News
வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் பூர்த்தி
வருகின்ற 17ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்றுடன் நிறைவடைந்ததாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார். வீட்டை மூடி வைத்திருந்தவர்கள் மற்றும் வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கவில்லையாயின் அருகில் உள்ள தபாலகம் அல்லது உப-தபாலகத்துக்கு சென்று ஆள் அடையானத்தை உறுதிப்படுத்தி அதனை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் மூவரை விசாரிப்பதற்கு தடை
இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை, அரசியல் வாதிகளிடம் பொலிஸ் விசாரணைகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச விமல் வீரவன்ச மற்றும் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச ஆகியோருக்கு பாரிய நிதிமோசடி தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்திருந்த விசாரணைக்கான அழைப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது என பொலிஸ் தரப்பு நேற்று அறிவித்தது. எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு அரசியல்வாதியிடமும் மேற்படி பொலிஸ் பிரிவு விசாரணை நடத்தக்கூடாது…
சீன நாணயத்தின் மதிப்புக் குறைப்பு
சீனா தனது நாணயமான யுவானின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பை 2 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளது.கடந்த மூன்று வருடங்களில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு கீழே சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும். இம்மாதிரியான திருத்தம், தொடர்ச்சியாக செய்யப்படாது என்றும் ஒரு முறை மாத்திரமே செய்யப்படும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில், சீனாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், சீன மத்திய வங்கியின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியை மேம்படுத்த உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சீன…
தாஜுடீன் கொலை தொடர்பாக யசாரா அபேநாயக்கவிடம் விசாரணை
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. 2012ஆம் ஆண்டு வீதி விபத்து ஒன்றில் மரணமானதாக கூறப்பட்ட வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கொலை, தாஜுடீன் மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோருக்கிடையிலான காதல் முரண்பாடுகளினால் நிகழ்ந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இவர்களின் மோதலுக்கு காரணமான, யசாரா அபேநாயக்க என்ற அந்தப் பெண், முன்னர் ராஜபக்சவினரால் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்தின் பணிப்பாளராக பணியாற்றியவர்….
பிஞ்சுக்குழந்தையின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய தந்தையைப் பிடிக்க உதவிய சமூக வலைதளம்
பலரது நேரத்தை வீணாக்கி, அவர்களை அடிமைப்படுத்துவதாய் சொல்லப்படும் அதே சமூக வலைதளங்கள்தான் இன்று பல மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது. கடந்த வாரம், சமூக வலை தளங்களில் வைரலாகப் பரவிய அந்த வீடியோவைப் பார்த்த பலர் அதிர்ச்சியடைந்தனர். சிலர் ஆவேசத்தின் உச்சகட்டத்துக்கே சென்று அந்த வீடியோவை தங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஷேர் செய்து அதில் உள்ள கொடூரனை யார் என்று அடையாளம் தெரிந்தால் சொல்லும்படி தங்கள் நண்பர்களிடன் உதவி கேட்டு, அவனை…
பேஸ்புக் பதிவால் பத்திரிகையாளர் அடித்துக்கொலை
ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மீதான மோகம் பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அடிக்கடி கலவரம் ஏற்படுவதும், ரசிகர்கள் அடித்துக்கொண்டு இறப்பதும் வாடிக்கைதான். இதன் தொடர்ச்சியாக தற்போது பத்திரிகையாளர் ஒருவர் கால்பந்து ரசிகரால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து தனி நாடான அஸர்பைஜான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் அசிம் அல்ஜியேவ். இவர் கால்பந்து போட்டியின் போது பத்திரிகையாளரை நோக்கி தவறான சைகை செய்த, ஹபாலா என்ற கால்பந்து கிளப்பின் வீரரான ஜாவித் ஹூசேனேவ்வை பேஸ்புக்கில் கடுமையாக…
சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத் தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே 9 வயதில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4இல் கல்வி கற்று வந்துள்ளார். 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்னும் சிலர் காணாமலும்…
வெற்றிலைக்கு வாக்களிப்பது, ஒரு மிருகத்திற்கு சமம் – சந்திரிக்கா
இம்முறை பொது தேர்தலில் வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பயனும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். வெற்றிலைக்கு வாக்களிப்பது ஒரு மிருகத்திற்கு சமம் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது நாட்டில் ஜனநாயக ஆட்சி காணப்படுவதாகவும் தொடர்ந்து அதனை கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு வாக்களிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 17ஆம் திகதி கைக்கு அல்லது வெற்றிலைக்கு வாக்களிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என்பதனால் மாறாக மிருகத்திற்கு வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி…
புதிய அரசாங்கத்தின் 1வது வரவு செலவுத்திட்டத்தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை
– ஏ.எஸ்.எம்.இர்ஷாத் – புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத்திட்டத்;தில் கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலையொன்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாடசாலை நிர்மானித்துக் கொடுக்கப்படுமென நிதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க உறுதியளித்துள்ளார். அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை(12) நடைபெற்ற மௌலவிமார்கள், புத்திஜீவிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் பங்கேற்றிருந்தார். அமைச்சர் ரவி கருணாநாயக்க இங்கு உரையாற்றுகையில் கொழும்பு மாவட்ட…
மு.கா வினரால் பொய் வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகிறது
– எஸ்.அஷ்ரப்கான் – மர்ஹூம் அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தொடங்கிய எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் நாம் பலம் மிக்கவர்களாக மாறவேண்டு மென்றால் எமது வாக்குப் பலத்தை காட்டுவதற்காக எல்லோரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். ஏனெனில் மறைந்த தலைமையின் அடியோட்டிய தலைமை அமைச்சர் றிஷாட் பதியுதீன் மட்டுமே என்பது மக்களுக்கு இன்று விளங்கிவிட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் முஹம்மட் லத்தீப் தெரிவித்துள்ளார். கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக்…
மஹிந்தவுடன் சேர்த்து என்னையும் வெட்டிக் கொலை செய்வதாக அச்சுறுத்தல் – ஏ.எச்.எம்.அஸ்வர்
மஹிந்த ராஜபக் ஷவுடன் சேர்த்து வெட்டிக் கொலை செய்வதாக எனக்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப் பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன் எனவும் தெரிவித்தார். தேசத்தை பாதுகாக்கும் ஒன்றியம் நேற்று கொள்ளுப்பிட்டி பேர்ல் சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், வெலிகம பகுதியில் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து தேர்தல் பிரசாரம்…
பதிலை நான் மக்களிடமே விடுகின்றேன் – றிஷாத் பதியுதீன் (நேர்காணல்)
– கிருஷ்ணி இஃபாம் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட ஐ.தே.கட்சியின் முதன்மை வேட்பாளருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தினக்குரல் வாரவெளீட்டுக்கு வழங்கிய செவ்வி: கேள்வி: எதிர்வரும் செப் 16ந் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உங்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது இது குறித்து உங்களது நிலைப்பாடு என்ன? பதில்: வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை தடுத்து, முஸ்லிம்களின் பூர்வீக பூமியிலிருந்து அவர்களை விரட்டியடிக்க இனவாதிகள் இடைவிடாத தொடர் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதிப்படுத்தும் வகையில்…
