இலங்கைக்கு மேலதிகமாக 2500 ஹஜ் கோட்டா வழங்குங்கள் – ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு மேலதிகமாக 2500 ஹஜ் கோட்டா வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சவூதி ஹஜ் அமைச்சருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதம் நாளை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இக்கடிதம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையின் தூதுவர் ஊடாக சவூதி ஹஜ் அமைச்சருக்கு கையளிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்கு இவ்வருடம் 2240 ஹஜ் கோட்டா சவூதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு 28 ஹஜ் முகவர்களினூடாக பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலைமையிலே…
