Headlines

இந்திய மீனவர்களின் கைது தொடரும்




இலங்கை மீனவர்கள் பிரச்சணைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் வரையில் இந்திய மீனவர்களின் கைது தொடரும் என தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர , எதிர்வரும் மே மாதத்தில் இந்தியா சென்று மீனவர்கள் பிரச்சணை தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய நிதியுதவியின் கீழ் முல்லைத்தீவு மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் மற்றும் படகுகள் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் வை.கே.சிங்ஹா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *