News
ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் இன்று
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் ஆகியன இன்று கொண்டாடப்படவுள்ளன. இதன் காரணமாக கொழும்பில் விசேட நிகழ்வுகள் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1945ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டு 10 ஆண்டுகளின் பின்னர் 1955ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி அதன் உறுப்பு நாடாக இலங்கை இணைந்து கொண்டது. அத்துடன்…
நவம்பரில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்
எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டு.மாவட்டத்திலிருந்தும் மூவர் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறுஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்தும் இந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் இம் மாவட்டத்திலிருந்தும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதில் மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று, கோறளைப்பற்று தெற்கு, கோறளைப்பற்று, கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர்…
இஸ்லாமாபாத் இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு, இலங்கையிலிருந்து 30 மாணவர்கள் தெரிவு
இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக பயிற்சிக்கும் அபிவிருத்திக்குமான சர்வதேச கலாச்சார நிலையத்தின், முயற்சியின் பிரதிபலனாக இம்முறை இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கு நாடெங்கிலும் இருந்து கீழ்காணும் 30 ஷரீஆத் துறை மாணவர்கள் புலமைப்பரிசிலுக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர். 01. பதுர்தீன் முஹம்மத் பய்ரூஸ்-கதுருவல 16. நிஸார்தீன் முஹம்மத் இர்பான் 02.. முஹம்மத் முனாஸ் முஆத்-மாவனெல்ல 17. அமீர் முஹம்மத் அய்யாஷ் 03. ஸபீன் முஹம்மத் பஸ்மில் 18. அப்துல் குத்தூஸ் இர்பான்-குரின்ஜாகேனி 04. ஸரீப் முஹம்மத்…
வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மருதானை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்லிம் உரிமைக்கான அமைப்பினர் ஆர்ப்பாட்ட பேரணியினை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் மும்மொழியிலும் எழுதப்பட்ட வாசகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தி நின்றனர். சுமார் ஒரு மணித்தியாலயம் வரை இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சராப்தீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் செலுத்திவருகின்ற பார்வை போதுமானதாக இல்லை.இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம்…
கொண்டயாவை பிணையில் எடுக்க தாயார் கையெழுத்து!
கொண்டயா எனப்படும் துனேஷ் பிரியசாந்தவை பிணையில் எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், அவரது தாயார் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய சிறுமி சேயாவின் கொலையின், சந்தேக நபர் கொண்டயா சில நாட்களுக்கு முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் பிணைக்கு கையெழுத்திட யாரும் முன்வராத நிலையில், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று கொண்டாயாவின் தாயார் பிணைக்கு கையெழுத்திட்டுள்ளார். இக்கொலை,தொடர்பில் உறுதி செய்யப்பட்டுள்ள, உண்மை குற்றவாளியான இவரது சகோதரர், தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்ச சற்றுமுன் கைது – BREAKING NEWS
– நமது நிருபர் – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்ட விமல் வீரவன்ச சற்றுமுன் கைது செய்யப் பட்டதாக பொலிசார் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.
என்னைக் கவர்ந்த ஒரு இஸ்லாமிய தாய் – கனடா பிரதமரின் அனுபவம் இதோ..!
உலகம் முழுவதும் இஸ்லாமிய மயமாகி வருவதால் இஸ்லாத்திற்கான எதிர்ப்பும் அதிகமாகி வருகிறது. கிறித்தவ நாடான கனடாவில் தினந்தோறும் மக்கள் இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர். இதனால் அங்கும் முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கனடாவின் புதிய பிரதமராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜஸ்டின் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில்…. கனடா என்பது முஸ்லிம்கள் உட்பட அனைவருக்கும் சொந்தமான நாடாகும், கனடாவை கட்டி எழுப்பியதில் அனைத்து மதத்தவருக்கும் பங்குயிருக்கிறது. இங்கு வாழக்கூடிய அனைத்து மத மக்களும்…
இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய பிரதமர் ரணில் நடவடிக்கை
இளவரசன் விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் வரலாற்று அடையாளங்கள் இருப்பதால், இலங்கையின் வரலாற்றுக்கு முந்தையவற்றை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிதுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தை மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் தெரணியகலவை ஆலோசராக நியமித்து இது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்த உள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். குருகல பிரதேசத்தில் பௌத்த…
புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு மள் நியமனம்
புல்மோட்டை கணிய மணல் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி பின்னர் இடை நிறுத்தப்பட்டிருந்த ஊழியரகளுக்கான மீள் நியமனக் கடிதங்கள் வியாழக்கிழமை கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சில் வைத்து இன்று அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், அமைச்சின் செயலாளர் தென்னகோன்,கணிய மணல் கூட்டுத்தாபன நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ்,கூட்டுத்தாபண முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் டாக்டர் ஹில்மி ஆகியோரையும் கலந்து கொண்ட ஊழியர்களையும் படங்களில் காணலாம்
நீதிபதியின் மேசையில் விழுந்த இரத்தம் குடிக்கும் பாம்பு
கடுவலை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் மேசை மீது கூரையிலிருந்து பாம்பு ஒன்று விழுந்த திடீர் சம்பவத்தால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை (22) கடுவலை நீதிமன்ற நடவடிக்கைகள் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக நீதிமன்றத்தினுள் ஏற்பட்ட களேபரத்தை அடக்கி, அமைதிப்படுத்த நீதிமன்ற முதலியார் கடுமையான பிரயத்தனம் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளும் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பாம்பு நீதிமன்ற ஊழியர்களால் வெளியேற்றப்பட்ட பின்னர்…
இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு ஜப்பான் விருப்பம்
இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு ஜப்பான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஜப்பான் நாடும் அந்த நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் வர்த்தக சமூகத்தினர் இன்று அமைச்சரை அமைச்சில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகவும் உயர் நிலையில் இருப்பதாகவும், இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு ஜப்பான் நாட்டின் சந்தை…
விமலிடம் கட்டுநாயக்கவில் விசாரணை
ஐரோப்பிய நாட்டுக்கு செல்வதற்காக இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிடம் சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டுள்ளது.
