முசலி, கூலாங்குளம் கிராமத்துடனான சந்திப்பு
முசலி, கூலாங்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.
முசலி, கூலாங்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.
கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நேற்று (25) பாம்பொன்று காணப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது. நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அநேகமாக பூர்த்தியாகியிருந்த போதிலும் அலுவலக நடவடிக்ககைள் இடம்பெற்று வந்த போது, திடீரென நீதிமன்றக் கட்டடத்தின் நான்காம் மாடியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நான்காம் மாடியில் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறைகள் காணப்படுவதனால் அதற்குள் பிரவேசிக்க வெளிநபர்களுக்கு அனுமதியில்லை. நீதவான் ஒருவர் உத்தியோகபூர்வ அறைக்கு…
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்க்கு வருகைதந்தனர். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிற்கும் விஜயம் மேற்கொண்டதுடன் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடினர். இக்குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை அவருடைய அலுவலகத்தில் மதியம் சந்தித்து முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
வங்காளதேச முன்னாள் பிரதமரான கலிதா ஜியா தனது ஆட்சிக்காலத்தின்போது அரசு பணத்தில் சுமார் ஆறரை லட்சம் அமெரிக்க டாலர்களை சுருட்டியதாக அவர் மீது இரு ஊழல் வழக்குகளை தற்போதைய ஷேக் ஹசினா தலைமையிலான அரசு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் கோர்ட்டுக்கு வராததால் கடந்த மாதம் 25-ம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது, இந்த கைது வாரண்டை ரத்து செய்யும்படி கலிதா ஜியாவின் வக்கீல் இன்று நீதிபதியிடம் மனு தாக்கல்…
சவூதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவூதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 1. தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 2. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract paper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 3. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால்…
முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி,…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இறக்காமம் பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளன. இறக்காமம் பிரதேச சபையின் உப தவிசாளர் இப்பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார், இதில் முஸ்லிம் சமூகத்தின் தேசிய அளவிலான தலைவராக றிசாட் பதியுதீன் மக்களால் பார்க்கப்படுகிறார். அ.இ.ம.கா கட்சி தற்போது மக்களின் ஆதரவை அதிகம் பெற்ற கட்சியாகவும் ,அதன் தலைவரான றிசாட் பதியுதீன் சிறந்த தலைவராக சமூகம் ஏற்று அரசியலில் பின்பற்றுகிறது. எமது முஸ்லிம்…
அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தினால் (CMA) ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய முகாமைத்துவ கணக்காளர் மாநாடு- 2016 மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கணக்கியல் துறையில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் நேற்று (11) மாலை கொழும்பு சினமன் )லேக் ஹோட்டலில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியூதீன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் விருதுகளையூம் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் வட்டவல தலைமை வகித்த இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நிதியமைச்சர்…
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார்,…
சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் வெவ்வேறு விபத்து சம்பவங்களில் காயமடைந்த 938 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பயிற்சிப் பிரிவின் தாதி புஷ்பா ரம்யானி டி சொய்சா கூறினார். எவ்வாறாயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் கூறினார்.
சொத்து எப்படி சம்பாதிக்கப்பட்டது என்பதை வெளியிட முடியாது போன மேலும் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்கும் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது. ஒருவரிடம் இருக்கும் சொத்து எப்படி வாங்கப்பட்டது என்பதை அவர் உறுதிப்படுத்த தவறினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் அந்த சொத்து அரசுக்கு சொந்தமாகும். அத்துடன் அவ்வாறான சொத்துக்களை கொள்வனவு செய்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் ஏற்பாடுகள்…