Headlines

அரசாங்கத்துடனான பேச்சுக்கு தயார் – தமிழ்க் கூட்டமைப்பு

இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்​தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read More

தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு முல்லையில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்க ரிஷாட் நடவடிக்கை

முல்லைத்தீவில் மீள்குடியேறி, வீடில்லாமலும், காணிகள் இல்லாமலும் கஷ்டப்பட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியால், துபாய் அரசின் நிதியுதவியுடன், 120 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் யாசீன் ஜவாஹிர் தலைமையில், முல்லைத்தீவு ஹிஜ்றாபுரத்தில், கடந்த திங்கட்கிழமை (03) இடம்பெற்ற போது பிரதம அதிதியாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கடந்த  மே மாதம் ஐக்கிய அரபு…

Read More

“இன, மத, கட்சி பேதமற்ற அபிவிருத்திகள் தொடரும்” அப்துல்லா மஹரூப் எம்.பி

இன, மத, கட்சி பேதமற்ற அரசியல் அபிவிருத்தியை திருகோணமலை மாவட்டத்தில் எனது ஆரம்ப காலம் தொட்டு நடை முறைப் படுத்தி வருகிறேன் இன்றும் அதைத்தான் செய்து வருகிறேன். இனக் குரோதமற்ற சமாதான சூழலினை உருவாக்க திருகோணமலை மாவட்ட மூவின மக்களும் உறுதி பூண்டுள்ளார்கள் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். பதவிசிறிபுர பகுதியில் ஐந்து வீதிகளுக்கான கொங்ரீட் இடும் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றுகையில்,…

Read More

தம்மாலோக்க தேரருக்கு பிணை

உடுவே தம்மாலோக்க தேரரை பிணையில் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை சட்டவிரோதமாக பராமரித்து வந்தமை தொடர்பில் தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.

முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் தீர்மானமெடுக்கும் முக்கிய கலந்துரையாடல்  பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது. இதன் போது, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தலைமையில் விரிவான ஆராய்வுகள் முன்னெடுக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பைஷர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர்களான அமீர் அலி, செய்யித் அலிஸாஹிர் மௌலானா, எச்.எம்.எம். ஹரீஸ்,…

Read More

இலங்கை வருகிறார் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வார் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஆகஸ்ட் முதல் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களுக்கான கட்டணங்களை ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி பஸ் கட்டணங்கள் நூற்றுக்கு 6 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும், குறைந்த கட்டணமாக 9 ரூபாய் அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளமையாலே கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக,கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே கூறியுள்ளார்.

Read More

கர்நாடகம் செல்லும் மன்னார் மாவட்ட வீரர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனுடன் சந்திப்பு

இந்தியா கர்நாடகாவில் நாளை ஆரம்பமாகவுள்ள மூன்றாவது ஆசியன் ரோல் பந்து போட்டியில் பங்கேற்கும் இலங்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள மன்னார் மாவட்ட வீர, வீராங்கனைகள் இன்று (20) காலை வட மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்டாகால இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான ரிப்கான் பதியுதீனை சந்தித்தனர். 18 பேர் அடங்கிய இலங்கைக் குழுவில் மன்னாரில் முன்னணிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் 4 வீரர்களும், 3 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்….

Read More

நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை

நேபாள அரசு மேகி நூடுல்சின் விற்பனைக்கும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடைவித்து உத்தரவிட்டுள்ளது. மேகி நூடுல்சில் உடலுக்கு கேடு விளைவிக்கும் காரீயமும், சுவை கூட்டும் மோனோ சோடியம் குளூட்டோமேட் ரசாயனமும் அதிக அளவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டெல்லி, தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மேகி நூடுல்ஸ் விற்பனையை தடை செய்துள்ளது. தற்போது ராணுவத்திலும் மேகி நூடுல்சை சாப்பிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாளத்தில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விவசாயத்துறை அமைச்சக…

Read More

புதிய வற் சட்டமூலம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிப்பு

வற் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது தடவை இதுவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை, அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக்காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதியன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது. இதில், முன்னைய சட்டமூலத்தை காட்டிலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

Read More

இடம்பெயர்ந்த வாக்காளர்களின் மீளப் பதிவு தொடர்பில், உதவி தேர்தல் ஆணையாளருக்கு வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை கடிதம்!

இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தமது பூர்வீக இடங்களில் மீளப் பதிவு செய்தல் தொடர்பில், வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் பேரவை, மன்னார் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. குறித்த பேரவையின் தலைவர் எஸ்.எச்.அப்துல் மதீன் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களான என்.ஜே.அபேசேகர, பேராசிரியர் எஸ்.ஆர்.எச்.ஹூல் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு…

Read More

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம்… அமைச்சர் ரிஷாட், ஹஸன் அலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்!

சுஐப் எம்.காசிம்   அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள  ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இன்று காலை (10)…

Read More