News
நவீன ஸ்மார்ட் வசதி கொண்ட சுப்பர்சோனிக் விமானம் இலங்கைக்கு
இந்தியா இலங்கைக்கு புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இந்திய உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தனது புதிய டெஜாஸ் சுப்பர்சோனிக் போர் விமானங்களையே இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. இலங்கையின் விமானப்படை தளபதி உயர்மார்சல் கஹான் புளத்சிங்க பாகிஸ்தானிற்கு அடுத்த மாதம் விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தானின் ஜெட் விமானங்கள் குறித்து ஆராயவுள்ள நிலையிலேயே இந்தியாவின் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப்படையின் பழைய விமானங்களிற்கு பதில் புதிய விமானங்களை வாங்குவதற்காகவே பாகிஸ்தானிற்கான இந்த விஜயம் நடைபெறவுள்ளதாக தகவல்கள்…
ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை
ஹம்பாந்தோட்டை – அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
“போர்க்குற்றத்தில் என்னை சிக்கவைக்க தீவிர முயற்சி”
என்னையும் எமது இராணுவத்தையும் காட்டிக்கொடுத்து ஆட்சியை தக்கவைக்கவே ரணில் முயற்சிக்கின்றார். போர்க் குற்றத்தில் என்னை சிக்கவைக்கும் அதி தீவிர முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. ஆனால் இராணுவத்தை காப்பாற்ற எந்த கூண்டிலும் ஏறத் தயாராக உள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறை இருக்கும் போது சர்வதேச தரப்பை அழைப்பது எமது நீதிச் சேவையை அவமதிக்கும் செயலாகும். இதற்கு எனது முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். போர்க்குற்றத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
ஜனாதிபதி செயலகத்தினுள் CSN அலுவலகம் கண்டுபிடிப்பு
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தினுள் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றும் இயங்கி வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்த அலுவலகம் ஜனாதிபதி சர்வதேச ஊடகப் பிரிவு என்ற பெயரில் இயங்கிவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ஷ, யோஷித்த ராஜபக்ஷ, மற்றும் சில யுவதிகள் மட்டுமே இங்கு வந்துபோயுள்ளனர். எனினும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுடன் எந்த வகையிலும் தொடர்புபடாத நிலையில் இயங்கி வந்த இந்த அலுவலகத்தின் மூலம் நடைபெற்ற…
பிரபாகரனுக்கு அஞ்சியே பதுங்குகுழி அமைத்தோம்: மஹிந்த
ஜனாதிபதி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளமை நிலக்கீழ் சொகுசுமாளிகையல்ல அது பிரபாகரனின் தாக்குதலுக்கு அஞ்சி அமைக்கப்பட்ட பதுங்குகுழியாகும். விடுதலைப் புலிகள் பலமடைந்திருந்த காலத்தில் எம்மை பாதுகாக்கவேண்டிய தேவை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் முக்கியபாதுகாப்பு கலந்துரையாடல்களையும் முக்கிய தீர்மானங்களையும் நாம் ஜனாதிபதி மாளிகையிலேயே மேற்கொள் வோம். ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டால் இந்த பதுங்குகுழியிலிருந்து செயற்படும் நோக்கத்திற்காகவே இதனை உருவாக்கினோம் என்று முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்…
சிறுவர் பாதுகாப்புக்கு விசேட ஜனாதிபதி செயலணி
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் நாடுதழுவிய ரீதியில் செயற்படக் கூடியதான விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிட்டம்புவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, வடக்கின் வித்யாவும் தெற்கின் சேயாவும் அநியாயமாக சிதைக்கப்பட்டதை விட ஒரு சில ஊடகங்கள் அவர்களை மோசமாக சிதைத்துள்ளன. ஊடகங்கள் போன்றே குறித்த மரணங்களின் போது ஒருசிலர் தங்கள் மொபைல் போனில் போட்டோக்களை எடுத்து…
நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு ஆட்படுகின்றனர்!
ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆய்வின்படி போதைவஸ்துக்கு ஆட்பட்டுள்ள ஒரு லட்சம் பேரில் 60 ஆயிரம் பேர் இளைஞர்களாவர். இந்தநிலையில் போதைவஸ்து கடத்தல்காரர்கள் நாட்டின் நீதியில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பாரியளவில் போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை போதைவஸ்து பாவனையாளர்களை புனர்வாழ்வுக்கு…
தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போகிவிட்டது -சஜித் பிரேமதாச
– அஸ்ரப் ஏ சமத் – கடந்த கால ஆட்சியில் இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்க வில்லை கடந்த ஆட்சியாளா்களது ஆட்சி மற்றும் சர்வதிகாரம், களவு, முறைகேடுகளை சரியான சத்தியமாக எழுதுவதற்கும் தமது பேனையை பாவிப்பதற்கும் முடியாமல் போகிவிட்டது. அவ்வாற ஊடகவியலளா்கள் தாக்கப்பட்டனா், லசந்த விக்கிரமரத்தின கொலை செய்யப்பட்டாா், ஊடகவியலாளா் எக்கிலியகொட கடத்தப்பட்டு காணாமல் போனாா். சில ஊடக தொழிற்சங்க உறுப்பிணா்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனா். இவற்றை செய்தவா்கள், இவற்றுக்கு கட்டளை வழங்கியவா்கள் எல்லாம் இந்த நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்படல்…
அமைச்சா் மஹிந்த அமரவீர வாழைச்சேனை விஜயம்
– அஸ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மற்றும் வட்டவான் இறால் பன்னைக்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் வருகை தந்து மீன்பிடியாளா்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஆரயாப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படடது. இதில் இறால் பன்னையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சா்களினால் ஆராயப்பட்டது இவர்களுக்கான ஒரு காரியாலயம் அமைக்கப்பட வவேணடும் என பிரதி அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அடுத்த வருடம் அமைத்து தருவதாக…
றிஷாதின் ஆதங்கமும் சம்மந்தனின் மழுப்பலும்
– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. அகதி என்ற அவல முத்திரை குத்தப்பட்ட சமுகமாகவும் உள்நாட்டுக்குள்ளேயே 25 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் சமுகமாகவும் இந்த உலகில் இருக்கும் ஒரே ஒரு சமுகமென்றால் அது இலங்கையில் வாழும் வடமாகாண முஸ்லிம்கள் மாத்திரமே. வடமாகாண முஸ்லிம் அகதிகளுக்காக அஷ்ரப் தொட்டு இன்று றிஷாத் பதியுதீன் வரை அயராது உழைத்து வருவதை இந்த நாடே அறியும். அதிலும் றிஷாதின் அரசியல் பிரவேசம்…
முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராகவும் செயற்பட இடமளிக்க வேண்டாம் – அமைச்சர் றிஷாத்
-சுஐப் எம். காசிம்- எந்தவிதமான குற்றமுமிழைக்காமல் துரத்தப்பட்ட வடபுல அகதி முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என அமைச்சர் றிசாத் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார். வடபுல முஸ்லிம்கள் தமது பரம்பரைப் பூமியிலிருந்து விரட்டப்பட்டு 25 ஆண்டுகள் கழிந்து விட்டன. இன்னுமே அகதி முகாம்களில் அல்லல்பட்டு வாழும் இந்த மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த அரசும் உருப்படியான திட்டங்களை வகுக்கவில்லை. சர்வதேசமோ, ஜெனீவாவோ, ஐ.நாவோ இந்த மக்கள்…
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மருந்து கண்டுபிடிப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தினால் பாம்பு கடிக்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் பலனாக இந்த மருந்து கண்டு பிடிக்கப்பட்டதாக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்தார். பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட சிரேஷ்ட பேராசிரியர் தம்மிக கவரம்மான உட்பட்ட குழுவினரால் இந்த புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அறிமுகப்படுத்துவதால் பல பிரதிபலன்கள் கிடைக்கும் என்று பேராசிரியர் உபுல் திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
