Headlines

அமைச்சர் றிஷாத் பதியுதீன் மருதமுனைக்கு விஜயம்




அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இன்று ஞாயிற்றுக் கிழமை மருதமுனைக்கு விஜயம் செய்கிறார்.

கல்முனை வடக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று மாலை 04 மணிக்கு மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் சிறிய கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு மருதமுனை மக்கள் அனைவரும் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடல் நிகழ்வின் போது மைகோப் குழுமத்தின் தலைவரும் தொழில் அதிபருமான சித்திக் நதீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்ளவுள்ளார்.

இதனையடுத்து மருதமுனை பிரதேசத்தில் அ.இ.ம.கா வை முன்னெடுப்பது தொடர்பிலான கல்முனை வடக்கு இளைஞர் அமையத்திற்கும் – அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடல் அமையத்தின் தலைவர் ஏ.எச்.எம் பூமுதீனின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிபிபடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *