Headlines

‘ஜி.எஸ்.பி பிளஸ் நிபந்தனைகள் குறைப்பு’

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த 56 நிபந்தனைகள், 16 நிபந்தனைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளவும் பெற்றுக்கொள்வதால், இலங்கைக்குச் சாதகமான பல நன்மைகளை எதிர்பார்க்க முடியும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன், இந்த வரிச்சலுகை மீளவும் கிடைக்குமா, இல்லையா என்பது தொடர்பில், இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் உறுதியாக அறிவிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். தற்போது ஆட்சியிலுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை…

Read More

பஹ்ரெயினிலுள்ள இலங்கையரை ஜனாதிபதி சந்திப்பு! அமைச்சர் ரிசாத் பதியுதீனும் பங்கேற்பு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பஹ்ரெயின் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயினிலுள்ள இலங்கைத் தூதரகத்தினரால் நேற்று பிற்பகல் ரிட்ஸ் கால்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பஹ்ரெயினில் வாழும் இலங்கை பிரஜைகள் பலரும் இதில் கலந்துக் கொண்டனர். ‘காலங்கடந்தாவது பஹ்ரெயின் அரசுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தமை தமக்கு மகிழ்ச்சியை தருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இங்கு தூதரகம் ஒன்று திறக்கப்பட்டமையினால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளதாகவும்   ஜனாதிபதி தெரிவித்தார். நேற்று பஹ்ரெயின்…

Read More

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகர காரியாலய திறப்பு விழா

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நகரகாரியால  திறப்பு விழாவும் வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கலும் இன்று கல்முனையில் இடம்பெற்றது .அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி yl .சாஹுல் ஹமீட் அவர்களின் அழைப்பின் பேரில் சமுர்த்தி ,வீடமைப்பு பிரதியமைச்சர்  MSS. அமீர் அலி இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த தமிழ்,முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடமைப்பு அதிகாரசபையின் இரண்டாம் கட்ட நிதி உதவி வழங்கிவைக்கப்பட்டது….

Read More

மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு சமையலறை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!

குருநாகல், மல்கடுவாவ பிரதேச  மக்களின் வேண்டுகோளுக்கமைய, மல்கடுவாவ கிராம சங்கத்துக்கு (அன்யோன்ய) தேவையான பீங்கான், கோப்பை ஆகிய சமையலறை உபகரணங்கள், மக்கள் காங்கிரஸின்  குருநாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மல்கடுவாவ கிராம சங்கத் தலைவர் அமரசிங்க, மல்கடுவாவ அமைப்பாளர் துஷாரி தமயந்தி உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். (ன)

Read More

நாடாளுமன்றில் இன்றும் குழப்பம்

அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமையும் உறுப்பினர்களால் குழப்பநிலை ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகரால், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற, நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் போலியானவை என, இன்றைய தினத்திலும் வாத விவாதங்கள் ஏற்பட்ட நிலையிலேயே, சபை அமர்வு, 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Read More

மோதல்களின் மத்தியில் ஈராக்கில் புதிய அரசு பதவியேற்பு

ஈராக்கில் மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில் அந்த நாட்டில்  ஒன்றிணைந்த புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கின் புதிய பிரதமராக ஹைதர் அல் அபாதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சுன்னி மற்றும் குர்திஷ் இனக்குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிப் பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஈராக்கின் பாதுகாப்பு அமைச்சராக ஹைதர் அல் அபாதி செயற்படவுள்ளதோடு இப்ராஹிம் ஜபாரி வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார் பல அரசியல் முட்டுக்கட்டைகளுக்கு பிறகே ஈராக்கில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. ஈராக்கில் புதிய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பினை வெளியிட்டு வந்த ஸலேஹ்…

Read More

நிதி மோசடிப் பிரிவிற்கெதிரான மனு இன்று விசாரணை

நிதி மோசடி விசாரணைப்  பிரிவிற்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்கள் இன்று (9) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அரசியல் அமைப்பிற்கு  விரோதமாகவும், சட்டத்திற்கு முரணான வகையிலும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பேராசிரியர் காலோ பொன்சேகா மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோரால்  தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. புதிய அரசாங்கம் ஆட்சியேற்ற பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம்…

Read More

அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர்

முச்சக்கர வண்டி உட்பட அனைத்து வாடகை வாகனங்களுக்கும் மீட்டர் செயற்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. வாடகை வாகனங்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டிற்கு அமைய இந்த திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மேல் மாகாணத்தில் மாத்திரம் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் செயற்திட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு.!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read More

2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம்!

அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி. ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார். 2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார். அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். (TO)

Read More

இன்று மீண்டும் மழை பெய்யும்!

நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின்…

Read More

கோட்டாபய குறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணை

2006ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது. இதன்படி அந்த வழக்கை ஜூன் மாதம் 27ம் திகதி விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதோடு, அன்றையதினம் சாட்சியமளிக்க கோட்டாபயவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Read More