News
அஸ்வர் ஹாஜியாரிடம் அன்பான வேண்டுகோள்!
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகத்தை முன்னாள் அமைச்சர் அஸ்வர் ஹாஜியார் கிழித்து எறிந்ததையிட்டு ஆச்சரியப்படுகின்றேன். முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களால் எழுதப்பட்ட அல்-ஜிஹாத் அல்-காஇதா என்ற புத்தகம் சுமார் 15 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்டதாகும். அப்பொழுது முஸ்லிம் அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கண்டனம் தெரிவித்து மறுப்பு எழுதினார்கள். அக்காலத்தில் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் பின்னர் அமைச்சராகவும் இருந்த அஸ்வர் கிறுக்காஜியார் எந்தவொரு நடவடிக்கையை எடுக்கவோ, வாய்பேசவோ இல்லை….
முஸ்லிம் பாடசாலைகளுக்கு, 3 நாள் விடுமுறை
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் காரணமாக அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை பிரிவு, எதிர் வரும் ஓகஸ்ட் 17-19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தெரிவித்துள்ளதோடு, ஓகஸ்ட் 20ஆம் திகதி மீண்டும் பாடசாலைகளை திறக்குமாறும் தெரிவித்துள்ளது
யானை மீது ஏறிக்கொண்டு மரத்தைக் காப்பாத்துமாறு கூறுகின்றனர் – சிராஸ்
– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்ன ஐந்தாம் இலக்க வேட்பாளருமான சிராஸ் மீராசாஹிப் சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடு வீடாக சென்று தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்போது சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரும் ஆதரவுடன் அன்பாக வரவேற்று ஆசீர்வதித்தனர். இச்சந்தர்ப்பத்தில் மக்கள் கருத்துத்தெரிவிக்கையில் பதினைந்து வருடங்கள் அரசியல் அதிகாரத்தை முஸ்லிம் காங்கிரஸ் வைத்திருந்தபோதிலும் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தவிதமான பிரயோசனமும் இருக்கவில்லை. எதனையும் செய்யாத இவர்கள்…
மஹிந்த புலிகளுக்கு 169 மில்.ரூபா வழங்கியது ஊர்ஜிதம்
மஹிந்த – பசில் மறுக்கவில்லை தேசத்துரோகத்துக்கு கடும் தண்டனை ;சொத்துக்களை முடக்கி பிரஜாவுரிமையை இரத்துச் செய்யவும் சட்டத்தில் இடம் அரசியலமைப்பின் 6 ஆவது திருத்தத்தின் பிரகாரம் இலங்கைக்குள் தனியான இராஜ்ஜியம் உருவாக்க நிதி உதவி வழங்கும் நபரின் பிரஜா உரிமை 7 வருடங்களுக்கு ரத்துச் செய்யப்படுவதோடு சொத்துக்கள் யாவும் அரசுடமை யாக்கப்படும். இந்த நிலை மஹிந்த ராஜபக்ஷவுக்கும் டிரான் அலஸ¤க்கும் ஏற்படும் என ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். தான் பிரதமராக…
பொத்துவில் மன்னுக்கு கிடைக்கின்ற வெற்றியில்தான் எதிர்காலமே இருக்கின்றது – SSP மஜீத்
மஜீத் அவர்களை ஆதரித்து ஏற்பாடு செய்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பொத்துவில் பாக்கியவத்தையில் நேற்று (10) இடம் பெற்றது. இக்கூட்டத்தில் பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தின் போது முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் எஸ்.எஸ்.பீயுமான எம். அப்துல் மஜீத் உரையாற்றுகையில்…. பொத்துவில் மக்களாகிய எங்களுக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை இலகுவாக பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது இச்சந்தர்பத்தை தவர விடாமல் நீங்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்து இந்த ஊர் மன்னை காப்பாற்றுங்கள்….
இலங்கையை கைப்பற்ற ISIS திட்டம் -BBC
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் எதிர்வரும் 05 வருடத்தினுள் உலக நாடுகளில் பெரிய அளவிலான பகுதியை கைப்பற்றிக் கொள்வதற்கு திட்டமிட்டுள்ள வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பி.பி.சி செய்தி சேவையினால் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் உலகின் பல நாடுகளை கைப்பற்றிக்கொள்வதற்கு இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பி.பி.சி ஊடகவியலாளர் அன்ட்றூ ஹோக்ஸ்சன் என்பவரினால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவ் வரைபடத்திற்கமைய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் பகுதிகளில் ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆபிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் ஆசியாவின் சில…
இன்று மாலை மகிந்தவின் விடயங்களை அம்பலப்படுத்துவேன் – சம்பிக்க
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு பணம் கொடுத்தமை தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை மாலைவேளையில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அம்பலப்படுத்த உள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அமீர் அலியின் பிரசாரக்கூட்டத்திலும், காரியாலயத்தில் ஆதரவாளா்கள் மீது கடும் தாக்குதகள்
மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் வன்முறை அரசியல் கலாசார நடவடிக்கைகளை தவிர்த்து தேர்தல் சட்ட விதிகளுக்கமைவாக பாராளுமன்ற தேர்தலினை நடாந்த வேண்டும் என்ற முனைப்புடன் உறுதியாக மக்கள் மணதினை வென்று கல்விமாண்கள்’,உலமாக்கள், பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று வன்முறையற்ற சிறந்த அரசியல் நடவடிக்கையில் பிரதியமைச்சர் ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளா் அமீா் அலி ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. வாழைச்சேனையில் இடம் பெற்ற பிரதியமைச்சா் அமீா் அலியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சரின் வாகணத்தை இலக்கு வைத்து ஏறியப்பட்ட…
இன ஐக்கியத்தை ரணிலால் மட்டுமே ஏற்படுத்த முடியும்
இலங்கைக்கு எதிரான சர்வதேச சவால்களுக்கு முகம் கொடுக்கவும், ஒன்றிணைந்த நாட்டுக்குள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே முடியும். ஜனநாயகத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே நாட்டுக்கு எதிரான சவால்களை வெற்றிகொள்ள முடிந்தது என ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தவறியேனும் மஹிந்த ராஜபக்ஷ வென்றிருந்தால் நாட்டில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கும். வடக்கில் தொடர்ந்தும் அடக்குமுறை கையாளப்பட்டிருந்தால் மற்றும் இராணுவ சப்பாத்துகளில் தமிழ் மக்களை அடக்கி வைத்திருந்தால் இன்று நாட்டில் மீண்டும்…
70 ஆயிரம் பொலிஸார் கடமையில்
எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். கஹவத்தை தொடர் கொலை சம்பவம் தனக்கு நினைவில் உள்ளதாகவும் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டு வரும் செயல்முறை துரிதப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். மேலும்,…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின், வாக்குரிமை மீறப்படுவது குறித்து முறைப்பாடு
இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் வரை தேர்தல் ஒன்று நடாத்தக் கூடாது என்பதுதான். ஏனைய வெளிநாட்டுக் குழுக்களும் சங்கங்களும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம். வெளிநாடுகளில் வாழும் 20 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வது எந்த விதத்தில் ஜனநாயகமாகும். மாப்பிள்ளை இல்லாமல் ஒரு…
