News
அல்-அக்ஸா பள்ளி வாசலின் இமாம் வபாத்!
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுஊன் . பலஸ்தீன அல் அக்ஸா பள்ளிவாசலின் இமாம் வபாத் ஆகி விட்டார்கள். அவர்களுக்காக துவா செய்யுங்கள். அவர் இந்த உலக வாழ்கையை விட்டு போகும்போது கூட அவரின் முகத்தை பாருங்கள் எவ்வளவு பிரகாசமாக உள்ளது, மறுமையிலும் அல்லாஹ் பிராகசத்தை கொடுத்து சொர்க்கம் அடைய செய்ய நாம் துவா செய்வோம்.
இரும்பு திரையும் கடந்து சீனாவில் வளர்ந்து வரும் இஸ்லாம்!!
– சையது அலி பைஜி – உலகில் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது சீனாவாகும் சீனாவின் பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர் இஸ்லாத்தை முறையாக அறிந்து கொள்ளகுடியவர்கள் இஸ்லாத்தில் தங்களை இணைத்து கொள்வதாலும் சிந்திக்ககுடியவர்களின் புகலிடமாக இஸ்லாம் இருப்பதாலும் பொது உடமை தத்துவத்தின் புதைகுழியாக இஸ்லாம் இருப்பதாலும் இஸ்லாம் தொடர்ப்பான செய்திகள் சீனர்களை அதிகம் சென்று அடையாத விதத்தில் இஸ்லாமிய தகவல்களுக்கும் சீனர்களுக்கும் இடையே ஒரு இரும்பு திரையையே சீன…
ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களும் ஏழைமனிதரும்!
மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம்.எங்குமே பேரமைதி. இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம்…
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து 1199 முறைப்பாடுகள்
தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து ஆயிரத்து 199 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. அரச வளங்களை முறையற்ற விதத்தில் தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியமை குறித்து 155 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. அதிக படியாக 254 முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு 3,40,926 மாணவர்கள்
2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 40 ஆயிரத்து 926 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் புலமைப்பரிசில் வழங்குவதற்குமாக தரம் 5 மாணவர்களுக்காக நடத்தப்படும் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2 ஆயிரத்து 907 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 2 இலட்சத்து 54 ஆயிரத்து 373 மாணவர்கள் சிங்கள மொழி…
அம்பாறை மாவட்ட கரையோர நிர்வாக அலகைப் பெற்றுக் கொடுப்பேன் – அமைச்சர் றிஷாத்
முஸ்லிம்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளாமல் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை வரலாற்றுத் துரோகமாகும். மீண்டும் அதனை இணைப்பதற்கான எந்தத் தேவையும் கிடையது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்க தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எமது கட்சிக்கு இரு ஆசனங்களைப்…
மன்சூர் சஹ்னாஸ் அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் முதல் இடம்
– கே.அஸீம் முஹம்மத் – அனுராதபுர மாவட்ட கெக்கிராவ கல்வி வலையத்தின் ஹோறாபொல முஸ்ஸீம் வித்தியாலய மாணவி மன்சூர் சஹ்னாஸ் அகில இலங்கை தமிழ் தினப்போட்டியில் எழுத்தாக்கம் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்
அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் இறுதிநாள் இன்று
பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான தேசிய அடையாள அட்டைகள் இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டை வழங்கும் கால எல்லை இன்றுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இதன்படி தேர்தலில் வாக்களிக்க உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள், இன்றைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பிரதேசத்திற்கான கிராம சேவகர் அல்லது அருகிலுள்ள தேர்தல்கள் செயலக அலுவலகத்தில் குறித்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தற்காலிக அடையாள அட்டைகள் மாவட்ட செயலகத்தினால் மாத்திரம் விநியோகிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அஷ்ரப் விட்டுச் சென்ற கொள்கைகளை மு.கா. மறந்து செயற்படுகின்றது – றிஷாத் பதியுதீன்
மறைந்த மாமனிதர் அஷ்ரப் அவர்கள் விட்டுச் சென்ற பணியினையும்,கொள்கையினையும் மறந்து செயற்படும் தற்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தை நம்பி மருதமுனை மக்கள் மீண்டும் அவர்களுக்கு வாக்களிப்பீ்ர்கள் என்றால்,எதிர்வரும் ஆறு வருடங்களுக்கு நீங்கள் கைசேதப்பட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதமுனை கடற்கரை மைதானத்தில் நேற்று இரவு இடம் பெற்ற பிரமாண்டமான…
அமீர் அலியின் வெற்றிக்காக மட்டக்களப்பில் ரணில் பிரச்சாரம்
– அனா – நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக் கூட்டம் (09.08.2015) மாலை ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் றிஸாட் பதியுதீன், மேல்மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய…
தெஹிவளை பள்ளிக்கு அருகில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட தெஹிவளை பள்ளிவாசலுக்கு அருகில் பொது மக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு 1.00 மணியையும் தாண்டியும் அ.இ.மா.கா. கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
– எம்.சி.அன்சார் – திகாமடுல்ல மாவட்த்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படத்தும் மாபெரும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று முன்தினம் (08) சம்மாந்துறை மல்கம்பிட்டி வீதியில் மீயன்னா சந்தியில் இடம்பெற்றது. அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் தலைவரும். அமைச்சருமான ரிசாத் பதியுதீன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ். சேகு இஸ்ஸதீன், பிரதியமைச்சர் எம்.எஸ். அமீர் அலி, அகில இலங்பை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து…
