Headlines

நாமல் ராஜபக்ஸவுக்கு, டியூசன் கொடுக்க தயாராக இருக்கிறேன் – சஜித்




முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் தொடர்பில் எவ்வித விழிப்புணர்வு இல்லை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமையினால் அவருக்கு மேலதிக வகுப்புக்களை வழங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
பொது மக்களின் பாதுகாப்பு அரசியல்வாதிகளின் பொறுப்பு.  நாங்கள் செய்யும் நல்ல வேலைகளினால் பொறாமையில் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தாமல் தங்கள் பாடங்களை மாத்திரம் கற்றுக்கொள்ளுமாறு அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
சாதாரண மக்களின் வியர்வையினை அறிந்துக்கொண்டு செயற்பட வேண்டும். மக்களின் தேவைகளை நாங்கள் அறிந்து அதனை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *