்றன. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் தங்களுடைய ஆக்கங்களை Sri Lanka Muslim Media Forum, K.G. 7, Elwitigala Flats, Elwitigala Mawatha, Colombo 08 எனும் முகவரிக்கு…

Read More

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காதவர்கள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்கள்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்காத அரசியல்வாதிகள் மக்களுக்கு துரோகம் இழைத்தவர்களாக வரலாற்றில் இணைந்துவிடுவார்கள் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் வழங்கிய தீரப்பிற்கு அமைவாக முன்வைக்கப்ட்டுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனநாயகமானது. ஜனாதிபதி பதவியை ஜனநாயகமாக்கும் 19 ஆவது அரசியலமைப்பை நிறைவேற்றுவது அனைவரினதும் கடமையாகும். இதற்கு ஜாதிக…

Read More

ஒபாமாவின் மின்னஞ்சல்களை படித்த ரஷ்ய ஹேக்கர்கள்: அதிகாரிகள் அதிர்ச்சி

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மின் அஞ்சல்களை ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் படித்ததாக தெரியவந்துள்ளது. மிகவும் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை கொண்ட நாட்டின் அதிபர் எழுதிய மின் அஞ்சல்கள் ஹேக்கர்களால் படிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் மற்றும் இதர அதிகாரிகளுக்கும் எழுதிய மின் அஞ்சல்கள் படிக்கப்பட்டதாக நியூயார் டையம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த மின்னஞ்சல்களில் தூதுவர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுடன் முக்கிய வேலைகள்…

Read More

நேபால் மக்களுக்கு அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் வழங்கிய இலவச சலுகை.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபால் மக்கள் வெளிநாட்டில் இருக்கும் தமது சொந்தங்கள் , உறவுகள், மற்றும் நண்பர்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி துயரினை பகிர்ந்து கொள்வதற்காக அந்நாட்டு தொலைத்தொடர்பு நிறுவங்கள் அனைத்து நாடுகளுக்குமான வெளிச்செல்லும் அழைப்புகளை இலவசமாக வழங்கியுள்ளது. இந்த  வாய்பினால் நேபாளில் உள்ளவர்கள்  உலகெங்கிலும் வாழும் (குறிப்பாக ஐரோப்பிய, ஆசிய, அராபிய நாடுகளில் ) உறவினர்களை மற்றும் நண்பர்களை அழைத்து துயரினை பகிரிந்து கொள்வதினை அவதானிக்க கூடியதாக உள்ளது…

Read More

கடந்த ஆட்சியில் நானும் பாதிக்கப்பட்டேன்…சமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்க வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்களிப்புடன் கட்சியின் செயற்பாடுகளை மேலும் பலம்பொருந்தியதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை இணைந்துக்கொண்டு…

Read More

இன்று பெரும் பரபரப்புடன் 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற கூடும் பாராளுமன்றம்.. ஆதரவும், எதிர்ப்பும் இவர்கள் தான்

அரசியமைப்புக்கான 19 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கென இன்றும் நாளையும் பாராளுமன்றம் கூடுகிறது. காலை 9.30 முதல் மாலை 6.00 மணி வரை விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 19 ஆவது திருத்தத்திற்கான விவாதத்தை பாராளுமன்றத்தில் எடுக்க இருந்த நிலையில் மூன்று தடவைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஸ்ரீல. சு. க., ஐ. ம. சு. முவின் எதிர்ப்பே இதற்கு காரணமாக இருந்தது. என்றாலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்…

Read More

நான் எப்போதும் மஹிந்த அணியே… ஏ.எச்.எம்.அஸ்வர் ஹாஜி

நாட்டின் சமகால அரசியலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக மஹிந்த ராஜபக்ஸ்ஸவின் தலைமையில் ஓர் அணியும் அதே போலவே ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேன தலைமையில் வேறொரு அணியுமாக செயற்படுவார்களாயின் நான் ஒரு போதும் நம்பிக்கை துரோகம் இழைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ்ஸவை விட்டு வெளியேற மாட்டேன் என்றும். எனது விசுவாசத்தின் அடிப்படையிலும், நன்றிக்கடனுக்காகவும் மஹிந்த அணியிலே இருப்பேன் என தேசியப்பட்டியல் பாராளுமன்ற உருப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் நவமணி பத்திரிகைக்காவும், இணைய நாளிதல்களுக்காவும் மேற்கொண்ட நேர்காணலின் போது…

Read More

இனவாத சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை – றிஷாத் பதியுதீன்

இந்த நாட்டில் மீண்டும் இனவாத சிந்தனைகளை விதைத்து அதன் மூலம் மனித அழிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகளுக்கு வன்னி மாவட்ட மக்கள் அடிபணியப் போவதில்லை என்ற செய்தியினை மீண்டும்  வெகு விரைவில் கூறுவார்கள் என தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதங்கள் எமது முன்னேற்றத்தின் தடைக்கற்கல் என்றும் சொன்னார். வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் கிராமங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு வவுனியா பட்டானிச்சூர் வெங்கடேஷ்வரா மஹாலில் இன்று இடம் பெற்ற…

Read More

அடிக்கு மேல் அடி; சற்றுமுன்னர் நேபாளில் மற்றுமொரு சக்தி வாய்த்த நில நடுக்கம்

சற்றுமுன்னர் நேபாளில் மற்றுமொரு 6.7 ரிக்டர் சக்தி   வாய்த்த நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.. நேபாளின் காத்மாண்டு நகரில் இருந்து சில கிலோமீட்டர் துரத்தில் அமைந்துள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேத விபரம் இதுவரை தெரியவில்லை. நேற்றைய  நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஆப்டர் ஷாக்குகள் (After Shock) ஏற்பட்டு வருகின்றன. மிதமான அளவில் அவை இருந்து வந்த நிலையில் இன்று சக்தி வாய்ந்த ஆப்டர்ஷாக் ஏற்பட்டது. இந் நில அதிர்வானது நேபாளத்தில் ரிக்டரில்…

Read More

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்தது

நேபாளத்தை இன்று தாக்கிய 7.9 ரிக்டர் அளவிலான மோசமான நில நடுக்கப் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 1500 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 16 முறை நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் பல்லாயிரம் வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. வரலாற்று சிறப்புமிக்க பல நினைவு சின்னங்களை மண்மேடாக்கிய இந்த இயற்கையின் கோரத்தாண்டவத்தில் பழமையான பல கோயில்களும் சேதமடைந்தன. ஆனால், ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பசுபதி நாதர் ஆலயம் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில்,…

Read More

25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்க முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபா

 இர்ஷாத் றஹ்மத்துல்லா முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுச்சுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த ஒட்டுச் சுட்டான் ஓட்டுத் தொழிற்சாலையினை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடாக 20 மில்லியன் ரூபாய்களை வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒதுக்கீடு செய்துள்ளார். தமது அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளை ஆராயும் கூட்டம் கொழும்பில் இடம் பெற்ற போது அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இலங்கையின் பழமையான…

Read More