News
சிரியா அரசியலில் புதிய திருப்பம்
சிரியாவில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டால் பாராளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தல்களை முன்கூட்டியே நடத்த அதிபர் பஷர் அல் ஆசாத் முடிவு செய்துள்ளார். சிரியாவில் அதிபர் பஷீர் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த நான்காண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரின் விளைவாக இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அங்கு தொடர்ந்து போர் நடைபெறுவதால் வாழ வழியின்றி பல லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். உள்நாட்டு போருக்கிடையே அங்கு ஐ.எஸ்….
இஸ்ரேலுக்கு ஐரோப்பிய கூட்டமைப்பு எச்சரிக்கை
கடந்த புதன் அன்று பலஸ்தீன் மற்றும் ஐரோப்பா நாடுகளின் நல்லுறவுக்கான கூட்டமைப்பு ஐரோப்பாவில் கூடியது. ஐரோப்பாவின் பாரளமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்து கூட்டத்தில் ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகளை சர்ந்த பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பலஸ்தீனின் தற்போதைய நிலைகள் குறித்து கூட்மைப்பு ஆய்வு செய்தது. இறுதியில் பலஸ்தினீல் இஸ்ரேல் அரங்கேற்றி வரும் கொடுமைகளை கடுமையாக கண்டிப்பதாகவும், இஸ்ரேலின் அத்துமீறல்கள் சகித்து கொள்ள முடியாதது என்றும் இஸ்ரேலின் அக்கிரமங்களை ஐரோப்பிய கூட்டமைப்பு ஒருமித்து கண்டிப்பதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்க பட்டது. சர்வதேச சட்டங்கள் எதையும்…
சவூதி தொழிலாளர்களுக்கான புதிய சட்டம்!
சவூதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவூதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 1. தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 2. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract paper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும். 3. தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலையை செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால்…
ரஷ்யாவை அலங்கரிக்கும் இஸ்லாம்
ரஷ்யா இஸ்லாம் வளமுடன் வளர்ந்து வந்து மண்ணாகும் இடையில் அங்கு ஏர்பட்ட கம்யுனிச அடக்குமுறைகளால் இஸ்லாம் அந்த மண்ணில் கடுமையான அடக்கு முறைகளை எதிர் கொண்டது. கம்யுனிச ஆட்சியாளர்களால் அடுக்கடுக்கான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விட பட்டபோதும் அந்த மண்ணில் இருந்து அவர்களால் இஸ்லாத்தை அப்புற படுத்த முடியவில்லை. இஸ்லாம் தனது தனி தன்மைகளால் ரஷியாவில் பிரகாசித்து கொண்டி இருக்கிறது. அண்மையில் ஐரோப்பாவிலேயே மிக பெரிய இறை இல்லம் ஒன்று மாஸ்கோவில் திறந்து வைக்கபட்டது. 1904 ஆம் ஆண்டு…
மருத்துவரின் மனம் கவர்ந்த இஸ்லாம்
அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார். பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், “எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்’ என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார். “ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம்…
விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்
அனூஷ் அன்சாரி விண்வெளிக்கு சென்ற முதல் முஸ்லிம் பெண்மணி ஆவார். ஈரானை சேர்ந்த இவர் சிறுவயதிலேயே அமெரிக்காவில் குடியேறினார். இவர் ஓர் கணினி விஞ்ஞானி, மின் பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார். சிறுவயதிலிருந்தே விஞ்ஞானத்திலும், அறிவியலிலும் நாட்டம் கொண்ட அவர் விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்று லட்சியமும் பூண்டார். அதனடிப்படையில் விண்வெளிக்கு சென்று தனது லட்சியத்தை நிறைவும் செய்தவராவார்.
இந்தியா உட்பட சில நாடுகளில் பாரிய நிலநடுக்கம்
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் 7.7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் இந்தியாவின் சென்னை ,பஞ்சாப், டில்லி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா படுகொலை : சந்தேக நபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர்களை இன்றுஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெலேசுதாவின் தங்கை பயன்படுத்திய கார் அவரது அம்மாவின் பெயரில் பதிவு
காருக்குள் ஹெரோயின் மறைத்து வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்ட வெலே சுதாவின் இளைய சகோதரி பயணித்த கார் அவரின் அம்மாவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். அவ் வாகனத்தை பரிசோதித்தபோது இத்தகவல் வெளியாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வெலே சுதாவின் சகோதரி பயணித்த காரிலிருந்து 150 கிராம் ஹெரோயின் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.
சுதந்திரக் கட்சியில் இருந்து கருணா ராஜினாமா
முன்னாள் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்படும் கருணா அம்மான், சுதந்திரக் கட்சியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அவர், ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏறாவூர் சதாம் ஹுஸைன் பள்ளிவாசலுக்கு சேதம்
ஏறாவூர் சதாம் ஹுஸைன் கிராம சத்தாம் ஹுஸைன் பள்ளிவாசல் வளாகத்தில் மின்னல் தாக்கி சேதமேற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர். சனிக்கிழமை பகல் இடி முழக்கத்துடன் பலத்த மழையும் மின்னலும் காணப்பட்டது. இவ்வேளையிலேயே மின்னல் மேற்படி சத்தாம் ஹுஸைன் பள்ளி வாசலின் வளாகத்தையும் தாக்கியது. இதனால் மின்சார பல்புகள், மின் மானி, மற்றும் கட்டிடம் என்பனவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பள்ளிவாசல் நிருவாகம் தெரிவித்தது. மின்னல் தாக்கும்போது பள்ளிவாசலில் எவரும் இருந்திருக்கவில்லை என்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.
குளவித் தாக்குதல்: 10 பேர் பாதிப்பு
– க.கிஷாந்தன் – லிந்துலை – பேரம் தோட்டத்தில் 10 தோட்ட தொழிலாளர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க வைத்தியசாலையில் மருந்துகள் இன்மையால் மருந்துகளை தனியார் மருந்தகங்களில் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பாதிக்கப்பட்டோர் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
