Headlines

ஜனாதிபதியிடம் பேசி எமது பிரச்சினைகளை தீர்ப்போம்-அமீர்அலி

முஸ்லீம்களது உள்வீட்டுப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டு முஸ்லீம் கட்சியொன்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் எமக்கென்று ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு அல்லது கதைப்பதற்கு எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமே செல்வோம். என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அமீர்அலி தெரிவித்தார்.  மேற்கண்டவாறு நேற்று இரவு மட்டக்குழியில் உள்ள அலி வத்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் செனவிரத்தின அவர்களை ஆதரித்து உரையாற்றும்போதே இவ்வாறு அமீர் அலி தெரிவித்தார். தற்போதைக்கே கொழும்பில் பாயிசும், செனவிரத்தினவும்…

Read More

மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் முஸ்லிம் பாடசாலைக்கு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்வு

மறிச்சுக்கட்டி அல் ஜாசிம் முஸ்லிம் பாடசாலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை (RO Plant) கையளித்த போது…  

Read More

‘அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடனும் வாழ்வதற்கு நாம் இறைவனை பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் அமீர் அலி!

நோன்பு பெருநாளை கொண்டாடும் இப்புனித நாளில் அனைத்து இன மக்களும் இன ஒற்றுமையுடனும், சகோதர மனப்பான்மையுடன் வாழ்வதற்கு அனைவரும் இறைவனை பிராத்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதியமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இன்று பெருநாளை கொண்டாடும் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒரு மாத காலம் பசித்திருந்து, விழித்திருந்து நற்காரியங்களில் ஈடுபட்டது போல் தொடர்ந்தும் எமது மார்க்கம்…

Read More

மாலத்தீவில் நடைபெறும் சம்பவங்கள் கவலையளிக்கின்றன – இந்தியா

மாலத்தீவின் முன்னாள் அதிபரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான முகமது நஷீத் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது நிரூபணமாகியுள்ளதாக கூறி, அவருக்கு 13 வருட சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மாலத்தீவின் அதிபராக முகமது நஷீத் இருந்தபோது, அந்நாட்டின் கிரிமினல் நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா முகமதை கைது செய்ய உத்தரவிட்டார் என்றும், அவர் மீதான இக்குற்றசாட்டை போலீஸ் தரப்பு சட்டப்பூர்வமாக நிரூபித்ததாக கூறிய அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு 13 வருட சிறை தண்டனையை விதித்தது….

Read More

தென்பகுதி மீனவர்களுக்குத் தடை

முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபடும் புதிய தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதியளிக்க வேண்டாம் என்று மீன்பிடி அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவிலுள்ள மீன்பிடி திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த சமரவீர நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். அப்போது வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு கடற்பரப்பில் தென் பகுதி மீனவர்கள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதால் முல்லைத்தீவைச்…

Read More

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழா

மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 5 வது வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் சாலி. பிரதி கல்விப்பணிப்பாளர் அஷ்ரப், இஸ்மா லெப்பை, கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜுனைட், உதவித் திட்டப்பணிப்பாளர் றுவைத் , முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுபையிர் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.மஹ்றுப் தலைமையில் இடம்பெற்றது.

Read More

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…

Read More

ஒரு அகதியின் குரல் அகதிகளுக்காக ஒலித்தது

இப்றாஹிம் மன்சூர் அமைச்சர் ஹக்கீம் வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் ஏன் இந்தளவு அசிரத்தையாகவுள்ளார் என்ற சிந்தனை அடிக்கடி மேலெழும்.அதற்கான விடையை நேற்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியை பார்க்கும் போது பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. அமைச்சர் றிஷாத் ஒரு அகதி.அந்த அகதிகளுக்கு ஒரு துன்பம் என்றால் அது அமைச்சர் றிஷாதிற்கும் தான் என்ற விடயத்தை அவர் இன்று நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான வெளிச்சம் நிகழ்ச்சியில் பார்க்கக் கூடியதாக இருந்தது.அவரது பேச்சுக்களில் தன்னை…

Read More

ஆர்.எஸ்.எஸ். – பொது பலசேனா; ஆகிய தீவிரவாத அமைப்புகள் பேச்சு!

இந்தியாவின் கடும்போக்கு இந்து ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைந்து தென்னாசியாவில் பௌத்த இந்து சமாதான வலயத்தை அமைக்கும் வகையில் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பொதுபலசேனா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் பிராந்தியத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும் என்று பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இந்தியாவில் உள்ள பௌத்த அமைப்புக்களுடனும் தமது அமைப்பு பேச்சு நடத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார். ராஸ்ரிய சுவாயமசேவான் சங்க் என்ற ஆர்எஸ்எஸ் அமைப்புடன் கூட்டணி அமைக்க தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் தேரர்…

Read More

மாணவர்கள் தாக்குதல் விவகாரம்: பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

 கணக்கியல் உயர் டிப்ளோமா மாணவர்களின் தாக்குதலுடன் தொடர்புடைய  கடைநிலை பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனுக்கு அறிவித்துள்ளதாக, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று தெரிவித்தது. மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, நேற்று வியாழக்கிழமை(26) நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் என்.ஆரியதாஸ தெரிவித்தார். இறுதி முடிவு, நேற்று வியாழக்கிழமை(26) இடம்பெற்ற விஷேட கூட்டத்தில்…

Read More

இன்று நாடு திரும்பபும் இலங்கை அகதிகள்

தமிழகத்தின் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 45 பெண்கள் உட்பட 45 பேர் இன்று இலங்கை திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து ஆகம விவகாரங்களுக்கான அமைச்சு கூறியுள்ளது. இவர்களுக்கான இலவச விமானச் சீட்டு வழங்கப்படுவதுடன், மீள்குடியேற்றத்திற்கான ஒரு தொகை பணமும் நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட அமைதி நிலையைத் தொடர்ந்து 2015ஆம்…

Read More

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.இதேவேளை…

Read More