News
தடை விதித்தார் தேர்தல்கள் ஆணையாளர்
அரசியல்வாதிகள் இன்று முதல் தேர்தல் வரை அரச வைபவங்களில் கலந்துகொள்வதற்கு தேர்தல் ஆணையாளர் தடை விதித்துள்ளார். இதன்படி எந்த வேட்பாளரும் மாகாணசபை , உள்ளூராட்சி சபைகளின் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் , அல்லது முடிவடைந்த திட்டங்களை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் வேட்பாளர் , மாகாணசபை , உள்ளூராட்சி…
‘அந்தக் குடும்பத்துக்கு வெட்கம், மானம், ரோசம் சிறிதளவும் கிடையாது’ – சந்திரிகா ஆவேசம்
அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்து சுதந்திரக் கட்சியை கொள்ளையரின் கூடாரமாக மாற்றிய மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வெட்கமின்றி அதிகாரத்துக்கு வர முயற்சிப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டையும், கட்சியையும் மீட்பதற்காகவே ரணிலுடன் கைகோர்த்ததாகக் கூறியுள்ளார். தனது தந்தையால் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியிலிருந்து உயிருள்ள வரை பிரியப்போவதில்லை எனவும் கட்சியை மீட்டுக்கொடுப்பதற்காகவே மீண்டும் அரசியல் பிரவேசம் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தனகல தொகுதி நிட்டம்புவ நகரில் இடம்பெற்ற சிவில் அமைப்புகளின் கூட்டத்தில் கலந்து…
கலிமா சொன்ன முஸ்லிம்கள் UNP க்கு வாக்களிக்கமாட்டார்கள் – அஸ்வர்
அமைச்சர் சம்பிக்க ரணவக்க இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அடிப்படை வாதிகளாகச் சித்திரித்து எழுதிய அல்–ஜிஹாத் அல்–கைதா எனும் புத்தகத்தை கிழித்து தீயிட்டு கொளுத்திய முன்னாள் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் அப்புத்தகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடைசெய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். நேற்றுக்காலை பம்பலப்பிட்டியிலுள்ள பர்ல் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அஸ்வர் குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க எழுதியுள்ள அல்–ஜிஹாத், அல்–கைதா என்ற புத்தகத்தில் இலங்கையில்…
மஹிந்தவை பிரதமராக்குவதற்கு எந்தவொரு முஸ்லிமும் வாக்களிக்கப்போவதில்லை
களுத்துறை மாவட்ட முஸ்லிம்கள் பேரினவாத வலையில் சிக்கிவிடாமல் தமது பெறுமதி மிக்க வாக்குகளை பயனுள்ள வகையில் அளித்து அதன் மூலம் தமது கிராமத்திற்கும், சமூகத்திற்கும் கூடிய சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இம் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக் ஷவை பிரதமராக்குவதற்கு எந்த ஒரு முஸ்லிமும் வாக்களிக்கப்போவதில்லை என்பது உறுதியாகும் என பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மஸாஹிம் முஹம்மத் கூறினார். பேருவளை மருதானை, மாளிகாஹேனை பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போதே அவர் இவ்வாறு…
மியன்மார் வௌ்ளப்பெருக்கில் ஒரு மில்லியன் மக்கள் பாதிப்பு!
