News
இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது -வாசுதேவ
நாட்டு மக்களை ஏமாற்றி பொய்யான உறுதி மொழிகளை வழங்கி ஆட்சியைப் பிடித்த இந்த அரசாங்கம் நீண்ட நாட்கள் நிலைத்திருக்காது. மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பிப்பார்கள் என நேற்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவில் தேசிய உற்பத்தியில் நூற்றுக்கு 1 வீதம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை கொள்வனவு…
மாணவன் எச்.எஸ்; முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தி
– பி.எம்.எம்.ஏ.காதர் – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறு பேறுகளில் கல்முனை கல்வி வலயத்திலுள்ள மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மாணவன் ஹூமைதுஸ் ஸமீர் முகம்மது முறைஸ்; 159 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் மருதமுனையைச் சேர்ந்த ஒய்வு பெற்ற துறைமுக உத்தியோகத்தர் ஏ.எம்.ஹூமைதுஸ் ஸமீர்,ஆசிரியை எம்.எம்.ஹிஸ்வத்துல் அறபா தம்பதியின் புதல்வராவார்.மாணவன் முகம்மது முறைஸ்; பெரிய நீலாவணை ‘அல்-மஹதுல் இஸ்லாமி’அல்குர்ஆன் மனனக்கற்கை நிலையத்தில் அல்குர்ஆனை மனனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவனுக்கு உதவுங்கள்
– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் பல்வேறு பட்ட சமூக சேவையில் ஈடுபட்டு வரும் வீரக்குட்டி ரூ பொன்னம்பலம் அறக்கட்டளை அமைப்பினரால் நாவிதன்வெளிக்கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் உள்ள பிரதீபன் டிலுக்ஸன் எனும் 4 வயது சிறுவன் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உள்ள நிலையில் இச் சிறுவனுடைய இருதய சிகிச்சைக்காக தலா 5 லச்சம் ரூபாய் தேவைபட்டது. இப்பணத்தொகையை இவ் வறிய குடும்பத்தினரால் ஈட்டிக்கொள்ள முடியாத தருணத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர்…
மத்தியமுகாம் அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் மூன்று மாணவர்கள் சித்தி
– எம்.எம்.ஜபீர் – நாவிதன்வெளி கோட்டக் கல்வி பிரதேசத்தில் மத்தியமுகாம், 12 ஆம் கொளனி சது/அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலத்தில் நேற்று காலை வெளியான 5ஆம் தரம் புலமைப்பரிசில் பரீச்சையில் மூன்று மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். ஏ.எச்.எப்.றிஸ்தா பெற்ற புள்ளி-165, எம்.ஜெ.ஹூனைப் முஹம்மட் பெற்ற புள்ளி-159, ஜெ.எப்.யாஸ்மின் பெற்ற புள்ளி-155 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.யூசுப், கற்பித்த ஆசிரியர் எம்.எம்.அமிறூல் ஹக் ஆகியோர்களும், மாணவர்களும் பிரதேச அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
ஒரேநாளில் 97 பேர் இஸ்லாத்தில் இணைந்தனர்!
சவூதி , தலை நகர் ரியாத்திலுள்ள நகரங்களில் ஒன்று அல்பதீயா, இங்கு செயற்பட்டு வரும் இஸ்லாமிய அழைப்பு மையம் ஒன்று; முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வதற்காக நேரடியாகவும், இணையதளம் வழியாகவும் பல நிகழ்ட்சிகளை பல மொழிகளில் நடத்தி வருகிறது. இந்த முயற்ச்சிகள் பல சந்தர்ப்பங்களில் அபார வெற்றியையும் தந்து வருகிறது, அண்மையில் அந்த அழைப்பு மையத்தின் முயற்ச்சியினால், ஒரு நாளில் 97 மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தில் இணைந்தனர். இதனை share செய்வோம்
கண்ணீர் புகை குண்டுகளுக்கு கலங்காமல் அல் அக்ஸா பள்ளியினுள் குர்ஆன் ஓதும் நபர்!
சில தினங்களுக்கு முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான அல்-அக்ஸா பள்ளியினுள்ளேயே இஸ்ரேலிய காவலர்களை மக்களை பள்ளியை விட்டும் விரட்டுவதர்க்காக கண்ணீர்புகை குண்டுகளை பிரயோகித்தனர். இஸ்ரேலின் கண்ணீர்புகை கண்டுகளுக்கு கலங்காமல் அல்அக்ஸா பள்ளியுனுள் திருமறை குர்ஆனை ஒரு பாலஸ்தீன முஸ்லிம் ஓதி கொண்டிருப்பதை தான் படம் விளக்குகிறது.
WHATSAPP பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை
எனக்கு நேற்று கீழுள்ள படத்தில் காட்டியவாரு Messege வந்தது.. “நீங்கள் வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். உங்களுக்கான பரிசும் கிடைக்கப் பெறும்.”என்பதைப்போன்ற தகவல் எனது WhatsApp இற்கு வந்தது.. அதுவும் GROUP ஒன்று CREATE செய்து தொடர்பு கொண்டார்கள்.. அதில் நான் சொன்னது போன்று சொல்லிவிட்டு எங்களது பரிசைப்பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் இதைக் கிளிக் (click)Click பன்னவும் என்று messege வரும்.அதன்பிறகு என்னை group இலிருந்து REMOVE செய்து விட்டார்கள்.. (அதன்மூலம் வரும் விபரீதம்..) ●அந்த msg மூலம் google location…
தேர்தலின்போது இணைய முறிவேற்படுத்த மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி குறித்து தகவல் வெளியாகியுள்ளன!
மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இலங்கையில் இணைய முறிவொன்றினை யேற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக இஸ்ரேலில் இருந்து கணனிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அவை கண்டி பிரதேசத்தில் வீடொன்றில் இணைக்கப்பட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியிருந்தது. குறித்த கணினி இயந்திரங்களை செயற்படுத்துவதற்காக இஸ்ரேலில் பயிற்சி பெற்ற நபர்கள் இருந்தார்கள் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவர்கள் புலனாய்வு பிரிவு உறுப்பினர்களா அல்லது வேறு நபர்களா என்பது தொடர்பில் இதுவரையில்…
ஜனக பண்டார தென்னகோன் விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னகோனை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கத்தாரில் ரிஸ்வி முப்தி
– ஹாசிம் ஹம்ஸா – அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தியின் விஷேட சொற்பொழிவொன்று கத்தாரில் நடைபெறவுள்ளது. “நமது கடந்த கால அனுபவங்களும் தாயகத்திற்கான எங்கள் பங்களிப்பும்” எனும் கருப்பொருளில் நடைபெறவுள்ள இவ்விஷேட சொற்பொழிவுக்கு இலங்கையர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றனர் சம் சம் பெளண்டேஷன் ஏற்பாட்டு குழுவினர். அப்துல்லாஹ் பின் ஸைத் அல்-மஹ்மூத் இஸ்லாமிய கலாசார மைய கேட்போர் கூடத்தில் (FANAAR) வரும் வெள்ளிக்கிழமை (09-10-2015) இரவு 7.30 மணி…
பொப்பி மலர் அணிந்தார் மைத்திரி
வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07)ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. இலங்கை முன்னாள் படைவீரர்களின் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் கே.ஏ குணவீர ஜனாதிபதியின் உத்தியோகபுர்வ இல்லத்தில் வைத்து பொப்பி மலரை ஜனாதிபதிக்கு அணிவித்ததன் மூலம் வருடாந்த பொப்பி தினத்திற்கான செயற்பாட்டை ஆரம்பித்துவைத்தார். இரண்டாவது உலகப்போரின் ஒரு இராணுவ வீரரான எச்.ஜீ.பீ ஜயசேகரவினால் எழுதப்பட்ட “How Japan Bomb Tiny Sri Lanka” என்ற நூலும் நூலாசிரியரினால் இந்நிகழ்வின் போது…
ஆசிரியர் யாகூப், பிரதீபா பிரபா விருது பெற்றார்..!
– சுலைமான் றாபி – கல்வியமைச்சினால் வருடா வருடம் நடாத்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களைக் கௌரவிக்கும் விழாவான பிரதீபா பிரபா விருதில் நிந்தவூர் கமு/கமு/அல் மஸ்லம் வித்தியாலயத்தினைச்சேர்ந்த மீராலெப்பை யாகூப் ஆசிரியர் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலை, கோட்டம், மற்றும் வலய மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர் தினமான நேற்று (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதீபா பிரபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 25 வருட ஆசிரியர் சேவை மூப்பினைக் கொண்ட இவ்வாசிரியர் பாடசாலைக்காலங்களில்…
