Headlines

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலை மேலும் தரமுயர்த்தி தருவதாக அமைச்சர் றிசாட் வாக்குறுதி.





 

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையை சிறந்த வைத்தியசாலையாக மாற்றி தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் ரிசார்ட் பதியுதீன் வாக்குறுதி அளித்துள்ளார்.

நேற்று (11) இரவு 10.30 மணியளவில் ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அமைச்சர்.ரிசாட் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சரும் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அமீர அலியும் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிரருந்தனர்.

இதன்போது கூட்டுறவு வைத்தியசாலையின் நிர்வாகத்தினருடனான இடம்பெற்ற கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மட்டு மாவட்ட இணைப்பாளரும் ஏறாவூர் கூட்டுறவு சங்கத்தின் பொது முகாமையாளருமான லத்தீப் ஹாஜியார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இன்னும் சில மாதங்களில் அம்பியூலன்ஸ் வசதி மற்றும் கூட்டுறவு கடன் நிதியத்திலிருந்து சுமார் 3 கோடிரூபாவும் பெற்று தருவதாக உறுதிபூண்டிருந்தார்.

இவ் வசதிகளினூடாக இவ் வைத்தியசாலையை மிகச்சிறந்த கூட்டுறவு வைத்தியசாலையாக மாற்றியமைத்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *