Headlines

மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!





-ஊடகப்பிரிவு-

மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இடம்பெற்ற (03) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் சுமார் 20 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலும், மூதூர் மக்களின் விடிவுக்காக எந்த விதமான நடவடிக்கைகளையும், இத்தனை வருட காலமும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்ளாத நிலையிலேயே, தாம் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மூதூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் அலையலையாகத் திரண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *