News
கோத்தா ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பிலேயே இவரிடம் வாக்குமூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மார்க்க அறிஞராக வரவேண்டுமென்ற, சிறுவனின் உயிரை குடித்த புல்டோசர் (படங்கள்)
– யு.எல்.எம். றியாஸ் – சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பின்தங்கிய கிராமங்களுள் மலையடிக் கிராமம் நான்காம் பிரிவும் ஒன்று இக் கிராமமானது மலைச் சாரல்களயும், மேட்டு நிலங்களையும்,கரடு முரடான பாதைகளையும் கொண்டதாகவே இதன் அமைவிடம் காணப்படுகிறது. தினமும் தமது அன்றாட தொழிலாக கூலித்தொழில் செய்பவர்களே இக்கிராமத்தில் வசித்து வருகின்றனர். இக் கிராமமும், இக் கிராம மக்களும் ஒரு சோகம் நிறைந்த நாளை கடந்த சனிக்கிழமை (03.10.2015) சந்தித்து இன்றுவரை ஆளாத்துயரில் இருந்து வருகின்றனர். சிஹாப்…
வத்தளையில் இரவு வேளையில், ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மக்கள்
வத்தளை அவரகொட்டு பகுதி மக்கள் நேற்றிரவு (07) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். பிரதேசத்திலுள்ள தொழிற்சாலையொன்றினால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வத்தளை, ஹெந்தலை, அவரகொட்டுவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றிலிருந்து வௌியேற்றப்படும் கழிவு பொருட்கள் மற்றும் புகையினால் சூழல் பாரியளவில் மாசடைவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். தொழிற்சாலையின் பிரதான நுழைவாயிலை இடைமறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமது சுகாதார நிலைமை பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சூழல் மாசடைவது தொடர்பில் தொழிற்சாலை முகாமைத்துவம் மற்றும் பொலிஸாருக்கு…
பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்
ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை அதிபர் ஊடாக குறித்த விண்ணப்பங்களை அனுப்ப முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த மேலதிக விபரங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
லசந்த படுகொலை : சிம் அட்டைகளைப் பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான சந் தேகநபர்களால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 5 சிம் அட்டைகள் மற்றும் தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில் லசந்த கொலையாளிகள் என சந்தேகிக்கப்படுவோரால் பயன் படுத்தப்பட்டுள்ள இந்த சிம் அட்டைகள் ஐந்தும், அக்காலப்பகுதியில் வெலிக்கடை சிறைக்கைதியாக இருந்த ஒருவரின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குறித்த சிறைக்கைதி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ள நிலையில், சிறையில்…
‘பொடி சூட்டி’ கைது
கிராண்ட்பாஸ் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப் பொருள் விநியோகம் செய்துவந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ‘பொடி சூட்டி’ என்பவரை கொழும்பு துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்டவின் கீழுள்ள துஷ்பிரயோக தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கை ஒன்றின் போதே 20500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபரான குறித்த பெண் ஸ்டேட் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர்…
பிரதமர் நாடு திரும்பினார்
ஜப்பானிற்கு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். ஜப்பான் பிரதமரின் அழைப்பையேற்று கடந்த 3 ஆம் திகதி பிரதமர் ஜப்பான் சென்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளிபரப்பு
பாராளுமன்றத்தின் அமர்வுகள் இன்று வியாழக்கிழமை முதல் தேசிய ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்புச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.00 மணிமுதல் இரவு 7.30 மணிவரையான செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையான அமர்வுகளின்போது முதல் இரண்டு மணிநேரத்துக்கே இவ்வாறு நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகார தெரிவுக்குழு கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பாராளுமன்ற அமர்வுகள் பியோ ரீ.வி.யூடாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தபோதிலும், பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது. இடைநிறுத்தப்பட்ட மேற்படி…
காலி கடற்பரப்பில், ஆயுதக் கப்பல் பிடிக்கப்பட்டது
கடந்த செவ்வாய்க்கிழமையன்று காலிக்கு அப்பால் 15 கடல்மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுதக்கப்பல் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடற்படை தளபதி ரவீந்திர விஜேயகுணரட்ன இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கொடியுடன் பயணித்த இந்த கப்பலில் இருந்து சுமார் 810 ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கப்பல் காலி துறைமுகத்தில் தரிக்கச்செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. கப்பலில் தலைவரிடம் இருந்து இதுவரை முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ளன. கப்பல் யுக்ரெய்னுக்கு சொந்தமானது என்று ஆவணங்களில் கூறப்பட்டுள்ளபோதும் அதன் கெப்டன் இலங்கையர் என்று கூறப்பட்டுள்ளது.
அஹமட் முஷர்ரப் பெற்று சாதனை!
– பழுலுல்லாஹ் பர்ஹான் – இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நேற்று (07) புதன்கிழமை வெளியான தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு சென் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவன் முஹம்மட் ஜவாஹிர் அஹமட் முஷர்ரப் 189 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவர் காத்தான்குடியைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் எம்.ஏ.சீ.எம்.ஜவாஹிர் மற்றும் ஆங்கில ஆசிரியை திருமதி சல்மா ஜவாஹிர் ஆகியோரின் புதல்வருமாவார்.
மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒன்று கூடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் – எமது இலங்கை நாட்டில் மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் சர்வோதய நிறுவனத்தில் சாந்திசேனா அமைப்பு நடைமுறைப்படுத்தி வரும் மதங்களுக்கிடையிலான ஐக்கிய ஒன்றிணைவு நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான இரண்டாவது ஒன்று கூடல் இம்மாதம் 03 மற்றும் 04ம் திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டானில் அமைந்துள்ள சர்வோதய வளாகத்தில் நடைபெற்றது. சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல்.ஏ. கரீம் தலைமையின் கீழ் இடம்பெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிறிஸ்தவ, பௌத்த, இந்து மற்றும்…
தொடர்பாடல் அதிகாரிகள் நியமனம்
கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொது மக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்று அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த நியமனக்கடிதங் களை வழங்கி வைத்தார். மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும்,முல்லைத்தீவு மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார்…
