Headlines

யாழ் தமிழ் பிரதேச மக்களை சந்தித்த உறுப்பினர் நிலாம்!




-எப்.சனூன்-

யாழ்ப்பாணம் கமால் ஒழுங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை கண்டறியும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம்.நிலாம், நேற்று (09) அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்தார்.

அந்தப் பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய உறுப்பினர் நிலாம், அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்தாலோசித்தார்.

இந்த சந்திப்பின்போது, மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட முக்கியஸ்தர்களான ஆர்.கே.சுவர்கஹான் மற்றும் எம்.எச்.எம் சினாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *