Headlines

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு இன்று

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் இன்று (28) பிற்பகல் நடைபெறவுள்ளது.இந்த திருத்தச் சட்டமூலம் ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து விவாதம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று (28) முற்பகல் 9 மணிக்கு மீண்டும் விவாதம் தொடரவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். விவாதம் நிறைவுபெற்றதும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பும், நடத்தப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார் குழுநிலை விவாதம் நிறைவில் நடத்தப்படுகின்ற வாக்கெடுப்பு ஒரு சில வாக்குகள் வித்தியாசத்தில்…

Read More

காத்தன்குடி மீடியா போரத் தலைவர் டீன் பைரூஸ் நன்றி தெரிவிப்பு

எம்.ஐ.அப்துல் நஸார் கடந்த 2015.04.25ஆந் திகதி நடைபெற்ற காத்தன்குடி மீடியா போரத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் நடப்பாண்டின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர் A.L.டீன் பைரூஸ் அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார் காத்தன்குடி மீடியா போரத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும்,முகநுால் மூலமும், குறுஞ் செய்திகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் மற்றும் நேரடியாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். எனக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு அமானிதமாகும்.  அதனை மிகப் பொறுப்புடன்…

Read More

சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என ரணில் கூற, சிரித்துக்கொண்டிருந்த மைத்திரி

கலவரமடையாதீர்கள். இம்முறை உங்களுக்கு சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவை பார்த்துக் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று 27.04.2015 திங்கட்கிழமை அமர்வின்போது 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் ஊடக விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இதன்போது முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் அமைதியாக அமர்ந்துகொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் கூறியதைக்…

Read More

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மே 02 இல் இலங்கைக்கு விஜயம்!

அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. வருகை தரவுள்ள இராஜாங்க அமைச்சர் நாட்டின் ஜனாதிபதி , பிரதமர், வௌிவிவகார அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலருடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார். அத்துடன் களனி விகாரைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன் லக்ஸ்மன் கதிர்காமரின் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய தொடர்புகள்…

Read More

எனது மெய்ப் பாதுகாவலரிடம் இருந்தது துப்பாக்கி அல்ல.. அது தண்ணி போத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்துக் கொண்டு ஜனாதிபதியின் அருகில் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்த இராணுவ கோப்ரல் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும், எவ்வாறு நாமல் ராஜபக்ச மட்டும் இராணுவ கமாண்டோ படைப்பிரிவின் கோப்ரலை…

Read More

பதவியிலிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால, தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல்..!

அனேகமான ஜனாதிபதிகள் தங்களை மேலும் வலுப்படுத்திக் கொண்டார்களே தவிர, அதிகாரத்தை குறைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் வரலாற்று பதிவை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை குறைத்துக் கொள்கின்றமை போற்றத்தக்க செயல் எனவும் இவ்வாறான தலைவர்கள் இலகுவில் உருவாக மாட்டார்கள் என்றும் இன்று (27) பாராளுமன்றில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டார். இனி உயர் நீதிமன்றின் உத்தரவுக்கு அமையவே ஜனாதிபதி மேலதிக அதிகாரங்கள் கிடைக்கும்…

Read More

யார் இந்த மைத்ரி? இந்த வீரனின் தைரியம் லேசுப்பட்டதல்ல..

நூறுநாள் வேலைத்திட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் அவரின் நிதானம் வெளிப்பட்டிருந்தது. அவர் ஆற்றிய உரையில் சமகால அரசியலில் சலசலப்புச் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நிறைந்த புத்திமதிகளைக் கூறியுள்ளார். ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளாதவர் அல்ல நான். அதிகாரங்களைக் கையில் எடுக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் காரணமாகவே அமைதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரியின் மேற்போந்த உரையில் இருந்து அவரின் நிதானம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை புகழ்ந்த ஜே.வி.பி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்று ஜேவிபி தெரிவித்துள்ளது இதனை கொண்டு வந்த ஐக்கிய தேசியகட்சியே 40 வருடங்களின் பின்னர் அதனை நீக்கவேண்டும் என்று கோருவது வரவேற்கக்த்தக்கது என்று ஜேவிபியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பாஸிஸ கொள்கைக்கு இட்டுசென்றுள்ளதாக குறிப்பிட்டார் அனுபவ ரீதியாக இதனை உணர்ந்தநிலையிலேயே மக்கள் அதனை விமர்சிக்க ஆரம்பித்ததாகவும் ஹேரத் தெரிவித்தார் இந்தநிலையில் நிறைவேற்று…

Read More

இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 19வது திருத்தச் சட்டம் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க திருத்தச் சட்டத்தை செவ்வாய் கிழமை நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதீத அதிகாரங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்தது. 1999 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்…

Read More

ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…

Read More

19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது மகிந்த ராஜபக்ஸ இழப்பவை

–துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்- 19ம் சீர்திருத்தம் நிறைவேற்றப்படுகின்ற போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் இன்னுமொரு தடவை ஜனாதிபதித் தேர்தலிற்கு போட்டி இட முடியாது போவதுடன் நிறைவேற்று அதிகாரத்தினை ஒழிக்கும் நோக்கில் ஜனாதிபதி மீது கேள்வி எழுப்பலாம் என்ற நிலை கொண்டுவரப்படுவதன் காரணமாக இலங்கை ஜனாதிபதி மீது குற்றச் சாட்டுகளை முன் வைத்து நீதி மன்றம் செல்ல முடியுமாக இருக்கும். இவ் இரு காரணிகளும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் சவாலானதும்,ஆபத்தானதாகவும் இருப்பதால், இவ்…

Read More

இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை, நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

வெள்ளை வான் கடத்தல்களுக்கு பயந்து நேபாளத்திற்கு சென்ற ஊடகவியலாளர்களை எதிர்வரும் வாரத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எழுப்பி கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சி மேற்கொள்ளாதா என அனுர குமார திஸாநாயக்க வினவியுள்ளார். அதற்கு பதலளிக்கும்…

Read More