Headlines

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு




– ஜவ்பர்கான் –

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிவனேசத்துரை சந்திரகாந்தனை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இன்று காலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுவரப்பட்ட பிள்ளையான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்த 2005.12.25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கடந்த 09.10.2015 அன்று கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பிலிருந்து பிள்ளையான் மட்டக்களப்புக்கு  அழைத்துவரப்படுவதையொட்டி மட்டக்களப்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *