Headlines

கல்பிட்டியில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த தவிசாளர் முஜாஹிர்!





வடமாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து, கல்பிட்டி அல்-மனார் கிராமத்தில் வசித்துவரும், தலைமன்னார் பியர் வட்டார மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ். எச். எம்.முஜாஹிர் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமது சொந்த மண்ணில் குடியேற இருக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தவிசாளரிடம் எடுத்துக்கூறினர்.

இவர்களின் பிரசினைகள் தொடர்பாக வெகுவிரைவில் கட்சித் தலைமையோடும், உரிய அதிகாரிகளுடனும் பேசி நல்ல முடிவினை தருவதாகவும், இந்த சந்திப்பின் போது தவிசாளரினால் முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  அல்-மனார் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்களும் கலந்துகொண்டனர்.

(ஐ)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *