Headlines

இலங்கைக்கு எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை




இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் எதிர் நாடுகள் என எந்தவொரு நாடும் தற்போது இல்லை. அனைத்து நாடுகளும் நட்பு நாடுகளாகவே இருக்கின்றன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சிறந்த தருணம் இதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி திட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி மருதநகர் பகுதியில் தொடக்கிவைக்கப்பட்டபோது குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *