Headlines

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின், வாக்குரிமை மீறப்படுவது குறித்து முறைப்பாடு




இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் வரை தேர்தல் ஒன்று நடாத்தக் கூடாது என்பதுதான். ஏனைய வெளிநாட்டுக் குழுக்களும் சங்கங்களும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
வெளிநாடுகளில்  வாழும் 20 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வது எந்த விதத்தில் ஜனநாயகமாகும்.  மாப்பிள்ளை இல்லாமல் ஒரு திருமணம் நடப்பது போலவே தோன்றுகிறது. 20 லட்சம் வாக்குகள் என்பது ஒரு அரசாங்கத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தியும் , தாமே 50 பிரதிநிதகளை பாராளுமன்றத்தில் உருவாககுடிய ஒரு சக்தியுமாகும். காலம் காலமாக இடம்பெயர் மக்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் என்று அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டே வருகிறதை நாம் அறிவோம். எமக்கென ஒரு தலைமையும் அமைப்பும் உருகாத வரை எதையும் வென்றெடுக்க முடியாது.
மேலும் நீங்கள் வெளிநாட்டில் உங்களுடைய வேலையை திடீரென்று இழந்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் நடுத் தெருவில் நிற்கவேண்ய ஒரு நிலையே இன்று தொடர்கிறது. மேலும் 1000 பிரசினைகளை நம்மகத்தே வைத்துக்கொண்டு தீர்வில்லாமல் , நமக்காக பேசும் ஒரு சக்தி இல்லாமல் தடுமாரிக்கொண்டிருக்கிறோம். நமக்கென ஒரு குரல் இருந்திருந்தால் றிசான ரபீக்கை காப்பாற்றி இருக்கலாம்.  எனவே ஒன்று படுவோம் . இன மத பிரதேச பேதங்கள் மறந்து வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் மற்றும் அவர்களின் குடும்பமும் நண்பர்களும் என்கின்ற ஒரு குடையின் கீழ யாவரும் இணைவோம் வாருங்கள்.
ரகீப் ஜௌபார்
தேசிய அமைப்பாளர்
Sri Lanka Migrant Workers Alliance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *