வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் நாளை உயர்மட்டக் கூட்டம், ஜனாதிபதி உறுதியளித்ததாக அஸாத் சாலி அறிவிப்பு
சுஐப் எம் காசிம் வில்பத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளை ஜனாதிபதி உயர்மட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத் சாலி கொழும்பு ரமதா ஹோட்டலில் இன்று (30) இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார். ”முசலி மக்களுக்கு இடம்பெற்றுள்ள அநியாயங்களை ஜனாதிபதியிடம் நான் விரிவாக எடுத்துரைத்தேன். அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த வர்த்தமானிப் பிரகடனம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மிகவும் காட்டமாக எடுத்துரைத்துள்ளார். வட மாகாண மக்களின்…
