News
முஸ்லிம்களின் தொழுகையில், கலந்துக்கொண்ட கனேடிய பிரதமர்
முஸ்லிம்களின் தொழுகையில் கலந்துக் கொண்ட ‘கனடா பிரதமர்’ ஜஸ்டின்..! A video documenting Canadian Prime Minister Justin Trudeau’s visit to a mosque in Canada has recently emerged, showing him joining Muslim worshipers for evening prayers during Ramadan in 2013, nearly two years before he was elected, the CIJNews website reported on Monday. Trudeau was leader of the Liberal…
ஞானசாரருக்கு விளக்கமறியல்
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை (பிரகீத் எக்னலிகொடவின் மனைவி) அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சந்தேகநபரான தேரர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக சட்டத்தரணிகளால் நீதவானிடம் தெரியப்படுத்தப்பட்டது. இதன்படி ஞானசார தேரரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, ஹோமாகம பொலிஸ்…
சவூதி இளவரசர் இலங்கை வருகை
சவூதி அரேபியாவின் இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சவூத் மூன்று நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவ்விஜயத்தின் போது சவூதி இளவரசர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
‘சிங்க லே’அமைப்பைத் தடை செய்யுமாறு கோரிக்கை
‘சிங்க லே’ அமைப்பினை தடை செய்யுமாறு அரச தாதியர் சங்கத் தலைவர் சமன் ரத்னப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் உடனான சந்திப்பின் போதே சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘சிங்க லே’ , ‘தமிழே’ அல்லது ‘முஸ்லிம் லே’ போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை. 71ஆம் மற்றும் 81ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகவும் தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த மூன்று தசாப்த காலமாக போர் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் இனியும்…
காலி முகத்திடலில் அழிக்கப்பட்ட யானை தந்தங்கள்
359 ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன. காலி முகத்திடலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார். வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். குறித்த காட்டு யானை தந்தங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது….
பணிப்பெண்களுக்கான பயிற்சிக்காலம் நீடிப்பு
மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் பணிப்பெண்களின் பயிற்சிக் காலம் 40 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டுக்கு பணிப்பெண்களாக செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஆரோக்கியத்தன்மை மற்றும் அதன் கால அளவு தொடர்பாக ஆராய்ந்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக பணியகத்தின் ஊடகப்பேச்சாளர் உபுல் தேஷப்பிரிய தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இதுவரை காலமும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக தொழிலுக்கு செல்பவர்களுக்காக…
கல் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு
திருகோணமலை – சம்பூர் 7 கிராமத்திலுள்ள கிணற்றில் கல்லொன்றுடன் கட்டப்பட்ட நிலையில் மாணவனொருனின் சடலம் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் 6 வயதுடைய மாணவனுடையது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதியைச் சந்திக்கவில்லை : நாமல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உத்தியோக பூர்வமாகவோ அல்லது உத்தியோகப்பூர்வமற்ற வகையிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தித்திருக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவுக்கும் நாமல் ராஜபக் ஷவுக்கும் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த வாரம் இடம் பெற்றுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. குறித்த செய்தியில், தனது குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு வகையான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஐந்தாறு விசாரணைகளை எதிர்கொண்டுவிட்டதாகவும் நாமல் ரரஜபக்ஷ மைத்திரிக்கு…
சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வு : ஐவர் கைது
– க.கிஷாந்தன் – பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்று (25) இரவு வேளையில் ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டிருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்டு…
மகளுக்கு நீச்சல் கற்றுத் தரும் மார்க் ஜூக்கர்பெர்க்
தன் மகள் மேக்சின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு அண்மையில் பேஸ்புக்கையே கலக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கவும் தொடங்கி விட்டார். இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை “மேக்சிற்கு இதுதான் முதல் நீச்சல். இதை அவள் மிகவும் விரும்பினாள்” என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதை மார்க்கைப் பின் தொடரும் 4.8 கோடி பேரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். மார்க் படிக்கிறாரோ இல்லையோ புகைப்படத்திற்கு கீழே சோ…
“எனது கழுத்தை அறுத்து உயிர்துறப்பேன்” – மஹிந்த
அமெரிக்க வங்கிகளில் எனது பெயரில் ஒரு டொலரேனும் வைப்பிலிடப்பட்டுள்ளதை நிரூபித்தால் “எனது கழுத்தை அறுத்துக் கொண்டு உயிர்துறப்பேன்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எம்.பி. ரோஹித அபே குணவர்தனவின் பாணந்துறையில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதியும், குருணாகல் மாவட்ட எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, 2015 ஜனவரி 09 ஆம் திகதி…
ஞானசார தேரர் சற்றுமுன்னர் கைது
ஊடகவியலாளர் பிரகீத் எக்னளியகொடவின் மனைவிக்கு நீதிமன்றில் வைத்து அச்சுறுத்தியது, ஏசியது ஆகிய குற்றச்சாட்டுகளில் ஹோமாகம நீதிமன்றால் நேற்று (25) பிடியாணை உத்தரவு பிடிக்கபட்டு இன்று காலை 10.00 மணியளவில் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சரணடைந்த நிலையில், அவர் கைது செய்யபட்டுள்ளதாக போலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. தற்போது கைது செய்யபட்டு போலிஸ் காவலில் இருக்கும் ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர் படுததபடுவார் எனவும் போலிஸ் ஊடகப்பிரிவு மேலும்…
