News
அஸ்வர் ஹாஜியாருக்கு தொலைபேசி அச்சுறுத்தல் விவகாரம்.. தொலைபேசி இலக்கத்திற்கு சொந்தக்காரரின் அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வுடன் சேர்த்து தன்னையும் கொலைசெய்வதாக தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகதத் தெரிவித்து முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இதன்போது வெளியிட்டிருந்த தொலைபேசி இலக்கங்களில் எனது காரியாலய இலக்கமும் இருந்ததுடன் எனக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நேற்றைய தினம்(2015.08.12) பத்திரிகைகள், இணயதளங்கள் வாயிலாக இந்தச் செய்தி வெளியாகியிருந்தது. நான் ஓர் ஊடகவியலாளர் என்ற ரீதியில் எனக்கும் அஸ்வர் ஹாஜியாருக்கும் நல்ல தொடர்பும், புரிந்துணர்வும் இருக்கின்றது….
இந்த தேர்தலானது நன்மைக்கும், தீமைக்கும் இடையிலானது – சோபித தேரர்
எதிர்வரும் 17 ஆம் திகதி தகுதியானவர்கள் தெரிவு செய்யும் பாரிய பொறுப்பு வாக்காளர்களிடம் இருப்பதாக சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். புறக்கோட்டையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தகுதியானவர்களை சில கட்சிகள் நிறுத்தவில்லை என்பதால், வாக்காளர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நல்லவர்களுக்கு மாத்திரம் வாக்களியுங்கள். இந்த தேர்தலானது நபர்களுக்கு இடையிலான தேர்தல் அல்ல. கட்சிகளுக்கு இடையிலான…
அரசியலில் இருந்து ரணில், விலக வேண்டுமென்பதே எனது எதிர்பார்ப்பு – மஹிந்த ராஜபக்ஸ
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ பாதுக்கையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். இதன்போது, விமல் வீரவன்சவின் மனைவியின் கடவுச்சீட்டில் ஒரு எண் பிழையாக இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என கேள்வியெழுப்பினார். அத்துடன், ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மாஅதிபரின் பணியைச் செய்வதாகவும் அவர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
சவுதி அரேபிய, இளம் பெண்களின் முன்மாதிரி
அமெரிக்காவில் மேல்படிப்புக்காக சென்ற இந்த பெண்கள் தங்களின் கல்லூரி ஓய்வு நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனமாக பரிணமித்து பல அரிய பணிகளை தங்கள் நாடான சவுதி அரேபியாவில் செய்து வருகின்றனர். இந்த அமைப்பின் பெயர் Joy of Youth (JOY). இந்த அமைப்பின் முக்கிய பொறுப்பிலுள்ள வாலா அபு சபீன் கூறுகிறார் ‘ஜெத்தாவில் விவாகரத்து பெற்று மூன்று குழந்தைகளோடு வறுமையில் வாடி வரும் ஒரு…
எனது தந்தை பிரதமராவதை தடுக்கமுடியாது – நாமல்
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியடையும் முஸ்லிம் தலைவர் பதவியை இராஜிநாமா செய்ய வேண்டும் -சேகு இஸ்ஸதீன்
அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறத்தவறும் கட்சி எதுவாக இருந்தாலும், அந்தக் கட்சியின் தலைவர் தமது தலைவர் பதவியை கௌரவமான முறையில், காலம் தாழ்த்தாது இராஜினாமாச் செய்துவிட்டு, பொது முஸ்லிம் தலைமைத்துவத்துக்கு விசுவாசமாக உழைக்கும் ஒரு தொண்டனாக, விருப்பத்துடன் செயற்பட முன்வரவேண்டும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கூறினார். பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பாக அக்கரைப்பற்றில் ஆதரவாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்படி கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் – ஆகஸ்ட் 17 ஆம் திகதி…
அ.இ.ம.கா. இளைஞர் அணி ஒன்று கூடல்
– எம்.வை.அமீர் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் எதிர்வரும் 13.08.2015 பிற்பகல் 2.00 மணிக்கு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரசன்னத்துடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து இளைஞர் அணி உறுப்பினர்களையும் இவ் அணியில் இணைந்து கொள்ள ஆர்வமுள்;ள இளைஞர்களையும் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக விபரங்களை 0771896767 ஃ0754366738 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்….
“எனது வாழ்க்கையில் நடந்த, மிக மோசமான நிகழ்வு”
உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து சங்கக்காரா ஓய்வு அறிவித்தார். தற்போது இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் அவர் விடை கொடுக்கவுள்ளார். இலங்கை அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடிய சங்கக்காராவை சிறப்பிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலே மைதானத்தை சுற்றிலும் சங்ககாராவுக்கு கட்அவுட் வைத்து, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா, கிரிக்கெட்டில் அவர் சந்தித்த முக்கியமான தருணங்களை பகிர்ந்து கொண்டார். ” உலகக் கோப்பையுடன் …
வைத்திய மாணவர் 11 பேருக்கு நோட்டீஸ்
மருதானையில் இருந்து கொழும்பு கோட்டை ஊடாக ஜனாதிபதி செயலகம் வரையிலும் பேரணி நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் வைத்திய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் 11 பேரையும் எதிர்வரும் 28ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகேயே நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறி இவ்வாறு சட்டவிரோதமான முறையில் ஒன்றுதிரட்டி மக்களை துன்பத்துக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர்கள் நீதிமன்றத்துக்கு…
இரண்டு மாணவர்களது பெறுபேறு ரத்து
பரீட்சை மண்டபத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு சென்ற இரண்டு மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை ரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார். உயர்தர பரீட்சை கண்காணிப்புகளுக்காக 24 மணித்தியாலமும் அதிகாரிகள் குழு சகல பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் விஜயம் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட குழுவினரே இந்த கையடக்க தொலைபேசி விடயத்தை கண்டு பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
13 வருட கல்வி அவசியமாக்கப்படவுள்ளது – பிரதமர்
தமது ஆட்சிகாலத்தில் 13 வருட கல்வியை அவசியப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த காலத்துக்குள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்கள் இருக்குமாக இருந்தால் அதற்காக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்கள் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் மாணவர்களுக்கு முழு கல்வியையும் போதிக்கும் செயலை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர்
தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணிகளை ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளின் சங்கத்தினர் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். தேர்தல் செயலகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வந்துள்ளனர். தெற்காசிய தேர்தல் கண்காணிப்பு சங்கத்தின் 30 அதிகாரிகள் நாடளாவிய ரீதியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ளனர். இந்தநிலையில். ஐரோப்பிய சங்கத்தின் தேர்தல் கண்காணிப்பு காரியாலயத்தின் பணிகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