மியன்மாரில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பம் முதல் பெய்து வரும் கடும் மழை மற்றும் வௌ்ள அனர்த்தத்தினால் ஒரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அலுவலக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன. இவ் வௌ்ளப் பெருக்கினால் 100 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன் 1.2 மில்லியன் ஏக்கர்கள் நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மியன்மார் அரசாங்கம் தகவல் தெரிவித்துள்ளது. ஆயினும் சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் கல்விக்காக மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரவட்டி டெல்ரா பிரதேச மக்களுக்கு (Irrawaddy Delta region) இன்னமும் அவதானத்துடன் இருக்கும்…
ஞானசாரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : நீதவான் உத்தரவு
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறை ஏற்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர இதனை தெரிவித்துள்ளார். கடந்த 8ம் திகதியன்று வெலிப்பன பொலிஸ் பகுதியில் பொலி;ஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டிய போது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர்…
பொலிஸ் நிலையத்துக்குள் ஞானசார அட்டகாசம்
தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக வேட்பாளர் விளம்பரத்துடன் பயணித்த ஞானசாரவின் பொது ஜன பெரமுன வாகனம் ஒன்றை நிறுத்தி அதில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை பொலிசார் கழற்ற முயன்றபோது சாரதி எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது சம்பந்தமாக கேள்வியுற்று அங்கு வந்த ஞானசார, பொலிஸ் நிலையத்துக்குள் அடாவடித்தனம் செய்து கூச்சலிட்டுள்ளதைத் தொடர்ந்து அது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தாம் முயல்வதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தேர்தல் நேரமாதலால் ஏதாவது…
உணர்ச்சிகரமாக பேசி வாக்குகளை சேகரிக்க முயல்கின்றனர் – அமைச்சர் றிஷாத்
வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருந்து சகல சமூகங்களின் தேவைகளை பெற்றக்கொடுக்கும் பணியினை முன்னெடுத்துவந்துள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட ஜக்கிய தேசிய முன்னணியின் முதன்மை வேட்பாளரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத் பதியுதீன் இதனை தொடர்ந்து முன்னெடுக்க முல்லைத்தீவிலிருந்தும் ஆளும் கட்சிக்கான பாராளுமன்ற பிரதி நிதித்துவம் ஒன்றை பெற்றுத்தர வாக்களிக்குமாறும் கேட்டுக் கொண்டார். நேற்று இரவு முல்லைத்தீவு புதுக்குடியிறுப்பில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில்…
மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது
மன்னார் நகர மற்றும் பிரதேச சபைகளின் நிர்வாகங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் இருந்ததது,அவர்கள் அதனை வைத்துக் கொண்டு எதனையும் செய்யவில்லை.இவ்வாறானதொரு நிலையில் வன்னி மாவட்டத்தில் எமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அதிகரித்து இரண்டு வருட காலத்துக்குள் மன்னார் நகரினை சிறந்ததொரு மத்திய அழகு மிகு நகரமாக மாற்றும் திட்டம் எம்மிடம் உள்ளது என வன்னி மாவட்ட ஜ.தே.மு .முதன்மை வேட்பாளரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் பேசாலையில் தெரிவித்தார். மன்னார் பேசாலை மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து…
மருதமுனையில் மயில் ஆட்டம்: ஆணிவேரோடு சரிந்தது மரம்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என வர்ணிக்கப்படும் மருதமுனை நகரம் நேற்றிரவு (9) இடம்பெற்ற அ.இ.ம.கா வின் பிரச்சாரக் கூட்டத்தினை அடுத்து வேரோடு துடைத்தெறியப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையாக 1994 காலத்திற்கு முன்பு திகழ்ந்த மருதமுனை நகரம் பின்னர் முகா வின் கோட்டையாக நேற்று முன்தினம் வரை அனைவராலும் நோக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் அ.இ.ம.காவின் பொதுத்தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்றிரவு மருதனையில் இடம்பெற்றது. இதன் மூலம் மருதனை நகரம் அ.இ.ம.கா வின்…
பல சந்தர்ப்பங்களில் நாம் அபிவிருத்தி செய்ய முற்பட்ட போதெல்லாம் மு.கா வினர் எம்மை ஓரம் கட்டினர்
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களித்து இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொடுத்தால் இம்மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலத் தேவையாகப் பார்க்கப்படுகின்ற கரையோர மாவட்டம் நிச்சயம் பெற்றுத் தரப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்று கரையோர மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்பே நானும் எனது கட்சியினரும் அமைச்சுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வோம் இல்லையேல் நாம் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொள்வோம் என வன்னி மாவட்ட வேட்பாளரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்….
500 குடும்பங்கள் இஸ்லாத்ததை ஏற்க முடிவு..!
ஹரியானா மாநிலத்தின் ‘ஹிசார்’ கிராமத்தை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது போல, மற்றொரு கிராம மக்களும் இஸ்லாத்தை ஏற்கப்போவதாக அறிவித்துள்ளனர். உயர்ஜாதி ஹிந்துக்களின் கொடுமை காரணமாக ‘பகானா’ என்ற கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை ஏற்கப் போவதாக அறிவித்துள்ளனர். இஸ்லாத்தில் இணையும் தேதியை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ள ‘பகானா சன்கர்ஷ் சமிதி’ என்ற தலித் அமைப்பு, இஸ்லாத்தில் இணையும் நிகழ்ச்சியை நாடாளுமன்ற வளாகத்துக்கு உள்ளேயே நடத்தப் போவதாகவும்…
